ஜிஎஸ்டி வரியில் சூப்பர் மாற்றம்.. எந்த பொருட்கள் விலை உயர்கிறது.. எதன் விலை குறைகிறது?
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று மாலை ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற்றது. இதில் பல முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்ட நிலையில், இறுதியில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவரது அறிவிப்புகளால் சில பொருட்கள் விலை குறைகிறது. சில பொருட்கள் விலை அதிகரிக்கிறது.. அது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெற்றதால் மத்திய அரசு கடந்த பிப். மாதம் இடைக்கால பட்ஜெட்டை தான் தாக்கல் செய்தது. இப்போது தேர்தல் முடிந்து என்டிஏ கூட்டணி அரசு அமைந்துள்ள நிலையில், முழு பட்ஜெட் இப்போது தான் தாக்கலாகிறது.

இதன் காரணமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்களுடன் பட்ஜெட்டுக்கு முன் ஆலோசனை நடத்தினர். மாநிலங்களின் கருத்துகளை நிர்மலா சீதாராமன் எடுத்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து ஜிஎஸ்டி கவுன்சிலின் 53வது கூட்டம் நேற்று நடைபெற்றது.
வரி: கல்வி நிறுவனங்களில் அருகே இருக்கும் விடுதிகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு தரப்படுகிறது. மாதம் ₹ 20,000 வரை வாடகை இருக்கும் விடுதிகளுக்கு இது பொருந்தும். மாணவர் தொடர்ந்து 90 நாட்கள் விடுதியில் தங்கியிருக்க வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனையாகும். ஹோட்டல்கள் இதைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதற்காகவே இந்த நிபந்தனையாகும்.
ரயில் சேவைகள்: பிளாட்பார்ம் டிக்கெட், ஓய்வு அறை வசதி, காத்திருப்பு அறைகள், cloakroom facilities, பேட்டரி மூலம் இயக்கப்படும் கார் சேவைகள், இன்ட்ரா-ரயில்வே சேவைகள் போன்ற சேவைகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வரி அறிவிப்பின் மீதான அபராதங்களுக்கு வட்டி: 2017-18, 2018-19 மற்றும் 2019-20 நிதியாண்டுகளுக்கான ஜிஎஸ்டி சட்டத்தின் 73வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட வரி தொடர்பான அபராதங்களுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. முழு வரித் தொகையையும் 2025 மார்ச் 31ஆம் தேதிக்குள் செலுத்துவோர் இதன் மூலம் பயனடைவார்கள்.
இன்புட் டாக்ஸ் கிரெடிட்: எந்தவொரு டெபிட் நோட்டிலும் இன்புட் டாக்ஸ் கிரெடிட் பெறுவதற்கான நீட்டிப்புக்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்தது.
அட்டைப்பெட்டிகளுக்கு ஜிஎஸ்டி: அனைத்து வகையான அட்டைப்பெட்டிகள் மீதான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.
ஜிஎஸ்டி ரிட்டர்ன்: 2024-25 நிதியாண்டு மற்றும் அதற்கு அடுத்த ஆண்டுகளுக்கான வருமானத்தை ஏப்ரல் 30 முதல் ஜூன் 30 வரை தாக்கல் செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.
சோலார் குக்கர்கள்: ஒற்றை அல்லது இரட்டை எனர்ஜி மூலம் இயங்கும் சோலார் குக்கர்களுக்கு 12 சதவீத சீரான ஜிஎஸ்டி விகிதம் பரிந்துரைக்கப்படுகிறது. அதேபோல தீ மற்றும் தண்ணீர் தெளிப்பான்கள் உட்பட அனைத்து வகையான ஸ்பிரிங்லர்களுக்கும் ஒரே மாதிரியான ஜிஎஸ்டி 12 சதவீதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பால் கேன்கள்: ஸ்டீல், இரும்பு, அலுமினியம் என அனைத்து பொருட்களால் செய்யப்பட்ட பால் கேன்களுக்கும் 12 சதவிகிதம் ஒரே மாதிரியான ஜிஎஸ்டி விகிதம் பரிந்துரைக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications