அடடே.. இது தெரியாம போச்சே.. ஆகஸ்ட் 15இல் சுதந்திர தினம் கொண்டாடும் 5 நாடுகள்! இது ஆச்சரியம் தான்
டெல்லி: நமது நாட்டை போலவே ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வேறு 5 நாடுகளிலும் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. அது என்ன நாடுகள் என்பது குறித்துப் பார்க்கலாம்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. பல ஆண்டுகளாக நம்மை ஆண்ட ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்ற நாளை தான் நாம் சுதந்திர தினமாகக் கொண்டாடுகிறோம்.

இருப்பினும், ஆகஸ்ட் 15 என்பது இந்தியாவைத் தாண்டியும் பல நாடுகளில் முக்கியமான நாளாக இருக்கிறது. இந்தியாவைப் போலவே மொத்தம் 15 நாடுகள் இந்த ஆகஸ்ட் 15ஐ சுதந்திர தினமாகக் கொண்டாடுகிறது.
சுதந்திர தினம்: ஆகஸ்ட் 15 என்பது இந்தியா மட்டுமின்றி உலகில் இருக்கும் பல நாடுகளுக்கும் எதிரொலிக்கும் ஒரு முக்கிய தேதியாகும்.. நமது சுதந்திரம், இறையாண்மை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றின் கொண்டாட்டமாகவே இது பார்க்கப்படுகிறது... பிரிட்டன் காலனித்துவ ஆட்சியில் இருந்து இந்தியா பெற்ற விடுதலையை நினைவு கூரும் வகையிலேயே நாம் இந்த சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறோம். இந்தியாவைப் போலவே மேலும் 15 நாடுகள் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது.
தென் கொரியா: ஆகஸ்ட் 15ஆம் தேதி அங்கு குவாங்போக்ஜியோல் என்ற தினம் கொண்டாடப்படுகிறது. 1945ஆம் ஆண்டு ஜப்பானியக் காலனித்துவ ஆட்சியில் இருந்து கொரியத் தீபகற்பம் விடுவிக்கப்பட்டதை நினைவு கூறும் வகையில் இது கொண்டாடப்படுகிறது. இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததையும் ஜப்பான் சரணடைந்ததையும் இது குறிக்கிறது.
அன்று ஜப்பான் முழுக்க பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். கொடியேற்ற விழாக்கள், கலாச்சார நிகழ்ச்சிகள், அணிவகுப்புகள் நடக்கும்.. இந்த குவாங்போக்ஜியோல் ஜப்பான் கலாச்சாரத்தில் முக்கியத்துவ இடத்தை பிடித்துள்ளது. இது தென் கொரியாவின் இறையாண்மை, சுதந்திரத்தைக் குறிக்கிறது.
பஹ்ரைன்: பஹ்ரைன் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி Accession Day கொண்டாடப்படுகிறது. கடந்த 1971ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி ஷேக் இசா பின் சல்மான் அல் கலீஃபா மன்னராகப் பதவியேற்றதைக் குறிக்கும் வகையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி அசிஸின் டே கொண்டாடப்படுகிறது. ஷேக் இசா பின் சல்மான் ஆட்சியில் பஹ்ரைன் அதிக அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பெற்று வருகிறது. இதைக் கொண்டாடும் வகையிலேயே அங்குப் பல விழாக்கள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடத்தப்படும்.
காங்கோ குடியரசு: அதேபோல காங்கோ குடியரசிலும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.. பிரான்ஸ் ஆட்சியின் கீழ் இருந்த காங்கோ கடந்த 1960 ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரம் பெற்றது. காங்கோ நாட்டில் இந்த நாளில் அணிவகுப்புகள், பாரம்பரிய நடனங்கள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் நடைபெறும்.. சுதந்திரம் அடைந்தது முதல் காங்கோ குடியரசு எந்தளவுக்கு முன்னேறி இருக்கிறது என்பதைக் காட்ட அவர்கள் இதைப் பயன்படுத்துகிறார்கள்.

லிச்சென்ஸ்டீன்: ஐரோப்பாவில் உள்ள சிறு நாடு லிச்சென்ஸ்டீன்.. அங்கும் ஆகஸ்ட் 15ஆம் தேதி லிச்சென்ஸ்டீனின் தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது.. 1866ஆம் ஆண்டில் இளவரசர் ஜோஹன் I அதிகாரத்திற்கு வந்ததைக் குறிக்கும் வகையில் ஆகஸ்ட் 15ஆம் தேதியை இவர்கள் கொண்டாடுகிறார்கள். இந்த நாள் நாட்டில் இசைக்கச்சேரி, வானவேடிக்கைகள் ஆகியவை நடக்கும்.. இந்த நாளில் மக்கள் தங்கள் நாட்டின் பெருமை மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் பல நிகழ்ச்சிகள் நடைபெறும்.
வட கொரியா: தென் கொரியாவைப் போலவே வட கொரியாவின் தேசிய விடுதலை தினமும் ஆகஸ்ட் 15ஆம் தேதியில் கொண்டாடப்படுகிறது. கொரியத் தீபகற்பத்தில் இருந்த ஜப்பானியக் காலனித்துவ ஆட்சி 1945இல் முடிவுக்கு வந்ததையே இது குறிக்கிறது. இந்த நாளில் பல கலாச்சார நிகழ்ச்சிகள், ராணுவ அணிவகுப்புகள் சார்ந்த நிகழ்வுகள் நடக்கும்... வடகொரியக் கலாச்சாரத்தில் ஆகஸ்ட் 15 மிக முக்கிய நாளாகப் பார்க்கப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications