உலக பசிக் குறியீடு.. 107வது இடத்திற்கு சரிந்த இந்தியா..! பாகிஸ்தான், வங்கதேசத்தை விட மோசம்
டெல்லி: உலக பசி குறியீட்டில் இந்தியா நமது மற்ற அண்டை நாடுகளைக் காட்டிலும் மோசமான நிலையில் உள்ளதாகக் கூறப்பட்டு உள்ளது.
சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் உலக பசி குறியீடு பட்டியல் வெளியிடப்படும். தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும் கணக்கிடப்பட்டு மிக விரிவான அறிக்கை அடிப்படையில் இந்தப் பட்டியல் வெளியிடப்படும்.
இந்தாண்டிற்கான இந்த உலக பசிப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் இந்தியா மற்ற அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் மோசமான நிலையில் உள்ளது.

குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ்
குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ் ஒவ்வொரு நாட்டிலும் இன்னும் கூட பசி எந்தளவு உள்ளது என்பதைக் கண்காணிக்கும் கருவியாகும். இது நான்கு முக்கிய காரணிகளைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. ஊட்டச்சத்துக் குறைபாடு, குழந்தை எடை வளர்ச்சி , குழந்தை வளர்ச்சி குறைவு மற்றும் குழந்தை இறப்பு விகிதம் ஆகியவற்றை வைத்துத் தான் இந்த குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ் கணக்கிடப்படுகிறது.

இந்தியாவுக்கு எவ்வளவு மார்க்
ஒவ்வொரு நாட்டிற்கும் 100 புள்ளி என்ற அளவில் கணிக்கப்பட்டு குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ் வழங்கப்படும். இதில் ஜீரோ மதிப்பெண் இருந்தால் பசி இல்லா சிறந்த நாடாகக் கருதப்படும். அதேநேரம் 100 இருந்தால் அது மிக மோசமான நிலையில் இருக்கும் நாடாகக் கருதப்படும். இந்தியாவுக்கு இதில் 29.1 மார்க் கிடைத்து உள்ளது. தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பிரிவில் தான் உள்ளது.

தெற்காசியாவிலேயே மோசம்
அண்டை நாடுகள் இந்தியாவைக் காட்டிலும் நல்ல நிலையிலேயே உள்ளது. பொருளாதார குழப்பத்தில் சிக்கியுள்ள இலங்கை கூட 64ஆவது இடத்தை பெற்று உள்ளது. நேபாளம் 81 இடத்திலும் வங்கதேசம் 84 இடத்திலும் உள்ளது. பாகிஸ்தான் இதில் 99 இடத்தில் உள்ளது. தெற்காசியாவிலேயே தாலிபான்கள் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தான் மட்டுமே இந்தியாவை விட மோசமான இடத்தில் (109) உள்ளது. இதில் 5க்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்று சீனா சிறப்பாக உள்ளது.

மோசமான நிலை
இந்தியாவில் குழந்தைகள் உரிய எடையில்லாமல் இருப்பது 19.3%ஆக உள்ளது. இது கடந்த 2014 (15.1%) மற்றும் 2000இல் (17.15%) பதிவான அளவை விட மோசமாகும். உலகின் மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் தான் இது மோசமாக உள்ளது. வளரும் மக்களை அதிகம் கொண்ட இந்தியாவிற்கு இது ஒரு சிக்கலாகவே பார்க்கப்படுகிறது. ஊட்டச்சத்து பற்றாக்குறையிலும் இந்தியா 2018-2020இல் 14.6% ஆக இருந்து 2019-2021இல் 16.3% ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள 828 மில்லியன் மக்களில் இந்தியாவில் மட்டும் 224.3 மில்லியன் மக்கள் உள்ளனர்.

மற்ற இரு காரணிகள்
அதேநேரம் மற்ற இரு காரணிகளில் இந்தியாவின் நிலை சற்று மேம்பட்டு உள்ளது. குழந்தைகள் குறைந்த உயரம் என்பது 2014இல் 38.7%ஆக இருந்த நிலையில், இது இப்போது 35.5%ஆக குறைந்துள்ளது. அதேபோல குழந்தை இறப்பு விகிதமும் இதே காலத்தில் 4.6%இல் இருந்து 3.3%ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த மார்க் அடிப்படையில் பார்த்தால் 2014இல் 28.2ஆக இருந்த நிலையில், 2022இல் 29.1ஆக என்று மோசமாகி உள்ளது.

உலக பசி குறியீடு
உலக பசி குறியீடு என்பது 2022இல் "மிதமானதாக" உள்ளது. இந்த ஆண்டு உலக பசி குறியீடு 2022இல் 18.2ஆக உள்ளது. இது கடந்த 2014இல் 19.1ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. போர், காலநிலை மாற்றம், கொரோனா, பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் உலக பசிக் குறியீடு மோசமாக உள்ளது. அடுத்தாண்டு இன்னும் கூட உலக பசி குறியீடு மோசமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

44 நாடுகள் ஆபத்து
சர்வதேச அளவில் பார்க்கும் போது, 44 நாடுகள் "தீவிரமான" அல்லது "ஆபத்தான" நிலையில் உள்ளன. பெரிய மாற்றம் அல்லது சீர்திருத்த நடவடிக்கைகள் இல்லையென்றாலும் கூட வரும் 2030ஆம் ஆண்டிற்குள் உலக அளவில் மொத்தம் சுமார் 46 நாடுகள் குறைந்த பட்டினி என்ற நிலையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் உக்ரைன் போர் போன்ற நடவடிக்கைகள் அதிகரித்தால் நிலைமை மோசமாகவும் வாய்ப்புகள் உள்ளன.
-
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி












Click it and Unblock the Notifications