உயிரை பறிக்கும் "பக்கவாதம்.." இந்த அறிகுறிகளை உடனே நோட் பண்ணுங்க.. எச்சரிக்கை தேவை மக்களே!
டெல்லி: பக்கவாதம் என்பது மூளையின் ஒரு பகுதிக்குச் செல்லும் ரத்தம் தடைப் பட்டாலோ அல்லது மூளையில் உள்ள ரத்தக் குழாய் வெடித்தாலோ ஏற்படும். உரியச் சிகிச்சை எடுக்கவில்லை என்றால் உயிரே போகும் அபாயம் கூட உள்ளது. இந்த மோசமான பாதிப்பின் அறிகுறிகளைப் பார்க்கலாம்.
மாறி வரும் வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மனிதர்களுக்குத் தொடர்ச்சியாகப் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றனர். முன்பு மிக அரிதாகவே ஏற்பட்ட பாதிப்புகள் கூட இப்போது பரவலாக ஏற்படத் தொடங்கியுள்ளன.
இதனால் முன்பை காட்டிலும் நமது உடல் குறித்து நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும், சில குறிப்பிட்ட மோசமான நோய்களின் அறிகுறிகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் தேவையான நடவடிக்கை எடுக்க முடியும்.

பக்கவாதம்
இதில் பக்கவாதம் முக்கியமான பாதிப்பாகும். பக்கவாதத்தின் அறிகுறிகள் மிகவும் தீவிரமானவை மட்டுமல்ல, திடீரெனவும் ஏற்படும். Brain attack என்றும் அழைக்கப்படும் இந்த பக்கவாதம், மூளையின் ஒரு பகுதிக்குச் செல்லும் ரத்தம் தடைப் பட்டாலோ அல்லது மூளையில் உள்ள ரத்தக் குழாய் வெடித்தாலோ ஏற்படும்.. இந்த பக்கவாதம் காரணமாக அந்த நபரின் மூளையில் நிரந்த பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது. அதிகபட்சமாக உயிரே போகும் அபாயமும் கூட உள்ளது.

அறிகுறிகள்
பல நேரங்களில் இந்த பக்கவாதத்தின் அறிகுறிகள் வெளியே தெரியாது. நமது உடலில் மிகச் சாதாரணமாக சில மாற்றங்கள் நடக்கும். அது பக்கவாதத்தின் அறிகுறிகள் என்று நமக்குத் தெரியாது. இந்த அறிகுறிகளைக் கண்டறியத் தவறினால், சரியான நேரத்தில் நம்மால் உரியச் சிகிச்சை பெற முடியாது. இதுபோன்ற நேரங்களில் அவை மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே, பக்கவாதத்தின் அறிகுறிகள் என்ன? எப்போது நாம் மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்பது குறித்த தகவல்களைப் பார்க்கலாம்.

உணர்வின்மை
பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளவர்களுக்கு முக தசைகள் பலவீனமாக இருக்கும். முக தசைகளைக் கட்டுப்படுத்தும் நரம்புகள் சேதமடைவதால் இது நிகழ்கிறது. முக வாதம் என்பது கைகால்கள் சரியாகச் செயல்படும் போதும் கூட முகத்தின் ஒரு பகுதியில் உள்ள தசைகளை இழப்பதாகும். இதுவும் பக்கவாதத்தால் தான் ஏற்படுகிறது. பக்கவாதத்தின் மற்றொரு பொதுவான, ஆனால் மிகவும் புறக்கணிக்கப்பட்ட அறிகுறி கைகள் மற்றும் விரல்களில் உணர்வின்மை ஆகும். பக்கவாதத்திற்கு முன், பெரும்பாலும் கை அல்லது விரல்களில் உணர்வை இழப்போம். இதையும் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

குமட்டல் மற்றும் வாந்தி
குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை பக்கவாதத்தின் மிகவும் பொதுவான, அதேநேரம் புறக்கணிக்கப்பட்ட அறிகுறியாகும். சிறு மூளையில் ஏற்படும் பக்கவாதம் தலையில் அசாதாரண அனிச்சைகளை ஏற்படுத்துகிறது. இது குமட்டலை ஏற்படுத்துகிறது. மற்றொரு பொதுவான அறிகுறி தலைச்சுற்றல். கடுமையான பக்கவாதம் ஏற்படும் முன்பு தலைச்சுற்றல் ஏற்படும். தலைவலியும் கூட பக்கவாதம் ஏற்படும் முன்பு பல நோயாளிகளுக்கு ஏற்பட்டு உள்ளது.

கண் அசைவுகள்
பக்கவாதத்தால் பாதிக்கப்படும் பெரும்பாலான மக்கள் முக வாதம் காரணமாகச் சரியாகப் பேச முடியாத சூழல் ஏற்படும். முக வாதம் காரணமாக முக தசைகள் மீது கட்டுப்பாட்டை இழப்போம். இது தாடை மற்றும் நாக்கின் இயக்கத்தைப் பாதிக்கும். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டோரின் கண் அசைவுகள் அவர்களால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது. மூளையின் பாகங்களில் உள்ள கண்ணைக் கட்டுப்படுத்தும் நரம்புகளில் ஏற்படும் பாதிப்புகள், தன்னிச்சையாகக் கண் சிமிட்டுதல் உள்ளிட்ட சிக்கல்களை ஏற்படுத்தும்.

விக்கல்
விக்கல்கள் எப்போது வந்தாலும் அது எரிச்சலூட்டுவதாகவே இருக்கும்.. ஆனால் அவை பக்கவாதத்தின் அறிகுறியாக இருக்கலாம் என்பதால் அதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. பக்கவாதத்திற்குப் பின் விக்கல்கள் ஏற்படும்போது அது நெஞ்சு வலி மற்றும் உணர்வின்மையை ஏற்படுத்தும். ஒற்றைத் தலைவலி, பசி மற்றும் பார்வை குறைபாடும் இதனால் ஏற்படும் ஆபத்து உள்ளது. நீண்ட காலம் தலைவலி இருப்பதும் பக்கவாதத்தின் அறிகுறியாகும். மூளையில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு, மூளைக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல் போவது தான் பக்கவாதம் ஆகும். சில நோயாளிகளுக்குக் குணமடைந்த பிறகு இடைவிடாத தலைவலி ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications