10 ஆண்டுக்கு பிறகு பவரை பெறும் காங்கிரஸ்.. எதிர்க்கட்சி தலைவர் பதவி ஏன் முக்கியம்? இவ்ளோ அதிகாரமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்ற லோக்சபாவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் அங்கீகாரம் கிடைக்க உள்ளது. எதிர்க்கட்சி தலைவருக்கு என்னென்ன அதிகாரங்கள் உள்ளன என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

லோக்சபா தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. மத்தியில் ஆட்சியமைக்க 272 எம்பிக்களின் ஆதரவு வேண்டும் என்ற நிலையில் பாஜக 240 இடங்களில் மட்டுமே வென்றது. தனி மெஜாரிட்டி இல்லாத நிலையில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வென்றுள்ளது.

Lok Sabha Election 2024 Lok Sabha Election Result 2024 delhi congress rahul gandhi 2024 2024


இதனால் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதாதளம் உள்பட பிற கூட்டணி கட்சிகளின் 52 எம்பிக்களின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியை அமைக்க உள்ளது. நாளை இரவு 7.30 மணிக்கு 3வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடந்த 2019ம் ஆண்டை ஒப்பிடும்போது அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2019ல் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த முறை 99 இடங்களை காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. இதன்மூலம் லோக்சபாவில் அதிக இடங்களை பிடித்த கட்சிகளின் பட்டியலில் பாஜகவுக்கு (240 எம்பிக்கள்) அடுத்த இடத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது.

தேர்தலில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் கட்சிக்கு அடுத்து அதிக இடங்களில் வென்ற கட்சிக்கு அதாவது அவையில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 10 சதவீதத்திற்கு மேல் பெறும் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும். கடந்த 2014 தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 44 இடங்களே கிடைத்தது. அதேபோல 2019 தேர்தலில் 52 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

இதனால் எதிர்க்கட்சி அங்கீகாரம் கிடைக்கவில்லை. தற்போது காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் காங்கிரஸ் மீண்டும் எதிர்க்கட்சி இருக்கையில் அமர இருக்கிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். ராகுல் காந்திக்கு இந்த பொறுப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவருக்கு என்னென்ன அதிகாரங்கள் உள்ளன என்பது பற்றி இங்கே பார்க்கலாம்..

இந்தியா என்பது அந்நியர்கள் அடையாளப்படுத்திய வார்த்தை.. பாரத் என்றால் ஒளி.. ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு


* லோக்சபா எதிர்க்கட்சி தலைவருக்கு கேபினட் அமைச்சருக்கு நிகரான அந்தஸ்தை உண்டு.. * நாடாளுமன்றத்தில் அமைக்கப்படும் முக்கிய குழுக்களின் உறுப்பினராகவும் எதிர்க்கட்சி தலைவர் இடம் பெறுவார்.
* அதாவது, பொதுக் கணக்கு, பொதுத் துறை நிறுவனங்கள், பல்வேறு நாடாளுமன்ற கூட்டுக் குழுக்களின் உறுப்பினராக எதிர்க்கட்சி தலைவர் இருப்பார்.

* அது மட்டும் இன்றி சுதந்திரமான அமைப்புகளான சிபிஐ, மத்திய தகவல் ஆணையம், மனித உரிமை ஆணையம், லோக்பால் உள்ளிட்டவற்றின் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் குழுவிலும் எதிர்க்கட்சி தலைவர் இடம் பெற்றிருப்பார்.
* எதிர்க்கட்சி தலைவருக்கென தனி வீடு ஒதுக்கப்படும். அதற்கு வாடகையோ, பராமரிப்புத் தொகையோ செலுத்த வேண்டியதில்லை. இது போக பல்வேறு சலுகைளும் எதிர்க்கட்சி தலைவருக்கு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+