சென்னை- பெங்களூர் மட்டுமில்லை..இந்தியாவை புரட்டிப்போடும் 5 எக்ஸ்பிரஸ் வே திட்டங்கள்! இதுதான் லிஸ்ட்
டெல்லி: நமது நாட்டை மொத்தமாகப் புரட்டிப் போடக்கூடிய ஐந்து முக்கிய எக்ஸ்பிரஸ் வே திட்டங்கள் இப்போது அமைக்கப்பட்டு வருகிறது. அவை எந்த எக்ஸ்பிரஸ் சாலைகள். இதன் மூலம் என்ன லாபம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
எந்தவொரு நாட்டிற்கும் சாலை உள்கட்டமைப்பு ரொம்பவே முக்கியம்.. அப்போது தான் சரக்குகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக எடுத்துச் செல்ல முடியும். மத்திய அரசு சாலை உட்கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதிலும் குறிப்பாக முக்கிய நகரங்களை இணைக்கும் எக்ஸ்பிரஸ் சாலைகளை அமைப்பதில் மத்திய அரசு முனைப்புக் காட்டி வருகிறது. இதற்கிடையே நாட்டையே புரட்டிப் போடக்கூடிய ஐந்து முக்கியமான எக்ஸ்பிரஸ் வே திட்டங்கள் குறித்து நாம் பார்க்கலாம்.
டெல்லி மும்பை எக்ஸ்பிரஸ் சாலை: முதலில் டெல்லி மும்பை எக்ஸ்பிரஸ் வே.. சுமார் 1,250 கிமீ நீண்டு இருக்கும் முக்கியமான சாலை டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வே.. இதுதான் இந்தியாவின் மிக நீளமான எக்ஸ்பிரஸ் வேக்களில் ஒன்றாக மாற உள்ளது. இந்த எக்ஸ்பிரஸ் சாலை நாட்டின் இரு முக்கிய நகரங்களான டெல்லி - மும்பை இடையேயான பயண நேரத்தைக் கணிசமாகக் குறைக்கும்.
சென்னை- பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே எப்போது முடியும்.. தாமதத்திற்கு உண்மையில் என்ன காரணம்- நிதின் கட்கரி
இந்த எக்ஸ்பிரஸ் வே அமைந்தால் இந்த ரூட்டில் இருக்கும் அனைத்து நகரங்கள் மற்றும் பகுதிகள் விரைவான வளர்ச்சியை அடையும்.. இது போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவது மட்டுமின்றி, வர்த்தகத்தை எளிதாக்கும். சுற்றியுள்ள பகுதிகளில் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும்.
தென்னிந்தியாவைப் புரட்டிப் போடும் திட்டம்: அடுத்து சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் வே.. தென்னிந்தியாவில் மிக முக்கிய சாலை உட்கட்டமைப்பு திட்டமாக இது பார்க்கப்படுகிறது. இந்த எக்ஸ்பிரஸ் சாலை தென்னிந்தியாவில் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தின் இரண்டு முக்கிய மையங்களான சென்னை மற்றும் பெங்களூரை இணைக்கிறது. இந்தத் திட்டம் பயண நேரத்தை வெகுவாக குறைக்கும் நிலையில், வர்த்தகம் மற்றும் வணிக நடவடிக்கைகளை மேம்படுத்தும்.
இது வழித்தடத்தில் தொழில்துறை மண்டலங்களும் இருக்கும் நிலையில், அவற்றுக்கும் இதைப் பெரியளவில் கை கொடுக்கும். புதிய முதலீடுகளை ஈர்க்கவும் பொருளாதார வளர்ச்சியை அடையவும் இது உதவும்.
உபி நெடுஞ்சாலை: அடுத்து முக்கியமானது பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் வே. உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமையும் 340.8 கிமீ நீளமுள்ள இந்த, 6-வழி விரைவுச்சாலை லக்னோவையும் காஜிபூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை-31இல் உள்ள ஹைடாரியா கிராமத்துடன் இணைக்கிறது. நாட்டில் மக்கள் தொகை அதிகம் கொண்ட மாநிலமான உபி-இல் பல மாவட்டங்களை இணைப்பதே இதன் நோக்கம். உபி-இன் கிழக்குப் பகுதிக்குத் தடையற்ற இணைப்பை இது வழங்குகிறது. பொருளாதார வளர்ச்சி, சுற்றுலா, வர்த்தகத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி- கத்ரா: அடுத்தது டெல்லி- கத்ரா விரைவுச்சாலை.. தேசிய தலைநகரான டெல்லியைப் புனித நகரமான கத்ராவுடன் இணைக்கும் இந்த எக்ஸ்பிரஸ் வே, வைஷ்ணோ தேவி கோயிலுக்குச் செல்லும் பயணத்தை எளிதாக்கும். இந்த அதிவேக எக்ஸ்பிரஸ் சாலை பல லட்சம் பக்தர்களுக்கு விரைவான மற்றும் வசதியான பயணத்தை வழங்குவது மட்டுமல்லாமல், இப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும். உள்ளூர் பொருளாதாரத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கங்கா எக்ஸ்பிரஸ் வே: கங்கா விரைவுச்சாலை உத்தரப்பிரதேசத்தில் வரவிருக்கும் மற்றொரு ஒரு முக்கிய சாலை உட்கட்டமைப்பு திட்டமாகும். இதன் மொத்த நீளம் 1047 கிமீ ஆக இருக்கும். இந்த நெடுஞ்சாலை உத்தரப்பிரதேசத்தில் உள்ள அனைத்து முக்கிய நகரங்களையும் உள்ளடக்கிய கங்கை நதிக்கு இணையாகச் செல்லும்.
இது பிரயாக்ராஜ், மீரட், உன்னாவ், புடான், சம்பல், சந்தௌசி, தில்ஹார், பங்கர்மாவ், ரேபரேலி, ஹாபூர் மற்றும் சியானா போன்ற நகரங்கள் வழியாகச் செல்லும். இந்த எக்ஸ்பிரஸ் வே மீரட் மற்றும் பிரயாக்ராஜ் இடையே பயண நேரத்தை 12 மணி நேரத்திலிருந்து ஆறு மணி நேரமாகக் குறைக்கும்.












Click it and Unblock the Notifications