மேற்கு வங்க சட்டசபை தேர்தல் 2026: 142 தொகுதிகளில் கடைசி கட்ட தேர்தல்.. 92.4 % வாக்குப்பதிவு

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலின் இறுதிக்கட்டப் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. காலை 7 மணிக்கு 142 தொகுதிகளில் தொடங்கிய இந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் மாலை 6 மணி வரை நடந்தது. இதில் மொத்தம் 92.4 சதவீத வாக்குகள் பதிவகியுள்ளன. மேற்கு வங்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.

இந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது கோட்டையான பவானிபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் (TMC) எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக இந்தத் தொகுதி அமைந்துள்ளதால், ஒட்டுமொத்தக் கட்சியும் இன்று மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளது.

மறுபுறம், பாஜகவின் முக்கிய முகமான சுவேந்து அதிகாரி, நந்திகிராம் தொகுதியில் களம் காண்கிறார். மம்தா பானர்ஜிக்கும் பாஜகவுக்கும் இடையிலான இந்த நேரடிப் போட்டி, தேர்தல் களத்தை அனல் பறக்கச் செய்துள்ளது. திங்கட்கிழமை மாலை பிரசாரம் ஓய்ந்த நிலையில், இரு தரப்பினரும் தங்களின் வெற்றி உறுதி என நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

West Bengal Election 2026 Phase 2 Mamata Banerjee vs Suvendu Adhikari in High-Stakes Battle for 142 Seats

ஐபிஎஸ் அதிகாரி அஜய் பால் சர்மா: வெடித்த புதிய சர்ச்சை

இன்னொரு பக்கம் 'என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்' என்று அழைக்கப்படும் ஐபிஎஸ் அதிகாரி அஜய் பால் சர்மாவின் நியமனம் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இவரை தேர்தல் ஆணையம் மேற்கு வங்கத்தில் பணியமர்த்தியுள்ளது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர்கள், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் ஃபால்டா பகுதியில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அஜய் பால் சர்மா தங்களது கட்சித் தொண்டர்களை மிரட்டுவதாக திரிணாமுல் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்யவே அவர் 'பார்வையாளராக' நியமிக்கப்பட்டுள்ளார் என்று பாஜக விளக்கம் அளித்துள்ளது. கடந்த காலங்களில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒருவரை எப்படி நியமிக்கலாம் என்று திரிணாமுல் கேள்வி எழுப்பியுள்ளதால், தேர்தல் களம் பதற்றமாகவே காணப்படுகிறது.

மம்தாவுக்கு கொலை மிரட்டலா? - உச்சக்கட்ட மோதல்

தேர்தல் பரபரப்புக்கு மத்தியில், பாஜக செய்தித் தொடர்பாளர் அஜய் அலோக், முதல்வர் மம்தா பானர்ஜிக்கு "கொலை மிரட்டல்" விடுத்ததாக திரிணாமுல் காங்கிரஸ் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரம் இரு கட்சிகளுக்கும் இடையே இருந்த கசப்புணர்வை மேலும் அதிகரித்துள்ளது. தேர்தல் ஆணையத்திடம் இது குறித்து முறையிடவும் திரிணாமுல் திட்டமிட்டுள்ளது. இத்தகைய காரசாரமான விவாதங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு இடையே இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

புள்ளிவிவரங்களும் எதிர்பார்ப்புகளும்

கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் 91.78% வாக்குகள் பதிவாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதே போன்றதொரு விறுவிறுப்பு இன்றைய இரண்டாம் கட்டத்திலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்த இடங்கள்: 142

மொத்த வாக்காளர்கள்: 3.22 கோடிக்கும் அதிகம்

வேட்பாளர்கள் எண்ணிக்கை: 1,448 (ஆண்கள்: 1,228; பெண்கள்: 220)

தேர்தல் ஆணையம் தரப்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்தியப் பாதுகாப்புப் படையினர் மாநிலம் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.

மே 4: வாக்கு எண்ணிக்கை

மேற்கு வங்கத்தின் இந்த தேர்தல் முடிவுகள், தமிழ்நாடு, கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி மாநிலத் தேர்தல் முடிவுகளுடன் சேர்த்து வரும் மே 4-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. அன்று மேற்கு வங்கத்தின் அரியணையில் அமரப்போவது 'தீதி'யா அல்லது 'தாமரை'யா என்பது தெரிந்துவிடும்.

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலின் இறுதிக்கட்டப் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. காலை 7 மணிக்கு 142 தொகுதிகளில் தொடங்கிய இந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் மாலை 6 மணி வரை நடந்தது. இதில் மொத்தம் 92.4 சதவீத வாக்குகள் பதிவகியுள்ளன. மேற்கு வங்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+