சீனாவை அலறவிடும் பிஎப் 7 வகை கொரோனா.. இந்த அறிகுறிகளை பாருங்க முதலில்.. ஏன் இது ரொம்பவே அபத்து?
டெல்லி: உலகெங்கும் இப்போது கொரோனா குறித்த அச்சம் மீண்டும் எழுந்துள்ள நிலையில், இந்தியாவிலும் வைரஸ் பாதிப்பைத் தடுக்க அரசு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதற்கிடையே சீனாவை அலறவிடும், புதிய பிஎப்.7 வகை கொரோனாவின் அறிகுறிகளை நாம் பார்க்கலாம்.
சீனாவில் கடந்த 2019இல் கண்டறியப்பட்ட கொரோனா, அடுத்த இரண்டு ஆண்டுகள் ஒட்டுமொத்தமாக உலகை வைத்துச் செய்துவிட்டது. கொரோனா மின்னல் வேகத்தில் பரவும் திறன் கொண்டது என்பதே வைரஸ் பாதிப்பு இந்தளவுக்கு மோசமாகக் காரணமாக அமைந்தது.
இதனால் ஒட்டுமொத்த உலக நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. உலகெங்கும் கொரோனா வேக்சின் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னரே வைரஸ் பாதிப்பு மெல்ல குறையத் தொடங்கியது.

சீனா
இப்போது ஒட்டுமொத்த உலக நாடுகளும் கொரோனா பாதிப்பில் இருந்து கிட்டதட்ட மீண்டு விட்டது. உலக மக்களும் மெல்ல இயல்பு நிலையை நோக்கித் திரும்பி வந்தனர். இந்தச் சூழலில் தான் சீனாவில் இப்போது மீண்டும் கொரோனா பரவல் உச்சம் தொட்டுள்ளது. அங்கு ஒரு நாளைக்கு சுமார் 10 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது. இதனால் அங்கு நிலைமை ரொம்பவே மோசமாக உள்ளது. மருத்துவமனைகள் அனைத்தும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறது.

உருமாறிய கொரோனா
சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க அங்கு பிஎப் 7 வகை கொரோனா தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இது உருமாறிய ஓமிக்ரான் வகை கொரோனாவின் உட்பிரிவாகும். இந்தியாவிலும் குஜராத் மற்றும் ஒடிசாவில் இந்த பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. 10க்கும் குறைவானவர்களுக்கே இந்த பாதிப்பு கண்டறியப்பட்டாலும் கூட, மத்திய அரசு இதை ரொம்பவே சீரியசாக எடுத்துக் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே ஓமிக்ரான் குறித்த தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி, வழிகாட்டுதல்களை வெளியிட்டு வருகிறது.

அறிகுறிகள்
மற்ற கொரோனா வகைகளைப் போலவே இந்த பிஎப் .7 கொரோனாவும் மேல் சுவாச பகுதியில் நோய்த்தொற்றை ஏற்படுத்துகிறது.. அதாவது மார்பின் மேல் பகுதிகள் மற்றும் தொண்டைக்கு அருகில் இதன் தாக்கம் இருக்கும். காய்ச்சல், தொண்டைப் புண், மூக்கு ஒழுகுதல் மற்றும் இருமல் ஆகியவை இந்த பிஎப் 7 வகை கொரோனாவின் பொதுவான அறிகுறிகளாக உள்ளன. சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட வயிறு தொடர்பான அறிகுறிகள் ஏற்படும். எனவே, இது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், அதை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது.

தனிமைப்படுத்த வேண்டும்
கொரோனா வைரஸை விரைவில் கண்டறிந்து, தனிமைப்படுத்த வேண்டும். அப்போது தான் வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வைக்க முடியும். இதனால் சிறு அறிகுறிகள் தென்பட்டாலேயே உடனடியாக பரிசோதனை செய்வது அவசியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உண்மையில் இந்த பிஎப்7 வகை கொரோனா மற்ற வகை கொரோனாக்களை விட மோசமான பாதிப்பை ஏற்படுத்தாது. இருப்பினும், இது அவற்றைக் காட்டிலும் மிக வேகமாக பரவும் என்பதே இதில் அச்சுறுத்துவதாக உள்ளது. இதன் மூலம் குறைந்த காலத்தில் அதிகப்படியானோருக்குப் பாதிப்பு ஏற்படும்.

வேக்சின்
எனவே, இந்த வகை கொரோனாவை முன்கூட்டியே கண்டறிந்து தனிமைப்படுத்துவது அவசியமாகும். இந்த வகை கொரோனாவால் பாதிக்கப்படுவார்களில் அதிகம் மீண்டுவிடுகின்றனர். இருப்பினும், வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக இருந்தால், உயிரிழப்புகள் கையை மீறி செல்ல வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இதுவே இந்த வகை கொரோனாவை அச்சமூட்டுவதாக மாற்றுகிறது. இந்த வகை கொரோனாவுக்கு வேகன்சின் எந்தளவுக்குப் பலன் தரும் என்பது குறித்த துல்லியமான தகவல்களும் நம்மிடம் இல்லை.

உலக நாடுகள்
சீனா, இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் இந்த வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டன், அமெரிக்கா, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த வகை கொரோனா உறுதியாகியுள்ளது. இருப்பினும், சீனா அளவுக்கு எந்தவொரு நாடும் இந்த பிஎப்.7 வகை கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்படவில்லை. பிரிட்டனில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, இது அச்சுறுத்தும் ஒரு கொரோனா வகையாக இருந்தது. ஆனால், இப்போது அங்கு நிலைமை அந்தளவுக்கு மோசமானதாக இல்லை.

சீனா
சீனாவில் கொரோனா பரவல் திடீரென இந்தளவுக்கு மோசமாக பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. குறிப்பாக, அங்கு இத்தனை காலம் ஜீரோ கோவிட் பாலிசி கடைப்பிடிக்கப்பட்டது. அதாவது ஓரிருவருக்கு கொரோனா கண்டறியப்பட்டாலே ஒட்டுமொத்த பகுதியும் லாக்டவுன் அறிவிக்கப்படும். இதுபோன்ற கடுமையான கட்டுப்பாடுகளால், சீனாவில் பெரும்பாலானோருக்கு கொரோனா தடுப்பாற்றல் இல்லாமலேயே இருந்தது. இப்போது ஒரே அடியாக அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டதே வைரஸ் பாதிப்பு குறுகிய காலத்தில் இந்தளவுக்கு அதிகரிக்கக் காரணமாக உள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications