டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லி போட்டுத்தந்த ரூட்? 12 மணி நேரத்தில் 2 பெரிய மூவ்.. எடப்பாடி டீமை தண்ணி குடிக்க வைத்த ஓபிஎஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: கடந்த 12 மணி நேரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இரண்டு முக்கியமான முடிவுகளை எடுத்து இருக்கிறார். அதிமுகவில் தன்னுடைய இருப்பிடத்தை தக்க வைத்துக்கொள்ள, பதவியை பாதுகாத்துக்கொள்ள வசதியாக இரண்டு முக்கியமான முடிவுகளை ஓபிஎஸ் எடுத்துள்ளார்.

Recommended Video

    Delhi சென்று சொந்த ஊர் திரும்பிய OPS-க்கு உற்சாக வறவேற்பு *Politics

    அதிமுகவில் நேற்று தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. ஓ பன்னீர்செல்வம் கலந்து கொள்ளாமலே தலைமை கழக நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். ஓ.பன்னீர் செல்வம் சொந்த ஊருக்கு சென்ற நிலையில், இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் அவசர அவசரமாக கூட்டம் நடத்தப்பட்டது..

    ஆனால் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த கூட்டத்தில் சில சீக்ரெட் விஷயங்கள் பேசப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

    கருணாநிதி ஸ்டைலில் சசி! எம்ஜிஆர் திட்டத்தை கையில் எடுத்த ஓபிஎஸ்! வெலவெலத்த எடப்பாடி! ஓ இதான் மேட்டராகருணாநிதி ஸ்டைலில் சசி! எம்ஜிஆர் திட்டத்தை கையில் எடுத்த ஓபிஎஸ்! வெலவெலத்த எடப்பாடி! ஓ இதான் மேட்டரா

    என்ன பேசி இருக்கலாம்?

    என்ன பேசி இருக்கலாம்?

    இந்த கூட்டத்தில் நேற்று மூன்று விஷயங்கள் பேசப்பட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, பொதுக்குழுவை நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்வது, அதற்காக நிர்வாகிகளுக்கு வரவேற்பு அழைப்பிதழ் அனுப்புவது. இரண்டாவது விஷயம், ஓபிஎஸ்ஸுக்கு எதிராக சட்ட போராட்டத்தை நடத்துவது. அதாவது பொதுக்குழுவை நடத்துவதற்கு ஆதரவாக சட்ட போராட்டம் நடத்துவது. மூன்றாவது விஷயம் ஓபிஎஸ்ஸை பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது.

    ஓபிஎஸ்

    ஓபிஎஸ்

    இந்த கூட்டம் நடக்கிறது என்று தெரிந்ததும் நேற்று ஓபிஎஸ் அவசர அவசரமாக சென்னை வந்தார். மதுரைக்கு காரில் வந்து அங்கிருந்து அப்படியே விமானம் ஏறி நேற்று இரவு சென்னைக்கு வந்தார். சென்னை வந்த உடனே ஓபிஎஸ் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டார். ஒரு பக்கம் நிர்வாகிகளை சந்தித்தவர், அதன்பின் சில வழக்கறிஞர்களை சந்தித்து பேசினார். சட்ட ரீதியாக என்ன செய்யலாம் என்று இவர் ஆலோசனைகளை மேற்கொண்டார்.

    12 மணி நேரம்

    12 மணி நேரம்

    இந்த நிலையில்தான் வெறும் 12 மணி நேரத்தில் முக்கியமான 2 பெரிய மூவ்களை ஓ பன்னீர்செல்வம் செய்துள்ளார். முதல் விஷயம்.. அதிமுக பொதுக்குழு தொடர்பாக கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் இவர் கேவியட் மனு தாக்கல் செய்து இருக்கிறார். கடந்த முறை அதிமுக பொதுக்குழுவை நடத்தவும், அதில் ஒற்றை தலைமை தீர்மானம் வர கூடாது, அப்படியே வந்தாலும் ஒருங்கிணைப்பாளர் முன் வரைவு தீர்மானம் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    எடப்பாடி சிக்கல்

    எடப்பாடி சிக்கல்

    இந்த நிலையில் இந்த ஒற்றை தலைமையின் தீர்மானம் ஓபிஎஸ் அனுமதி இல்லாமல் கொண்டு வரப்பட வேண்டும் என்றால் அதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும். அதோடு பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் கூட்டவும் உச்ச நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும். இதனால் கண்டிப்பாக இந்த அனுமதிகளை கேட்டு எடப்பாடி தரப்பு எப்படியும் உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்யும். அப்போது தன்னுடைய வாதத்தையும் கேட்க வேண்டும் என்று ஓபிஎஸ் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

    நடப்பதே சிக்கல்

    நடப்பதே சிக்கல்

    இதன் அர்த்தம் கண்டிப்பாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு சட்ட போராட்டம் நடக்க போகிறது என்பதாகும். அப்படி நடக்கும் பட்சத்தில்.. ஜூலை 11ம் தேதி நடக்க உள்ள பொதுக்குழுவிற்கு சிக்கல் ஏற்படும். அதற்கு இடைக்கால தடை கூட விதிக்கப்படும். ஓபிஎஸ்ஸின் கேவியட் மனு தாக்கல் அதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. இரண்டாவது விஷயம்.. அதிமுக பொதுக்குழு, தலைமைக்குழு விவகாரம் குறித்து தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு அளித்துள்ளார்.

     ஓபிஎஸ் இரண்டாவது மூவ்

    ஓபிஎஸ் இரண்டாவது மூவ்

    அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் இருக்கும் போது தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை நடத்த வேறு யாருக்கும் அனுமதி இல்லை. எனக்கு 5 ஆண்டுகள் பதவி உள்ளது. அதனால் தலைமை கழக செயலாளர் எடப்பாடி தலைமை கழக கூட்டத்தை என் அனுமதி இன்றி கூட்ட முடியாது. கட்சி நிர்வாகத்தை நிர்வகிப்பதற்கான மிக உயர்ந்த அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கே உள்ளது., எனவே நேற்று தலைமை கழக கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் மனு தாக்கல் செய்துள்ளார்.

    டெல்லி ரூட்

    டெல்லி ரூட்

    மிக சரியாக திட்டமிட்டு இந்த இரண்டு முடிவுகளை ஓபிஎஸ் எடுத்துள்ளார். ஒன்று பொதுக்குழுவிற்கு செக் வைக்கும் மூவ்.. இன்னொன்று நேற்று நடத்த தலைமை கழக கூட்டத்தை தவறு என்று அறிவிக்கும் மூவ். இரண்டிலும் சட்ட விதிகள் அவருக்கு சாதகமாக இருப்பதால் ஓபிஎஸ் இப்போது அடித்து ஆட தொடங்கி உள்ளார். வெறும் 12 மணி நேரத்தில் எடப்பாடி தீமை ஓபிஎஸ் தண்ணீர் குடிக்கவைத்துள்ளார் . அதுமட்டுமின்றி அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடக்கும் என்று அவை தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்ததற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் வழக்கு தொடுக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
    டெல்லி பயணத்திற்கு முன்பு வரை கொஞ்சம் அமைதியாக இருந்த ஓபிஎஸ் இப்போது திடீரென புதிய ரூட்டை பிடித்து.. தென் மண்டல பயணம், வழக்கு, தேர்தல் ஆணையத்தில் மனு என்று சிங்க பாதையில் செல்ல தொடங்கி இருக்கிறார்.. இதெல்லாம் அவரின் ஐடியாவா இல்லை டெல்லி பயணத்திற்கு பின் கிடைத்த கிரீன் சிக்னலா என்று கேள்விகள் அரசியல் வட்டாரத்தினர் இடையே எழுந்துள்ளது.

    English summary
    What are 2 big moves made by O Panneerselvam against Edappadi Palanisamy in last 12 hours? கடந்த 12 மணி நேரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இரண்டு முக்கியமான முடிவுகளை எடுத்து இருக்கிறார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X