லோக்சபா தேர்தலில் எதிரொலிக்க போகும் 4 மாநில தேர்தல் முடிவுகள்? இதை நோட் பண்ணுங்க.. 7 மேட்டர் இருக்கு
டெல்லி: 4 மாநில தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், இதில் இருந்து அடுத்த லோக்சபா தேர்தலுக்கு நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து நாம் பார்க்கலாம்.
நேற்று 4 மாநில தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக வென்று ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது.

இந்தத் தேர்தல் முடிவுகள் தேசியளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், இந்த தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்தும் 7 முக்கியமான விஷயங்கள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
முதலாம் விஷயம்: முதலில் பிரதமர் மோடியின் இமேஜ் என்பது லோக்சபா தேர்தலைத் தாண்டி சட்டசபைத் தேர்தல்களிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளதையே இது காட்டுவதாக அரசியல் வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். சத்தீஸ்கரில் பாஜகவுக்கு வலுவான மாநில தலைவர் இல்லை. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் முறையே வசுந்தரா ராஜே மற்றும் சிவராஜ் சிங் சவுகான் ஆகிய வலுவான தலைவர்கள் இருந்தாலும் கூட பாஜக அவர்களை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யவில்லை.
மோடியின் வாக்குறுதிகள் என்று பிரதமர் மோடியை முன்னிறுத்தியே பாஜக பிரச்சாரம் செய்தது. வசுந்தரா ராஜே மற்றும் சிவராஜ் சிங் சவுகான் பிரச்சாரம் செய்தாலும் கூட அவர்களை பாஜக முன்னிறுத்தவில்லை. எனவே, இது பிரதமர் மோடியின் இமேஜுக்கு கிடைத்த வெற்றி என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.. அடுத்து 2024 லோக்சபா தேர்தலில் காங்கிரஸுக்கு எந்தளவுக்கு கடும் போட்டி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.
இரண்டாம் விஷயம்: பாஜகவின் பலம் என்பது இந்தி ஹார்ட் லேண்ட் எனப்படும் வட மாநிலங்கள் தான். கடந்த 2019 லோக்சபா தேர்தலில் இந்த பிராந்தியத்தில் பாஜக 225இல் 177 இடங்களில் வென்றது. காங்கிரஸ் கட்சி அங்கே தொடர்ந்து பலவீனமாகி வருகிறது. இந்தத் தேர்தல் முடிவுகளும் அதையே தான் காட்டுகிறது. மத்தியப் பிரதேசத்தில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருக்கும் நிலையில், அதையும் தாண்டி பாஜகவால் வெல்ல முடிந்துள்ளது. சத்தீஸ்கர் மற்றும் பிரதேசத்திலும் கூட இதே நிலைதான்.
மேலும், பாஜகவால் எந்தளவுக்கு வாக்காளர்களை நெருக்க முடிந்தது என்பதையும் இது காட்டுகிறது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜகவுக்கு உட்கட்சி பூசல்கள் இருந்த போதிலும், அதையெல்லாம் சாமத்து பாஜக போட்ட திட்டமே வெற்றியை வாங்கிக் கொடுத்துள்ளது. அதேபோல பாஜக தான் வலுவாக இருக்கும் மத்தியப் பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்கள் என்ன நடந்தாலும் தங்கள் கைகளை விட்டுச் செல்லாமல் இருப்பதையும் பார்த்துக் கொள்கின்றன.
மூன்றாவது விஷயம்: இந்தத் தேர்தலில் மற்றொரு முக்கிய விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். ராகுல் காந்தி தேசியளவில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இதன் மூலம் பாஜகவின் இந்து வாக்குவங்கி உடைத்து, ஒபிசி வாக்குகளை தங்கள் பக்கம் இழுக்க முடியும் என்று காங்கிரஸ் நினைத்தது. இருப்பினும், அதற்குப் பலன் கிடைக்கவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. உதாரணமாக ம.பி-இல் ஒபிசி ஆதிக்கம் செலுத்தும் பெரும்பாலான தொகுதிகளில் பாஜகவே வெற்றி பெற்று இருக்கிறது.
4ஆவது விஷயம்: அதேபோல பழங்குடியினர் மத்தியிலும் பாஜகவுக்கு வாக்கு வங்கி அதிகரித்துள்ளதை இது காட்டுகிறது. சத்தீஸ்கரில் பழங்குடியினருக்கு 29 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதில் பாஜகவுக்கு 18 சென்றுள்ளது. அதேபோல மத்தியப் பிரதேசத்தில் 47இல் 27 இடங்களும், ராஜஸ்தானில் 25இல் 11 இடங்களும் பாஜகவுக்குச் சென்றுள்ளது. இது இந்த பழங்குடியினர் வாக்கு பாஜக பக்கம் செல்ல தொடங்கி இருப்பதைக் காட்டுகிறது.
பொதுவாகப் பழங்குடியினர் எப்போதும் காங்கிரஸ் கட்சிக்கே ஆதரவாக இருப்பார்கள், ஆனால் இப்போது அந்த டிரெண்ட் மாற தொடங்கியுள்ளதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஆக்கப்பட்டார். இது தேர்தல் களத்தில் பாஜகவுக்குப் பலன் கொடுக்கிறது.
5ஆவது விஷயம்: தெலுங்கானா முடிவுகளைப் பார்க்கும் போது அங்கே முஸ்லீம் வாக்குகள் காங்கிரசுக்கு சென்றுள்ளது தெளிவாகத் தெரிகிறது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் கர்நாடகாவிலும் இதேதான் நடந்தது. அங்கே முஸ்லீம் வாக்காளர்கள் ஜேடிஎஸ் கட்சியில் இருந்து காங்கிரஸ் பக்கம் திரும்பினர். தெலுங்கானாவிலும் இதேதான் நடந்துள்ளது. அதாவது பிராந்திய கட்சிகளைத் தாண்டி முஸ்லீம் வாக்காளர்கள் காங்கிரஸ் பக்கம் மீண்டும் செல்ல ஆரம்பித்துள்ளதை இது காட்டுகிறது.
6ஆவது விஷயம்: மேலும், இந்தத் தேர்தல் முடிவுகள் வட இந்தியா, தென் இந்தியா அரசியல் ரீதியாக எந்தளவுக்கு மாறுபட்டு இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. கடந்த முறை தான் கர்நாடகாவில் காங்கிரஸ் வென்ற நிலையில், இப்போது தெலுங்கானாவிலும் வென்றதன் மூலம் தென்மாநிலங்களில் அதன் இருப்பு அதிகரித்துள்ளது. அதேநேரம் இரு வட மாநிலங்களைக் காங்கிரஸ் இழந்துள்ளது. மறுபுறம் பாஜக வடமாநிலங்களில் அசைக்கவே முடியாத சக்தியாக மாறி இருப்பதையே இது காட்டுகிறது.
கடைசி மேட்டர் இதுதான்: அடுத்து முக்கியமானது பெண்களின் வாக்கு. 2014ஆம் ஆண்டு முதலே வட இந்தியாவில் பாஜகவின் ஆதிக்கத்திற்குப் பெண்கள் ஆதரவே முக்கியமானது. இந்த முறையும் அதுவே தான் நடந்துள்ளது. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் பெண்கள் வாக்குகள் அதிகரித்து இருந்தது. இது பாஜக பக்கம் வந்ததே வெற்றிக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
-
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா?










Click it and Unblock the Notifications