இன்று நீட் தேர்வு.. கடுமையான விதிமுறைகள்.. மாஸ்க், சானிடைசர் கட்டாயம்.. புதிய ரூல்ஸ் அறிவிப்பு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இன்று நீட் தேர்வு நடக்க உள்ள நிலையில் நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்னென்ன என்ற விவரம் வெளியாகி உள்ளது.
பல்வேறு மாநில அரசுகளின் எதிர்ப்புக்கு இடையில் இன்று நாடு முழுக்க நீட் தேர்வுகள் நடக்க உள்ளது. மொத்தம் 15 லட்சம் மாணவர்கள் இந்த நீட் தேர்வை இந்த முறை எழுதுகிறார்கள். தேசிய தேர்வு ஆணையம் மூலம் நீட் தேர்வு நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் நீட் தேர்வுகளுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மதியம் 2 மணிக்கு தேர்வுகள் நடக்க உள்ள நிலையில், இன்று காலையிலேயே மாணவர்கள் தேர்வு மையத்திற்கு வந்துவிட்டனர். நீட் தேர்வுகள் கொரோனா பாதிப்பிற்கு இடையே நீட் தேர்வு நடக்க உள்ளதால் கடுமையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள்:
- தேர்வு அறையில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும். மாணவர்கள் தனி தனி இருக்கையில் அமர வைக்கப்படுவார்கள். ஒரு பெஞ்சில் ஒருவர் மட்டுமே அமர வைக்கப்படுவார்.
- நீட் தேர்வு எழுதும் அறையில் ஒரு அறைக்கு 12 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். முன்பு 24 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது 12 பேர் மட்டுமே ஒரு அறைக்குள் செல்ல முடியும்.

மாணவர்கள் மாஸ்க் அணிவது கட்டாயம்.
- ஷூ அணிய அனுமதிஇல்லை. செருப்பு அணியலாம்.
- ஆபரணங்கள் அணிய அனுமதி இல்லை. மதரீதியான காரணம் இருந்தால், அனுமதி பெற்று ஆபரணம் அணியலாம்.
- மாணவர்கள் எல்லோரும் தண்ணீர் பாட்டில் மற்றும் சானிடைசர் கொண்டு வருவது கட்டாயம்.
- கொரோனா காலம் என்பதால்., தேர்வு அறைக்கு மாணவர்கள் முன்பே வந்துவிட வேண்டும்.
- தேர்வு அட்மீட் கார்டில் கொரோனா தொடர்பாக இருக்கும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
- மத ரீதியான உடைகளை அணியும் மாணவர்கள், மாணவிகள் தேர்வு அறைக்கு முன்பே வந்து உரிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications