Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெரிய ட்விஸ்ட்! டெல்லி "பவர்" யாருக்கு.. மத்திய அரசு கொண்டு வரும் அவரச சட்டம்! அடுத்து என்ன நடக்கும்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி அரசுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் இடையே அதிகாரிகள் நியமனம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்பை ரத்து செய்யும் வகையில் மத்திய அரசு அவசரசட்டம் கொண்டு வந்துள்ளது. இதில் அடுத்து என்ன நடக்க வாய்ப்பு உள்ளது என்பதைப் பார்க்கலாம்.

நமது நாட்டில் இப்போது 28 மாநிலங்களும் 8 யூனியன் பிரதேசங்களும் இருக்கிறது. தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே அனைத்து அதிகாரங்களும் இருக்கிறது.

What can happen in Delhi as Centre overturning Unanimous verdict Supreme court

யூனியன் பிரதேசங்கள் என்பது குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட துணை நிலை ஆளுநர் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. யூனியன் பிரதேசங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தாலும் கூட துணை நிலை ஆளுநருக்கு அங்கு அதிக அதிகாரம் இருக்கும். டெல்லியில் இப்போது ஆம் ஆத்மி ஆட்சியில் இருக்கும் நிலையில், அங்கே ஆளுநருக்கும் அரசுக்கும் இடைய மோதல் தொடர்ந்து வருகிறது.

டெல்லி: சிறப்பு அதிகாரங்கள், சொந்த சட்டசபையைக் கொண்ட யூனியன் பிரதேசமாக டெல்லி இருக்கிறது. அங்கே ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளும் டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த போதிலும் டெல்லிக்கு முழு மாநிலத்திற்கான அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. அதேநேரம் துணை நிலை ஆளுநருக்கும் டெல்லி அரசுக்கும் இடையே இப்போது இருப்பதைப் போல எந்தக் காலத்திலும் மோதல் இருந்ததே இல்லை.

துணைநிலை ஆளுநர் சக்சேனா மீது டெல்லி அரசு அடுக்கடுக்காக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. சக்சேனா தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல் அவர் அமைச்சர்களைத் தொடர்பு கொள்ளாமல் நேரடியாக அதிகாரிகளுடன் கூட்டங்களை நடத்துகிறார் என்றும் அரசு நடவடிக்கையில் தலையிட்டதாக ஆம் ஆத்மி கடந்த ஒரு வருடமாகக் குற்றஞ்சாட்டி வருகிறது.

இது குறித்து முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சுப்ரீம் கோர்டில் வழக்கும் தொடர்ந்திருந்தார். அதாவது அமைச்சர்கள் நடத்தும் கூட்டங்களுக்கு அதிகாரிகள் வருவதில்லை என்றும் அழைப்புகளை எடுப்பதில்லை என்றும் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தார். இருப்பினும், அதிகார வரம்பிற்குள் இருந்தே செயல்படுவதாகத் துணை நிலை ஆளுநர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

தீர்ப்பு: இது தொடர்பாக ஆம் ஆத்மி தொடர்ந்து வழக்கில் தான் சில நாட்களுக்கு முன்பு முக்கிய தீர்ப்பு வந்தது. அதாவது ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும் நியமிக்கவும் மாநில அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது; துணைநிலை ஆளுநர்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இரு அமைச்சர்கள் கைதால் இக்கட்டான சூழலில் இருந்த ஆம் ஆத்மிக்கு சுப்ரீம் கோர்டின் இந்தத் தீர்ப்பு சாதமாக இருந்தது. அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு வழங்கவில்லை என்றால் அரசியலமைப்பின் அடிப்படையே கேள்விக்குறியாகிவிடும் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது. இந்த தீர்ப்பு வெளியான உடனேயே கெஜ்ரிவால் சில முக்கிய அதிகாரிகளையும் மாற்றியிருந்தார்.

இந்தச் சூழலில், புதிய ட்விஸ்ட்டாக இடமாற்றம் உள்ளிட்ட விஷயங்களில் டெல்லி லெப்டினன்ட் கவர்னருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் மத்திய அரசு ஒரு அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் அதிகாரிகளின் நியமனங்களை இந்த நிரந்தர அமைப்பு கவனிக்கும் என்ற நிலை உருவாகும். இது சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் அளித்த உத்தரவையே ரத்து செய்யும் வகையில் இருக்கிறது.

முந்தைய தீர்ப்புகளைப் போல இல்லாமல் இந்த முறை அனைத்து நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பையே வழங்கியுள்ளனர். அந்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யும் வகையில் இந்த அவசரச் சட்டம் இருப்பதாகப் பலரும் கூறுகின்றனர்.

மாற்ற முடியுமா: சரி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யும் வகையில் அரசால் நடவடிக்கை எடுக்க முடியுமா என்றால் முடியும் என்பதே பதிலாக இருக்கிறது. அதற்கான சட்டத்தை இயற்றுவதன் மூலம் நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. இருப்பினும், சட்டம் வெறுமனே உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக இருக்க முடியாது, அது நீதிமன்றத்தின் அடிப்படை நியாயத்தை நிவர்த்தி செய்ய வேண்டும். அதாவது தீர்ப்பின் அடிப்படையை நீக்கும் வகையில் ஒரு சட்டம் இயற்றப்படலாம்.

கடந்த காலங்களில் இதுபோன்ற சட்டங்கள் குறித்த வழங்கிகளிலும் உச்ச நீதிமன்றம் இதே தீர்ப்பையே வழங்கியுள்ளது. அதாவது நீதிமன்றம் சுட்டிக்காட்டிய சிக்கலை அகற்றும் வகையில் சட்டத்தைக் கொண்டு வரலாம் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக டெல்லி அரசு வாதிடலாம்..

அடுத்து என்ன நடக்கும்: இப்போது கொண்டு வரப்பட்டுள்ள அவசரசட்டம் டெல்லி அரசிடம் இருந்து இந்த அதிகாரத்தைப் பறித்து, டெல்லி முதல்வர் மற்றும் டெல்லி அரசு தலைமைச் செயலாளர் மற்றும் முதன்மை உள்துறைச் செயலர் ஆகியோரைக் கொண்ட குழுவிடம் அளிக்கிறது. அதாவது நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களில் டெல்லி முதல்வரின் முடிவை அந்த இரு அதிகாரிகளால் மாற்ற முடியும். இந்த அவசரச் சட்டம் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்ட அடிப்படை சிக்கலைத் தீர்க்கவில்லை என்று வழக்கு தொடரப்படலாம்.

அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறும் சட்டத்தையோ அல்லது அரசியலமைப்பு திருத்தத்தையோ நாடாளுமன்றத்தால் கூடக் கொண்டு வர முடியாது. 2018இல் தீர்ப்பில் டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க முடியாது என்றாலும், கூட்டாட்சி கொள்கை அதற்குப் பொருந்தும் என்றே நீதிமன்றம் கூறியிருந்தது. எனவே, டெல்லி அரசு இப்போது தொடர்ந்துள்ள சீராய்வு மனு முக்கியமானதாக இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+