"கெஜ்ரிவால் கைது ஏன்.." வந்து விழுந்த கேள்வி.. 2 நொடி கேப் விட்டு அன்னா ஹசாரே சொன்ன பதில் இதுதான்!
டெல்லி: மதுபான கொள்கை விவகாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக அன்னா ஹசாரே கருத்துகளைக் கூறியுள்ளார்.
டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் நேற்று சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரை கைது செய்தனர். மதுபான கொள்கை விவகாரத்தில் அவருக்குத் தொடர்பு உள்ளதாகக் கூறி கைது செய்தனர்.

அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே கெஜ்ரிவால் கைது தொடர்பாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கருத்துகளைக் கூறியுள்ளார்.
அன்னா ஹசாரே: மகாராஷ்டிராவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் கெஜ்ரிவால் கைது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அன்னா ஹசாரே, "'மதுவைத் தவிர்க்க வேண்டும் என்று நான் பலமுறை கூறி இருக்கிறேன். இருப்பினும், அதிகம் வேண்டும் என்பதற்காக அவர்கள் இந்த கொள்கையை உருவாக்கி உள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.
மதுபான கொள்கை விவகாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நிலைப்பாடு குறித்து சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே ஏற்கனவே கடுமையான கருத்துகளைக் கூறி இருக்கும் நிலையில், இப்போது அவர் இதைக் கூறியுள்ளார். கெஜ்ரிவாலுக்கு ஆதரவாகவும் அவரது கைதை கண்டித்தும் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் கருத்துகளைக் கூறி இருக்கும் நிலையில், அன்னா ஹசாரே நேர்மாறாக கருத்துகளைக் கூறியுள்ளார். ஆம் ஆத்மி கட்சி மதுபானக் கொள்கையை உருவாக்கியே இருக்கக் கூடாது என்றும் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
"ஆதாரம் இருக்கு!" அமலாக்க துறையையே உளவு பார்த்த கெஜ்ரிவால்! கைதில் இருந்து தப்பிக்க திட்டம்?
இப்படிச் செய்யவே கூடாது: அவர் மேலும் கூறுகையில், "என்னுடன் இணைந்து பயணித்த அரவிந்த் கெஜ்ரிவால் இப்படிச் செய்திருக்கக் கூடாது. மதுவுக்கு எதிராக என்னுடன் சேர்ந்து குரல் கொடுத்தவர். இன்று அவரே மதுபானக் கொள்கையைத் தயார் செய்துள்ளார் என்பதில் நான் மிகவும் வருத்தப்படுகிறேன். ஆனால் இப்போது நம்மால் என்ன செய்ய முடியும்? என்ன நடந்தாலும் சட்டப்படி நடக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
2011ஆம் ஆண்டு ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடந்த நிலையில், அதன் முகமாக இருந்தவர் அன்னா ஹசாரே. அவரது தலைமையில் தான் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றது. இதில் தீவிரமாகப் பங்கேற்ற கெஜ்ரிவால் உள்ளிட்டோர் இணைந்து தான் ஆம் ஆத்மி கட்சியை உருவாக்கினார்கள். அன்னா ஹசாரே தேர்தல் அரசியலில் போட்டியிட மாட்டேன் என கூறினாலும் அவர் கெஜ்ரிவால் கட்சிக்கு வாழ்த்துகளை வழங்குவதாகக் கூறியிருந்தார்.
முதல்முறை இல்லை: இருப்பினும், அதன் பின்னர் பல நேரங்களில் ஆம் ஆத்மி நடவடிக்கைகளைக் கண்டித்துள்ளார். குறிப்பாக இந்த மதுபான கொள்கை விவகாரத்திலேயே அவர் ஜெக்ரிவாலை கண்டித்துள்ளார். கடந்த 2022இல் மதுபான கொள்கை விவகாரம் குறித்து அவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.
அதில் அவர், "நீங்கள் முதல்வரான பிறகு நான் கடிதம் எழுதுவது இதுவே முதல்முறை.. ஏனெனில் உங்கள் அரசின் மதுபான கொள்கை பற்றிய சமீபத்திய செய்திகளால் நான் வேதனைப்படுகிறேன். மதுவைப் போலவே அதிகாரமும் போதை தான். நீங்கள் அதிகார போதையில் இருக்கிறீர்கள் என்று தெரிகிறது" என்று கடிதத்தில் விமர்சித்து இருந்தார். இப்படிப் பல நேரங்களில் அன்னா ஹசாரே ஆம் ஆத்மி கட்சியை விமர்சித்தாலும் கூட, ஹசாரேவுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியினர் பேசியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications