Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்த வாதம்தான் காரணம்.. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்க காரணமாக அமைந்த அந்த பாயிண்ட்.. ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில்.. அவருக்கு தற்போது உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. 471 நாட்களுக்கு பின் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.

கடந்த மாதம் இந்த வழக்கில் உத்தரவு ஒத்திவைக்கப்பட்ட நிலையில்.. இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் செந்தில் பாலாஜி மனுவை விசாரணை செய்த நிலையில் ஜாமீன் வழங்கி உள்ளது.

senthil balaji

இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்று முறையிட்டார். அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. அவரது ஜாமீன் மனு சில நாட்களுக்கு முன் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. 12 முறை இந்த வழக்கில் வாதங்கள் ஒத்திவைக்கப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வு இந்த நிலையில் இன்று செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உள்ளது.

வழக்கில் வைக்கப்பட்ட வாதங்கள்: இதுவரை இந்த வழக்கில் வைக்கப்பட்ட வாதங்கள் என்னென்ன என்று பார்க்கலாம். இதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய வாதங்கள்தான் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்க காரணம் ஆகும்.

1. முதலில் அமலாக்கத்துறை இதில் மிகவும் தாமதமாக ஆவணங்களை கொடுத்தது. உதாரணமாக கடந்த மே 6ம் தேதி விசாரணையின் போது அமலாக்த்துறை வேண்டும் என்றே வழக்கை தாமதப்படுத்துகிறது என்று செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டது. அன்று வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் அன்றுதான் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்தது.

2. அமலாகக்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், செந்தில் பாலாஜி ஜாமின் கோரி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை பதில் மனுவில் கூறியிருப்பதாவது: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகும், எம்எல்ஏ பொறுப்பில் உள்ளதால் influential person-ஆக உள்ளார்; வழக்கு தொடர்புடைய சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளதால் செந்தில்பாலாஜிக்கு ஜாமின் வழங்கக்கூடாது., விசாரணையின்போது செந்தில்பாலாஜி உரிய ஒத்துழைப்பை வழங்கவில்லை, என்று கூறியது.

3. இதற்கு செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த பதிலில், 320 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறேன் ஆனால் வேண்டுமென்றே இந்த வழக்கில் தாமதம் செய்ய வேண்டும் என்பதற்காக கடைசி நேரத்தில் பதில் மனுவை அமலாக்கத்துறை தாக்கல் செய்திருக்கிறது, என்று செந்தில் பாலாஜி இதற்கு பதில் அளித்தார்.

4. இதையடுத்து அமலாக்கத்துறை அளித்த பதிலில்.. நாங்கள் இந்த வழக்கில் தாமதமாக பதில் அளித்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். வேண்டும் என்றே நாங்கள் தாமதம் செய்யவில்லை, என்று அமலாக்கத்துறை கூறியது . தொடர்ந்து மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் விசாரணையை மே 15ம் தேதிக்கு ஒத்திவைத்தது.. இதனால் நீதிபதிகள் பதில் மனுவை படிக்க கூட முடியவில்லை. இதனால் அப்போது வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

5. செந்தில் பாலாஜி: செந்தில் பாலாஜி உடல்நிலை சரியில்லை. அதனால் அவருக்கு இடைக்கலஜா ஜாமீன் வழங்க வேண்டும். மருத்துவ காரணங்களால் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்.

6. அமலாக்கத்துறை; மருத்துவ காரணங்களால் இடைக்கால ஜாமீன் கூடாது. ஏற்கனவே அதை கோர்ட் நிராகரித்து உள்ளது. அதோடு மருத்துவ காரணங்களால் இடைக்கால ஜாமீன் வழங்குவது ஆதாரத்தை கலைக்க காரணமாக அமையும்.

7. உச்ச நீதிமன்றம்: ஏற்கனவே 2-3 வருடங்கள் பிணை இல்லாமல் கைதிகளாக இருப்பவர்கள் உள்ளனர். வழக்கு விசாரணைக்கு வராமல் சிறையில் இருக்கும் பலர் உள்ளனர். எனவே இடைக்கால ஜாமீன் பற்றி உடனே முடிவு எடுக்க முடியாது. நாளை வழக்கு விசாரிக்கப்படும் என்று கூறினர்.

8. செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தீர்ப்பு இந்த வழக்கில் பொருந்துமா என்பது பற்றிய விவாதங்கள் நேற்று நடந்தன. டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்க காரணமே.. நீண்ட காலம் அவர் சிறையில் இருந்ததுதான். அது செந்தில் பாலாஜிக்கு பொருந்தாது என்று அமலாக்கத்துறை கூறி உள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை புதிய ரூட் ஒன்றை எடுத்துள்ளதாக சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். மணீஷ் சிசோடியா தொடர்பான வாதம் வழக்கில் திருப்பங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

9. அதன்படி செந்தில் பாலாஜி வழக்கில் விசாரணை முடியவடைய இன்னும் எத்தனை நாட்கள் ஆகும் என்று உச்சநீதிமன்றம் நேற்று கேட்டது . இதற்கு நடுநிலையான அரசு வழக்கறிஞர், உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டால், 6 மாதங்கள் ஆகும் என்று கூறி உள்ளது அமலாக்கத்துறை. அதாவது இதில் அமலாக்கத்துறை பிளான்.. வழக்கறிஞரை மாற்றுவதுதான்.

10 அதாவது தமிழக அரசு சார்பாக ஆஜராகும் அரசு வழக்கறிஞரை மாற்றி.. வடஇந்தியாவில் இருந்து ஒருவரை டெல்லியே நியமிக்க வேண்டும் என்று அமலாத்துறை திட்டமிடுவதாக தெரிகிறது. இதன் காரணமாகவே மத்திய அரசு வழக்கறிஞர் ஜாமின் கோரிக்கை உள்ள நிலையில், அரசு வழக்கறிஞர் நியமனம் குறித்து பேசி வருகிறீர்கள்; முதலில் ஜாமின் வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பு தெரிவித்துள்ளது.

11. தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் இருந்தால் வலுவான வாதங்களை வைக்க முடியாது என்பதால் செந்தில் பாலாஜிக்கு எதிராக புதிய அரசு வழக்கறிஞரை கோர்ட்டே நியமிக்க வேண்டும் என்று புதிய கோரிக்கையை அமலாக்கத்துறை வைத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+