ஜி20 மாநாட்டின் இலக்கே இது தான்.! நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன.. லிஸ்ட் இதோ!
டெல்லி: தலைநகர் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு பிரமாண்டமாக தொடங்கி நடந்து வருகிறது. இந்த உச்சி மாநாட்டில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதையோ, அணு ஆயுத மிரட்டல்களையோ ஏற்க முடியாது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, சீனா உள்பட 20 நாடுகள் இணைந்து ஜி20 கூட்டமைப்பை உருவாக்கி உள்ளது. இந்த கூட்டமைப்பின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நடப்பு ஆண்டில் இந்த மாநாடு இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தியா தலைமை ஏற்று நடத்துவதையடுத்து கடந்த ஓராண்டாக இந்தியாவில் பல்வேறு இடங்களில் ஜி20 நாடுகளின் பிரதிநிதிகளின் கூட்டம் என்பது நடந்து வந்தது.

இதேபோல் ஜி20 உச்சி மாநாட்டை டெல்லியில் மிக பிரமாண்டமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்தது. டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட பாரத் மண்டபத்தில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன்படி திட்டமிட்டப்படி ஜி20 அமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாடு நாளை வரை நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்றே பிற நாடுகளின் தலைவர்கள் டெல்லியில் குவிந்தனர்.
அமெரிக்க அதிரபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்பட ஏராளமான தலைவர்கள் மாநாட்டுக்காக வருகை தந்துள்ளனர். இதையடுத்து இன்று ஒவ்வொரு தலைவர்களும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க பாரத் மண்டபத்துக்கு வந்தனர். அவர்களை பிரதமர் மோடி கைக்குலுக்கி, கட்டியணைத்து வரவேற்றார். ஜி20 மாநாட்டின் முக்கிய நிகழ்வாக 'ஜி20 பிரகடனம்' உறுப்பு நாடுகளால் ஒருமனதாக ஏற்கப்பட்டதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
இந்த மாநாட்டில் தொடக்க உரை ஆற்றிய பிரதமர் மோடி, "மாநாட்டின் கருப்பொருளான "ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" குறித்து விளக்கம் அளித்தார். தொடர்ந்து இந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-
* சந்திரயான் 3 திட்ட வெற்றிக்கு ஜி20 உறுப்பு நாடுகள் வாழ்த்து தெரிவித்தன.
* பொருளாதார வளர்ச்சிக்கான முடிவுகள் எடுக்கும் இடத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாலின இடைவெளியை குறைத்து சமமான வாய்ப்புகளை வழங்கி பெண்களை ஊக்குவிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* அணு ஆயுதங்களை பயன்படுத்துவதையோ, அணு ஆயுத மிரட்டல்களையோ ஏற்க முடியாது.
* உலக நாடுகளில் நிலவும் பொருளாதார சிக்கல்களுக்கு தீர்வு காண்பதே இலக்கு.
* புவிசார் அரசியில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் தளமாக ஜி20 அமைப்பு இல்லை.
* அனைத்து வகையான பயங்கரவாதத்துக்கும் கண்டனம் தெரிவித்து தீர்மானம்.
* சர்வேத அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறத்தலாக உள்ளது.
* பசுமை இல்ல வாயுக்கள் வெளியிடுதலை 2030-க்குள் 40 சதவீதம் அளவுக்கு குறைக்க கவனம் செலுத்த தீர்மானம். போன்ற தீர்மானங்கள் ஜி 20 உச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications