2 சொந்த வீடுகள் வரை வரிச் சலுகை! நிர்மலா சீதாராமனின் 1.15 மணி நேர பட்ஜெட் உரையில் இத்தனை அம்சங்களா?
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் 1.15 மணி நேர பட்ஜெட் உரையில் என்னென்ன முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
2025- 2026 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார். முன்னதாக அவர் குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்று திரௌபதி முர்முவிடம் வாழ்த்து பெற்றார்.

பிறகு அவருக்கு தயிரும் சர்க்கரையும் கலந்த இனிப்பை முர்மு ஊட்டிவிட்டார். நிர்மலா சீதாராமன் 8ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் ஒவ்வொரு முறையும் பாரம்பரியத்தை உணர்த்தும் சேலையை அணிந்து வருவார்.
அந்த வகையில் இன்றைய தினம் அவர் பீகார் மாநிலத்தின் பாரம்பரிய கலையான மதுபாணி கலைக்கு பிரதிபலிக்கும் சேலையை அணிந்திருந்தார். அவர் பட்ஜெட் உரையை படிக்கும் போது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
அதையும் தாண்டி பட்ஜெட்டை நிர்மலா வாசித்தார். இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள சிறப்புகளை பார்க்கலாம்.
- அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டம் 2028ஆம் ஆண்டு வரை நீட்டிப்பு
- ஆண்டுக்கு ரூ 12 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோர் புதிய வருமான வரி விகிதத்தின் கீழ் வரி செலுத்த தேவையில்லை.
- வருமான வரி தாக்கல் செய்யும் காலம் 4 ஆண்டுகளாக அதிகரிப்பு
- வீட்டு வாடகை டிடிஎஸ் பிடித்த வரம்பு ரூ 6 லட்சமாக உயர்வு
- 2 சொந்த வீடுகள் வரை வரிச்சலுகைகள் பெறலாம்
- வரி விலக்கு அறிவிப்பால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ 1 லட்சம் கோடி இழப்பு
- புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் தாக்கல்
- மின்னணு வாகனங்கள் (EV), செல்போன் பேட்டரி உற்பத்திக்கு வரிச் சலுகை
- புற்றுநோய் உள்ளிட்ட 36 வகையான உயிர் காக்கும் மருந்துகளுக்கு சுங்க வரி முழுவதும் ரத்து
- ஸ்விக்கி, ஜொமாட்டோ ஊழியர்களுக்கு இலவச காப்பீடு, அரசு அடையாள அட்டை
- பீகாரில் உணவு பதப்படுத்தலுக்காக தேசிய நிறுவனம் அமைக்கப்படும்.
- பீகாரில் தாமரை விதை உற்பத்தி கூடம் அமைக்கப்படுகிறது
- கிசான் கார்டு மூலம் விவசாய கடன் ரூ 5 லட்சமாக உயர்வு
இவ்வாறு பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications