Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கதவுக்கு பின்னால் நீதி கதறி அழுகிறது".. SIR வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி வைத்த வாதம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ‛‛கதவுக்கு பின் நின்று நீதி கதறி அழும்போதும் எங்களுக்கு எங்கும் நீதி கிடைக்கவில்லை என்று நாங்கள் நினைக்தோம். ஏனென்றால் நாங்கள் தேர்தல் ஆணையத்துக்கு 6 கடிதங்களை எழுதினேனாம். ஆனால் எந்த பதிலும் வரவில்லை. கொத்தடிமை போல் உணர்ந்தோம்'' என்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்க்கும் வழக்கில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வாதம் வைத்து பரபரப்பை கிளப்பினார்.

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் தலைவராக இருக்கும் மம்தா பானர்ஜி முதல்வராக செயல்ட்டு வருகிறார். தமிழகத்தை போல் விரைவில் மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

west-bengal-cm-mamata-banerjee-will-appear-before-supreme-court-today-and-argue-in-sir-case

அந்த மாநிலத்தை எடுத்து கொண்டால் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளது காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்தாலும் நேரடி போட்டி என்பது திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக இடையே தான் இருக்கிறது.

west-bengal-cm-mamata-banerjee-will-appear-before-supreme-court-today-and-argue-in-sir-case

58 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

இந்நிலையில் தான், தமிழகத்தை போல் மேற்கு வங்க மாநிலத்திலும் வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்த பணியை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதற்கு மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்

இந்த பணியை நிறுத்த வேண்டும் என்று அவர் கூறினார். ஆனால் தொடர்ந்து பணி நடந்ததோடு, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மொத்தம் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி 1 கோடிக்கும் மேலானவர்களுக்கு ஆவணங்கள் கோரப்பட்டுள்ளது.

மம்தா மனுத்தாக்கல்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கம் சார்பில் பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். குறிப்பாக மம்தா பானர்ஜி சார்பில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 32-வது பிரிவின் கீழ் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த தீவிர பணிக்கு எதிராக ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அதில் ‛‛2026ல் நடத்தப்படும் சட்டசபை தேர்தல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியின் அடிப்படையில் திருத்தப்பட்ட புதிய வாக்காளர் பட்டியலை வைத்து நடத்தாமல் அதற்கு முந்தைய வாக்காளர் பட்டியலை வைத்தே நடத்த வேண்டும்'' என்று அவர் கூறியுள்ளார்.

மம்தா பானர்ஜி வாதம்

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பக்சி, விபுல் பான்சோலி அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. இந்த வழக்கில் மம்தா பானர்ஜி ஆஜராகி வாதாட அனுமதி கேட்டார். அதன்படி மம்தா பானர்ஜிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற வழக்குகளை எடுத்து கொண்டால் மனுதாரரே வழக்கறிஞர் போல் வாதாட அனுமதி உள்ளது. இந்நிலையில் தான் வழக்கின் பின்னணி பற்றி தனக்கு நன்கு தெரியும் என்பதால் தனிப்பட்ட முறையில் தனது மனு தொடர்பான வழக்கில் வாதாட விரும்புவதாக மம்தா பானர்ஜி விருப்பம் தெரிவித்து இருந்தார். அதன்படி இன்று மம்தா பானர்ஜி உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினர்.

கதவுக்கு பின்னால் நீதி கதறுகிறது

மம்தா பானர்ஜி வைத்த வாதம் வருமாறு: ‛‛ உங்களின் கருணையான நடவடிக்கைக்கு நான் நன்றியுள்ளவளாக இருப்பேன். கதவுக்கு பின் நின்று நீதி கதறி அழும்போதும் எங்களுக்கு எங்கும் நீதி கிடைக்கவில்லை என்று நாங்கள் நினைக்தோம். ஏனென்றால் நாங்கள் தேர்தல் ஆணையத்துக்கு 6 கடிதங்களை எழுதினேனாம். ஆனால் எந்த பதிலும் வரவில்லை. கொத்தடிமை போல் உணர்ந்தோம்.

திருமணம் முடிந்தால்...

தேர்தல் பணி பார்வையாளர்களிடம் விளக்கம் கேட்காமல் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்படுகிறது. ஒரு பெண் திருமணமாகி தனது கணவர் வீட்டுக்கு சென்ற பிறகு தந்தை பெயரை நீக்கி கணவர் பெயரை வழங்கினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மறுக்கப்படுகிறது.

ஆதாரங்களை காட்ட முடியும்

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க ஆதார் அட்டையை தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது. வாக்காளர் பட்டியில் பெயர் நீக்கவே ‛சார்' நடவடிக்கை நடத்தப்படுகிறது; பெயர் சேர்க்க அல்ல. இதனை தான் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதற்கான ஆதாரங்களை என்னால் காட்ட முடியும். பல முன்னணி பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி உள்ளது.

சிலர் சொந்தமாக வீடு வாங்கி வேறு இடத்துக்கு சென்றுள்ளனர். அவர்களின் பெயர்களும் நீக்கப்படுகிறது. உங்களின் உத்தரவுகள் மீறப்படுகிறது. ஆதார் கார்டு இருந்தும் இன்னொரு ஆவணங்களை கேட்கின்றனர். ஆதாரை ஏற்க மறுகின்றனர்.

2 மாத பணியை...

2 ஆண்டுகள் ஆகும் ஒரு வேலையை இரண்டு மாதங்களில் செய்ய விரும்புகின்றனர். மக்கள் வீட்டில் இல்லாதபோது இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது. பல வாக்குச்சாவடி நிலைஅலுவலர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த விஷயத்தில் மேற்குவங்க மாநிலம் குறிவைக்கப்படுகிறது.

வாக்குரிமையை பாதுகாக்க...

பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து மைக்ரோ அப்சர்வர்ஸ் நியமனம் செய்யப்பட்டு பெயர்கள் நீக்கப்படுகிறது. முதற்கட்டமாக 58 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் இறந்தவர்கள் என்று சொல்கின்றனர்.

இந்த தேர்தல் ஆணையம்.. மன்னிக்கவும் ‛வாட்ஸ்அப்'கமிஷன் இந்த வேலைகளை செய்கிறது. தயவு செய்து மக்களின் வாக்கு உரிமைகளை பாதுகாக்க வேண்டும்'' என்று வாதம் வைத்தார். இந்த வாதங்களை கேட்ட நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டது.

சட்டம் படித்த மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜியை எடுத்து கொண்டால் அவர் அடிப்படையில் வழக்கறிஞர். கொல்கத்தாவில் உள்ள யோகேஷ் சந்திர சவுத்ரி சட்ட கல்லூரியில் அவர் சட்டம் பயின்றார். பிறகு வழக்கறிஞர் பயிற்சியையும் முடித்தார். அதன்பிறகு தான் அவர் அரசியலுக்குள் நுழைந்தார். இதனால் மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தின் நடைமுறைகளையும், மரபுகளையும் நன்கு அறிந்து வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணையத்துடன் மோதல்

முன்னதாக, மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை நிறுத்த கோரி மம்தா பானர்ஜி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை சந்தித்துப் பேசினார். அப்போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. வாக்குவாதம் நடந்தது. இதையடுத்து மம்தா பானர்ஜி வெளியேறினார்.

இதுபற்றி மம்தா பானர்ஜி, ‛‛மேற்கு வங்கத்தில் நடைபெறும் எஸ்ஐஆர் பணியால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சுமார் 58 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அவர்களில் சிலர் தற்போது டெல்லிக்கு வந்துள்ளனர்.

பதவி நீக்க மம்தா மூவ்

தேவைப்பட்டால் எஸ்ஐஆர் பணியால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களை டெல்லிக்கு அழைத்து வருவோம். எஸ்ஐஆர் பணியை நிறுத்தக் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு இதுவரை 6 கடிதங்களை அனுப்பி உள்ளேன். இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.

இதன் காரணமாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நேரில் சந்தித்து முறையிட்டோம். அப்போதும் உரிய பதில் கிடைக்கவில்லை. இப்போதைய சூழலில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி தீர்மானம் கொண்டு வர விரும்புகிறோம். ஆனால், எங்களிடம் போதிய எம்.பி.க்களின் பலம் இல்லை. எனவே, ஒத்த கருத்துடைய கட்சிகளிடம் ஆலோசித்து வருகிறோம்'' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+