மத்திய பட்ஜெட் 2024.. வரி செலுத்துவோருக்கான 10 பாயிண்டுகள்.. 5வது பாயிண்டு ரொம்ப முக்கியம்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.. இதில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தன. குறிப்பாக வருமான வரியில் புதிய நடைமுறையில் சிறிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த பட்ஜெட்டில் வருமான வரி செலுத்துவோருக்கான 10 முக்கிய பாயிண்டுகள் குறித்து நாம் பார்க்கலாம்.
மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதில் வருமான வரியில் சிறிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மத்திய பட்ஜெட்டில் வரி செலுத்துவோருக்கு ஏதுவாக இருக்கும் 10 முக்கிய பாயிண்டுகள் குறித்து நாம் பார்க்கலாம்.

- டிடிஎஸ் தாக்கல் செய்யப்படுவது தொடர்பாக நிலையான ஆப்ரேடிங் நடைமுறைகளை மத்திய அரசு வெளியிடும் என்ற நிர்மலா சீதாராமன், டிடிஎஸ் தாக்கல் செய்யப்படுவதற்கான தாமதம் இனி கிரிமினல் குற்றமாகக் கருதப்படாது என்றும் அறிவித்தார்.
- சுங்க வரி தொடர்பாக அவர், "அடுத்த 6 மாதங்களில் சுங்க வரி தொடர்பாக மேற்கொள்ளப்படும். இ-காமர்ஸ் மீதான டிடிஎஸ் விகிதம் 0.1% ஆகக் குறைக்கப்படும். தொண்டு நிறுவனங்களுக்கான இரண்டு வரி விலக்கு முறைகள் ஒரே முறையாக இணைக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
- இப்போது வருமான வரி முறையில் பழைய வரி முறை, புதிய வரி முறை என்று இரண்டு வகை இருக்கிறது. அதில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் புதிய வருமான வரி முறையைத் தேர்ந்தெடுத்துள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
- மேலும், புதிய முறையைத் தேர்வு செய்பவர்களுக்கு வரி விலக்கு அதிகரிக்கப்படுவதாகவும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். புதிய வரி முறையின் கீழ் வரி செலுத்துவோருக்கு கழிவுத்தொகை ரூ. 50,000 கழிக்கப்படும். அதன்பிறகு உள்ள தொகைக்கு மட்டுமே வருமான வரி கணக்கிடப்படும். இந்த கழிவு தொகை இப்போது ரூ.50,000இல் இருந்து ரூ.75,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- புதிய முறையில் இருப்போரின் வரி முறையில் சிறிய மாற்றத்தை நிர்மலா சீதாராமன் அறிவித்தார். புதிய முறையைப் பின்பற்றுவோருக்கு ₹0- ₹3 லட்சம் வரை வருமான வரி இல்லை; ₹ 3-7 லட்சம் வரை இருந்தால் 5% வரி செலுத்த வேண்டும்; ₹7-10 லட்சம் வரை இருந்தால் 10% வரி செலுத்த வேண்டும்; ₹10-12 லட்சம் இருந்தால் 15% வரி செலுத்த வேண்டும்.. 12-15 லட்சமாக இருந்தால் 20% வரி செலுத்த வேண்டும்.. ₹15 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் இருந்தால் 30% வரி செலுத்த வேண்டும்.
- இந்த மாற்றங்களால் புதிய வரி முறையில் இருக்கும் மாத சம்பளதாரர்கள் ஆண்டுக்கு ₹17,500 வரை வரியைச் சேமிப்பார்கள் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
- அதேபோல ஓய்வூதியர்களுக்கான குடும்ப ஓய்வூதியத்தில் பிடித்தம் ₹15,000லிருந்து ₹25,000 ஆக உயர்த்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதன் மூலம் சுமார் 4 கோடி பேர் பயனடைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
- என்பிசி எனப்படும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் நிறுவனங்களின் பங்களிப்புக்கான விலக்கு வரம்பை 10 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 2 சதவீத சமன்படுத்தும் வரியையும் திரும்பப் பெற்றுள்ளது.
- வரி தொடர்பான மேல்முறையீடுகளைத் தாக்கல் செய்வதற்கான வரம்பு ஐடிஏடிக்கு ₹60 லட்சமாகவும், உயர் நீதிமன்றங்களுக்கு ₹2 கோடியாகவும், உச்ச நீதிமன்றத்துக்கு ₹5 கோடியாகவும் உயர்த்தப்படும் என்றார்.
- மேலும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் ஏஞ்சல் வரியை முழுமையாக ரத்து செய்வதாக அழர் அறிவித்தார். மேலும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி விகிதம் 40 முதல் 35 சதவீதமாகக் குறைக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.












Click it and Unblock the Notifications