"புதினுக்கு பிடிவாரண்ட்.." அடுத்து என்ன நடக்கும்? இதுவரை டாப் தலைவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனரா! பரபர
உக்ரைன் போரில் போர்க் குற்றங்கள் நடந்துள்ளதாகப் பல புகார்கள் கிளம்பியுள்ளன.
டெல்லி: உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்ய அதிபர் புதின் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இதனிடையே இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பதைப் பார்க்கலாம்.
உக்ரைன் போர் ஓராண்டுக்கும் மேல் தொடர்கிறது. இந்த போர் காரணமாக உக்ரைனில் மிக மோசமான பேரழிவு ஏற்பட்டுள்ளது. இந்தப் போரால் உக்ரைன், ரஷ்யா மட்டுமின்றி பல உலக நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
உக்ரைனில் இருந்து வரும் ஏற்றுமதி தடைப்பட்டுள்ளதால் பல உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர உலகின் அனைத்து நாடுகளும் மிகத் தீவிரமாக முயன்று வருகின்றன.

உக்ரைன் போர்
இருப்பினும், இந்த போரை முடிவுக்குக் கொண்டு வரும் எண்ணமெல்லாம் புதினுக்கு இல்லை போல.. அவரது ராணுவம் தொடர்ந்து உக்ரைனில் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், பல மனித உரிமை மீறல்களிலும் இறங்கியுள்ளன. இதற்கிடையே உக்ரைன் போர் தொடர்பாக விளாடிமிர் புதினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. குழந்தைகளை நாடு கடத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் புதின் மீது முன்வைக்கப்பட்டுள்ளது. புதினுக்கு பிடிவாரண்ட் தரப்பட்டுள்ள நிலையில், அவர் சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதா? வாங்கப் பார்க்கலாம்.

கைதாகும் வாய்ப்பு
புதின் மற்றும் ரஷ்யாவின் குழந்தைகள் உரிமைகளுக்கான ஆணையர் மரியா ல்வோவா-பெலோவா ஆகியோர் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் இருக்கும் வரை இவர்கள் கைது செய்யப்பட வாய்ப்பில்லை. அதேநேரம் இருவரும் ரஷ்யாவுக்கு வெளியே எதாவது வெளிநாட்டிற்குச் சென்றால்.. சர்வதேச நீதிமன்றத்தின் உறுப்பு நாடுகள் இந்த உத்தரவைச் செயல்படுத்தக் கடமைப்பட்டுள்ளன. இதனால் சர்வதேச நீதிமன்றத்தில் உறுப்பு நாடுகளாக இருக்கும் 123 நாடுகளில் எங்கு புதின் காலடி எடுத்து வைத்தாலும் அவர் கைது செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன

உலக நாடுகள்
இதனால் புதின் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதில் சிக்கல் ஏற்படலாம். அதேநேரம் வெளிநாட்டில் புதின் உறுதியாகக் கைது செய்யப்படுவார் என்றும் உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனென்றால், தனது உத்தரவுகளை அமல்படுத்தச் சர்வதேச நீதிமன்றத்திற்கு எனச் சொந்தமாக எந்தவொரு போலீஸ் படையும் இல்லை. தங்கள் உத்தரவைச் செயல்படுத்த அவர்கள், ஐசிசி உறுப்பு நாடுகளின் போலீஸ் படையையே முழுமையாக நம்பி உள்ளனர். உலகின் முக்கிய நாடுகளில் ஒன்றான ரஷ்யத் தலைவர் மீதான உத்தரவு என்பதால் உலக நாடுகள் இதைச் செயல்படுத்த வாய்ப்பு குறைவு.

வாய்ப்பு குறைவு
ஒரு எடுத்துக்காட்டிற்குச் சொல்ல வேண்டும் என்றால் முன்னாள் சூடான் தலைவர் ஓமர் அல்-பஷீர் மீது ஐசிசி இதேபோல வாரண்ட் பிறப்பித்து இருந்தது. இருப்பினும், அவர் தென்னாப்பிரிக்கா, ஜோர்டான் எனப் பல சர்வதேச நீதிமன்றத்தின் உறுப்பு நாடுகளுக்குச் சென்றார். அவர் 219இல் பதவியில் இருந்து நீக்கப்பட்ட போதிலும், இன்னும் அவர் சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை. எனவே, உக்ரைன் போர் விவகாரத்தில் இது முக்கியமான நடவடிக்கை என்றாலும் கூட புதின் கைதாக வாய்ப்புகள் மிக மிகக் குறைவு என்றே வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ரஷ்யா மறுப்பு
முதலில் பார்த்தோம் என்றால் அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகளைப் போலச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐசிசி) ரஷ்யா உறுப்பினராக இல்லை. இருப்பினும், உக்ரைன் ஐசிசி வரம்பை ஏற்றுக் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே புதின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய முடிந்தது. இருப்பினும், இந்த வாரண்டை ரஷ்யா நிராகரித்துவிட்டது. ஐசிசி அதிகார வரம்பை ரஷ்யா அங்கீகரிக்கவில்லை என்பதால் இதை ஏற்க முடியாது என்று ரஷ்யா திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. கடந்த காலங்களிலும் ரஷ்யா எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனது குடிமக்களைச் சர்வதேச அமைப்புகளிடம் ஒப்படைத்ததே இல்லை.

ஒரே வாய்ப்பு
ரஷ்யா முதலில் ஐசிசி குறித்த சட்டத்தில் கையெழுத்திட்டே இருந்தது. இருப்பினும், உறுப்பினராக ஆவதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.. ஜார்ஜியாவில் 2008இல் நடந்த போர் குறித்து ரஷ்யாவுக்கு எதிராக ஐசிசி விசாரணையைத் தொடங்கிய நிலையில், ரஷ்யா தனது கையெழுத்தை வாபஸ் பெறுவதாக 2016இல் அறிவித்துவிட்டது. எனவே, இப்போது ரஷ்யா ஐசிசி உறுப்பு நாடு இல்லை. இதனால் ரஷ்யாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே, புதின் கைதாக வாய்ப்புள்ளதாகச் சர்வதேச வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

டாப் தலைவர்கள்
அதேநேரம் இதற்கு முன்பு டாப் தலைவர்கள் பலர் மீதும் ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. செர்பிய முன்னாள் அதிபர் ஸ்லோபோடன் மிலோசெவிச் 2006இல் விசாரணையை எதிர்கொண்டார். விசாரணை நடக்கும்போதே அவர் உயிரிழந்தார். முன்னாள் போஸ்னிய செர்பியத் தலைவர் ரடோவன் கராட்சிக் 2008 கைது செய்யப்பட்டார். அவர் இனப்படுகொலை வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டார், மேலும் அவரது ராணுவத் தலைவர் ரட்கோ மலாடிக் 2011இல் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
-
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள்












Click it and Unblock the Notifications