குஜராத்தை போல.. கடந்த 20 ஆண்டுகளில் நாட்டை உலுக்கிய பயங்கர பால விபத்துகள்! இத்தனை விபத்துகளா
டெல்லி: குஜராத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்து மோசமான விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், உலகெங்கும் நடந்த பால விபத்துகள் பற்றிப் பார்க்கலாம்.
குஜராத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மோர்பி தொங்கு பாலம் நேற்று இடிந்து விழுந்து மோசமான விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில் நிகழ்ந்த மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
இந்தியாவிலும் சரி உலகின் பிற நாடுகளிலும் சரி, கடந்த காலங்களிலும் இதுபோன்ற விபத்துகள் நடந்துள்ளன. அப்படிக் கடந்த 20 ஆண்டுகளில் நடந்த மோசமான விபத்துகளைப் பார்க்கலாம்.

குஜராத் 2022
நேற்றைய தினம் குஜராத்தில் மோர்பி பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த பாலம் புனரமைப்பு பணிகளுக்குப் பின் கடந்த வாரம் தான் திறக்கப்பட்டது. விடுமுறை நாளான நேற்று ஒரே நேரத்தில் பல நூறு பேர் அங்குக் குவிந்ததே விபத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. இந்த விபத்தில் இதுவரை 141 பேர் உயிரிழந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

கொல்கத்தா 2016
கடந்த 2016ஆம் ஆண்டு இதேபோல மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பயங்கர விபத்து ஏற்பட்டது. 2016 மார்ச் மாதம் கொல்கத்தாவில் பரபரப்பான ஒரு நாளில் முக்கிய தெருவில் உள்ள மேம்பாலம் இடிந்து விழுந்து மோசமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 26 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும், இதில் காயமடைந்த 100 பேரை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேற்கு வங்கம், அருணாச்சல பிரதேசம்
கடந்த 2011ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங்கில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டனர். திருவிழா காலத்தில் அங்கு அதிகப்படியான மக்கள் குவிந்து இருந்த நேரத்தில் இந்த மோசமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து ஏற்பட்டு ஒரு வாரத்திற்குள் அருணாச்சல பிரதேசத்தில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தரைப்பாலம் இடிந்து விழுந்ததில் 30 பேர் உயிரிழந்தார்.

பீகார் 150 ஆண்டு பழமையான பாலம்
பீகார் மாநிலத்தில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் சுமார் 150 ஆண்டுகள் பழமையான மேம்பாலம் ஒன்று 2006 டிசம்பர் இடிந்து விழுந்தது. சரியாக அப்போது பாலத்தின் கீழ் பயணிகள் ரயிலும் நின்று கொண்டு இருந்ததால் இது மோசமான விபத்தா க மாறியது. இந்த விபத்தில் 34 பேர் கொல்லப்பட்டனர். அதே 2006 ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் பெஷாவரில் அருகே உள்ள மர்டான் என்ற இடத்தில் பருவ மழையால் பாலம் அடித்துச் செல்லப்பட்டதில் 40 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிரா கோர விபத்து
கடந்த 2003 ஆகஸ்ட் மாதம் மகாராஷ்டிர தலைநகர் மும்பை அருகே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு இருந்த பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த பள்ளி பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் ஆற்றில் பாய்ந்தது. இதில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதே ஆண்டு பொலிவியாவில் பேருந்து ஒன்று ஆற்றைக் கடக்கும்போது பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் குறைந்தது 29 பேர் உயிரிழந்தனர்.

பிற நாடுகள்
இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் இதுபோன்ற விபத்துகள் அரங்கேறி உள்ளன. கடந்த 2007இல் சீனாவின் மத்திய ஹுனான் மாகாணத்தில் பாலத்தின் கட்டுமான பணிகள் முடியும் தறுவாயில் திடீரென பாலம் இடிந்து விழுந்தது. அதில் 64 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதே ஆண்டு டிசம்பர் மாதம் நேபாளத்தில் பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 25 பேர் மாயமாகினர். மெக்சிகோவில் 2021இல் நடந்த விபத்தில் 26 பேரும் இத்தாலியில் நடந்த பால விபத்தில் 43 பேரும் உயிரிழந்தனர்.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications