டிரம்ப் ரிட்டர்ன்! இந்தியாவிற்கு இனி ஒவ்வொரு நாளும் ரொம்ப முக்கியம்! இந்த 10 விஷயத்தை நோட் பண்ணுங்க
டெல்லி: அமெரிக்க அதிபராக இன்று டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்க உள்ளார் . அவரின் வருகை உலக அரசியலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். இந்திய அரசியலிலும் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை இது ஏற்படுத்தும்.
1. அமெரிக்க அதிபர் யாராக இருந்தாலும்.. அமெரிக்காவுடன் இந்தியா ஒரே மாதிரியான உறவையே பேணும். இப்போது டிரம்ப் இந்தியாவில் பாஜகவிற்கு நெருக்கம். கமலா ஹாரிஸ் இந்தியாவிற்கு உறவு ரீதியாக நெருக்கம் என்றாலும்., ஆளும் பாஜகவின் கொள்கைக்கு எதிரானவர். எனவே டிரம்ப் வருகை ஒருவகையில் பாஜகவிற்கு வசதியாக இருக்கும்.

2. டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபராக உள்ளதால் மோடி - டிரம்ப் உறவு இந்தியாவிற்கு சாதகமாக அமையும். டிரம்பிற்கு 4 வருடங்களுக்கு முன் மோடி பிரச்சாரம் செய்ததை மறக்க வேண்டாம்.
3. ஆனால் இறக்குமதி - ஏற்றுமதி வரியில் டிரம்ப் கண்டிப்பானவர். இந்தியா இறக்குமதி வரியை குறைக்கவில்லை என்றால்.. டிரம்ப் வரியை ஏற்றுவார். இதனால் இந்தியாவில் பொருட்கள் உயரலாம்.
4. டிரம்ப் வரும் போதெல்லாம் டாலர் வலிமை அடைந்து உள்ளது. இதனால் இந்த முறையும் அப்படி நடந்தால்.. இந்தியாவிற்கு பொருளாதார சிக்கல் ஏற்படும்.
5. தங்கத்தின் விலை உயரலாம். அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி தற்போது வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்து உள்ளது. இந்த முடிவு டாலரை பலவீனப்படுத்தி உள்ளது. இதனால் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. ஸ்பாட் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு $2,592.39 ஆக உயர்ந்தது. அதே நேரத்தில் அமெரிக்க தங்கத்தின் எதிர்கால விலை அவுன்ஸ் ஒன்றுக்கு $2,598.60 ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. டிரம்ப் இதை தொடர்ந்து மேற்கொள்ள வாய்ப்புள்ளதால் தங்கத்தின் விலை உயரலாம்.
6. டிரம்ப் பிறப்பு ரீதியிலான குடியுரிமையை நீக்க வாய்ப்புகள் உள்ளன. அப்படி நீக்கும் பட்சத்தில் அது இந்தியர்களுக்கு சிக்கலாக அமையலாம்.
7. டிரம்ப் பொதுவாக கடுமையான விசா கொள்கைகளை கொண்டவர். இது இந்தியர்களுக்கு சிக்கல் ஆகும்.
8. அதோடு அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளை அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை தருவதில் டிரம்ப் ஆர்வம் கொண்டவர் என்பது இந்தியர்களுக்கு சிக்கல் ஆகலாம்.
9. ஆனால் பாதுகாப்பு ரீதியாக டிரம்ப் இந்தியாவிற்கு நெருக்கம். முக்கியமாக ஆயுத ஏற்றுமதி, சீன எதிர்ப்பில் இந்தியாவுடன் டிரம்ப் இருப்பார்.
10. சர்வதேச அளவில் போர்களை தடுப்பதில் டிரம்ப் பெயர் பெற்றவர். இதனால்.. சர்வதேச அரசியலில் போர்கள் குறையலாம். அது இந்தியாவிற்கு சாதகமாக மாறும் சூழல்கள் உள்ளன. நாம் 3ம் உலகப்போருக்கு மிக அருகில் இருக்கிறோம். எவ்வளவு அருகில் இருக்கிறோம் என்று சொன்னால் உங்களுக்கு புரியாது அந்த அளவிற்கு மிக மோசமான நிலைமை உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று நிகழ்த்திய உரையில், நான் ஆட்சிக்கு வந்ததும்.. நாளை மாலையில் இருந்து நாட்டில் இருந்து வந்தேறிகள் வெளியேற்றப்படுவார்கள். உக்ரைன் போரை நான் முடிவிற்கு கொண்டு வருவேன். மத்திய கிழக்கு நாடுகளில் போர் நடந்து வருகிறது. அந்த போர்களை நான் மொத்தமாக முடிவிற்கு கொண்டு வருவேன். மத்திய கிழக்கு நாடுகளில் கண்டிப்பாக அமைதி திரும்பும் என்று டிரம்ப் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications