மேற்கு வங்கத்தில் பதற்றம்.. வாக்குப்பதிவுக்கு நடுவே வெடித்த மோதல்! போலீஸ் தடியடி!
டெல்லி: மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் ஹுமாயூன் கபீர் ஆதரவாளர்களுக்கும் இடையே வெடித்துள்ள மோதல் காரணமாக பதற்றம் நிலவி உருவாகியிருக்கிறது.
நேற்றிரவு முதல் இரு தரப்பினர் சண்டையிட்டு வருகின்றனர். நேற்று முர்ஷிதாபாத்தில் சிவநகர் ஆரம்பப் பள்ளி அருகே நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டதில் ஒருவர் காயமடைந்தார். இதனையடுத்து இன்றும் இரு தரப்பினர் கைகலப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

குண்டு வீச்சால் பாதிக்கப்பட்ட நபர், இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் ஹுமாயூன் கபீர் (AUJP நிறுவனர்) கட்சியினர் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த மோதல் காரணமாக முர்ஷிதாபாத்தில் பதற்றம் நிலவி வருகிறது. இன்று காலை இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடிக்கும் சூழல் ஏற்பட்ட நிலையில், நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தினர். மோதல் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஹுமாயூன் கபீர், தேர்தல் அமைதியாக நடப்பதாக தெரிவித்துள்ளார்.
கலவரக்காரர்கள், டொம்கல் மற்றும் ராய்பூர் கிராமங்களில் வாக்காளர்கள் மிரட்டப்பட்டதாகவும், அவர்கள் வாக்குச்சாவடிக்குச் செல்லவிடாமல் தடுக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. ஆயுதம் ஏந்திய நபர்களின் நடமாட்டம் காரணமாக மக்கள் அச்சமடைந்த நிலையில், தேர்தல் ஆணையம் கூடுதல் பாதுகாப்பை வழங்கி, மக்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் சென்றது.
கலவரம் ஒருபுறம் இருக்க, மறுபுறம் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கிறது. பெல்தங்கா, கண்டி, சம்ஷேர்கஞ்ச் ஆகிய இடங்களிலும், நந்திகிராம், மால்டா, கூச் பெஹார் போன்ற மற்ற மாவட்டங்களிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்ததால் வாக்குப்பதிவு தாமதமானது. இது குறித்து தேர்தல் ஆணையப் பிரதிநிதிகள் சரியான விளக்கம் அளிக்கவில்லை என்று காங்கிரஸ் வேட்பாளர் சஞ்சய் அதிகாரி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் முதற்கட்டமாக இன்று 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், காலை 11 மணி நிலவரப்படி 41.11% வாக்குகள் பதிவாகியுள்ளன.
-
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications