"சொல் பேச்சு கேட்காதவர்.. இப்போ பாருங்க.." கெஜ்ரிவால் குறித்து கேட்டதும் கடுகடுத்த அன்னா ஹசாரே
டெல்லி: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சிறையில் இருந்த கெஜ்ரிவாலுக்கு சமீபத்தில் தான் ஜாமீன் வழங்கப்பட்டது. அவர் இப்போது சிறையில் இருந்து வெளியே வந்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து அன்னா ஹசாரே சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். கெஜ்ரிவால் கைது தவிர்க்க முடியாத ஒன்று என்றும் அன்னா ஹசாரே குறிப்பிட்டார்.
ஆம் ஆத்மி அரசு டெல்லியில் கொண்டு வந்த புதிய மதுபான கொள்கை மிக பெரிய பிரச்சினையாக மாறிவிட்டது. இந்த விவகாரத்தில் சில மாதங்களுக்கு முன்பு கெஜ்ரிவால் கைதாகி இருந்தார்.

ராஜினாமா: பல மாதம் சிறையில் இருந்த அவருக்குச் சமீபத்தில் தான் ஜாமீன் கிடைத்தது. இந்தச் சூழலில் தான் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். சிறையில் இருந்த வரை தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்த கெஜ்ரிவால் இப்போது அவர் தனது பதவியை விட்டு விலகியுள்ளார். அடுத்த டெல்லி முதல்வர் யார் என்பது இன்று அல்லது நாளை தெரிய வரும் எனத் தெரிகிறது.
அன்னா ஹசாரே: இந்தச் சூழலில் தான் திடீரென கெஜ்ரிவால் குறித்து சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். அதாவது அரசியலுக்கு வரக்கூடாது என்று கெஜ்ரிவாலிடம் நீண்ட காலத்திற்கு முன்பே அறிவுறுத்தியதாகவும், ஆனால் அவர் தனது ஆலோசனையைக் கேட்கவில்லை என்றும் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
கடந்த 2011 காலகட்டத்தில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஊழல் ஒழிப்பு போராட்டங்கள் நடந்தன. அந்தக் காலகட்டத்தில் அன்னா ஹசாரே உடன் இணைந்து கெஜ்ரிவாலும் பயணித்தது குறிப்பிடத்தக்கது.
சொன்னால் கேட்க மாட்டார்: அந்த காலகட்டத்தை நினைவு கூர்ந்த அன்னா ஹசாரே, "அரசியலுக்கு வர வேண்டாம் என்று கெஜ்ரிவாலுக்கு நான் ஏற்கனவே அட்வைஸ் செய்திருந்தேன். அவர் தனது அரசியல் எண்ணத்தை வெளிப்படுத்திய போதே.. சமூக சேவையில்தான் உண்மையான நிறைவு இருக்கிறது என்பதைப் பலமுறை விளக்கினேன். ஆனால் அவர் கேட்கவில்லை.
அரவிந்த் கெஜ்ரிவால் அரசியலுக்கு வரக்கூடாது என்று நான் தொடக்கத்தில் இருந்தே கூறி வருகிறேன். ஆனால், அவர் நான் சொல்வதைக் கேட்கவே இல்லை. இதன் காரணமாகவே இப்போது நடந்திருப்பது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. கெஜ்ரிவால் மனதில் இப்போது என்ன இருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை" என்றார்.
முதல்முறை இல்லை: அதேநேரம் கெஜ்ரிவால் குறித்து அன்னா ஹசாரே கருத்துச் சொல்வது இது முதல்முறை இல்லை. டெல்லி மதுபான கொள்கை விவாகரத்தில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட சமயத்திலேயே ஹசாரே தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
அப்போது ஹசாரே கூறுகையில், "ஒரு காலத்தில் என்னுடன் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு, மதுவுக்கு எதிராகக் குரல் கொடுத்த அரவிந்த் கெஜ்ரிவால், தற்போது மது கொள்கைகளை வகுப்பதில் ஊழல் செய்துள்ளதாகக் கைது செய்யப்பட்டுள்ளது கவலையாக இருக்கிறது. ஆனால், இதில் யாரையும் குறை செய்ய முடியாது. உப்பு தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும்" என்றார்.
டெல்லி முதல்வர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்துள்ளார். நேர்மைக்கான சான்றிதழை மக்கள் வழங்கும் வரை தானும் மணிஷ் சிசோடியாவும் முதல்வர் பதவிக்கு வரப்போவது இல்லை என்று கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதன் மூலம் டெல்லியில் முன்கூட்டியே தேர்தல் நடக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications