அணு ஆயுதத்தை கூட பயன்படுத்துவோம்.. ஜாக்கிரதை.. இந்தியாவிற்கு வார்னிங் தந்த பாகிஸ்தான் தலை
இஸ்லாமாபாத்: இந்தியா மீது அணு ஆயுதம் உட்பட பல வகையான ஆயுதங்களை பயன்படுத்த கூட பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று ரஷ்யாவிற்கான பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜமாலி எச்சரித்து உள்ளார்.
ரஷ்யாவிற்கான பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜமாலி விடுத்த எச்சரிக்கையில், இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தை பெரிதாக்கி வருகின்றன. இதில் தேவையின்றி பாகிஸ்தான் மீது பழி போடுகிறார்கள். அது தவறு. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவதற்கு தேவையின்றி திட்டங்களை வகுக்கிறார்கள்.
லீக்கான ஆவணங்களின் படி பார்த்தால் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்த போகிறது. இந்தியாவின் படைகள் பாகிஸ்தானில் சில செக்டார்களில் தாக்குதல் நடத்த திட்டங்களை வகுக்கின்றனர். இதற்கான ஆவணங்கள் கசிந்து உள்ளன. இந்தியா எங்களை தாக்க கூடாது. எங்களை தாக்க நினைத்தால் நாங்கள் திருப்பி தாக்குவோம்.
அது பலமுனை தாக்குதலாக இருக்கும். யாருக்கு பலம் அதிகம் உள்ளது என்பது பெரிய விஷயம் இல்லை. இந்தியா மற்றும் பாகிஸ்தானைப் பொறுத்தவரை, எண்ணிக்கை பலம் குறித்த இந்த விவாதத்தில் நாங்கள் ஈடுபட விரும்பவில்லை. மரபுவழி மற்றும் அணுசக்தி ஆகிய இரண்டிலும் முழு அளவிலான சக்தியையும் நாங்கள் பயன்படுத்துவோம். அதற்கு தயாராகவே இருக்கிறோம், என்று ரஷ்யாவிற்கான பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜமாலி எச்சரித்து உள்ளார்.
ஏற்கனவே பாகிஸ்தான் எல்லையில் ரோந்து பணிகளை மேற்கொள்ள இந்திய கடற்படையின் chopperகள் அதாவது ஹெலிகாப்டர்கள் களமிறக்கப்பட்டு உள்ளன. கடந்த 4 மாதங்களாக அங்கே ரோந்து நடக்காமல் இருந்தது.

இப்போது இலகு ரக நீண்ட தூரம் பயணிக்கும் திறன் கொண்ட ரோந்து ஹெலிகாப்டர்களை களமிறக்கி உள்ளனர். ரோந்து பணிகளை ஆக்டிவேட் செய்யுங்கள் என்று பாதுகாப்பு துறை உத்தரவிட்டதால் பாதுகாப்பு பணியில் கடற்படையும் களமிறங்கி உள்ளது.
காம்பாட் ரெடி
இது தொடர்பாக முன்னாள் ராணுவ வீரர் மேஜர் மதன் குமார் அண்ணாமலை வாரியர்ஸ் என்ற பக்கத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், இதன் சூத்திரதாரி அசிம் முனீர். அவர் ராணுவ தளபதி. அவர் இருக்கும் இடம் ராவல்பிண்டி. அதாவது ராவல்பிண்டிதான் ராணுவ தலைமையகம் உள்ளது. இந்த ராவல்பிண்டியை தான் இந்தியா தாக்க வேண்டும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்கினால் வேலைக்கு ஆகாது. பாகிஸ்தான் பஞ்சாப்பில் தாக்க வேண்டும்.
சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் சிந்துவில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்கினால் வேலைக்கு ஆகாது. பாகிஸ்தான் பஞ்சாப்பில் அடிக்காத வரை, ராவல்பிண்டியில் அடிக்காத வரை எதுவும் ஆகாது. அதற்கெல்லாம் நம்மிடம் பவர் இருக்கிறது. ராவல்பிண்டியில் தான் தாக்குதல் என்பது இருக்க வேண்டும். பிரம்மோஸ்க்கு பதிலடி தர அவர்களிடம் ஆயுதங்கள் இல்லை.. தடுப்பு அரண்கள் இல்லை என்பதை மறக்க வேண்டாம்.
நம்மிடம் ஆப்ஷன் நிறைய உள்ளது. முப்படை தளபதிகள் காம்பாட் ரெடி மோடில் உள்ளனர். போருக்கு செல்லும் முந்தைய நிலை இது என்று மேஜர் மதன் குமார் கூறி உள்ளார்.
முப்படைகள் குவிப்பு
இந்திய எல்லையில் படைகள் குவிக்கப்பட்டு வருகிறது. எந்த நேரமும் தாக்குதல் நடத்தப்படலாம் என பாக். பதற்றம் அடைந்து வரும் நிலையில் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த வாரம் 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ஆயுதப்படைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி முழு செயல்பாட்டு சுதந்திரத்தை வழங்கி உத்தரவிட்டுள்ளார். டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் பிரதமர் கூட்டிய உயர்மட்டக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
90 நிமிடம் நீடித்த இந்தக் கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் மற்றும் முப்படைத் தளபதிகள் - ராணுவத் தலைமை ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படைத் தலைமை அட்மிரல் தினேஷ் கே திரிபாதி மற்றும் விமானப்படைத் தலைமை மார்ஷல் அமர் ப்ரீத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தீவிரவாதத்திற்கு அழிவு தரும் அடியை கொடுக்க உங்களுக்கு அதிகாரம் உள்ளது. இதற்கான முழு அதிகாரத்தை உங்களுக்கு தருகிறோம். இந்திய ஆயுதப் படைகளின் திறன்களில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது,. உங்களுக்கு ராணுவ தாக்குதல் திட்டமிடலில் முழு அதிகாரம், சுதந்திரத்தை தருகிறோம்.. என்று பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications