"ஏற்றுக்கொள்ளவே முடியாது.. துரதிர்ஷ்டவசமானது!" ராஜீவ் கொலை வழக்கு! 6 பேரை விடுவிக்க காங். எதிர்ப்பு
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலிருந்த ஆறு பேரை விடுவித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளது.
கடந்த 1991ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிரசாரத்திற்காகத் தமிழகம் வந்த போது, ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்
பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ் என ஏழு பேரும் இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். கடந்த 30 ஆண்டுகளாக அவர்கள் சிறையில் உள்ளனர்.

உச்ச நீதிமன்றம்
இதனிடையே ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் எனத் தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் ஆளுநர் முடிவெடுக்கத் தாமதித்ததைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனைக் கடந்த மே மாதம் விடுதலை செய்தது. இதேபோல தங்களையும் விடுவிக்க வேண்டும் என்று நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேரும் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுத் தாக்கல் செய்தனர்.

உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பேரறிவாளனை விடுவிக்கும் காரணமே இவர்களும் பொருந்தும் என்று கூறி நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுவிக்க உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. ஆறு பேர் விடுவிக்கப்பட்டதற்குத் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்று வருகின்றன. அதேநேரம் காங்கிரஸ் கட்சி இதை ஏற்க முடியாது என்றும் ஏமாற்றம் தருகிறது என்றும் கூறி வருகிறது.

காங்கிரஸ்
இது தொடர்பாகக் காங்கிரஸ் எம்பியும், பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ், "முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுவித்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.. மேலும், முற்றிலும் தவறானது. இந்த தீர்ப்பை முற்றிலுமாக ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகவே காங்கிரஸ் கட்சி பார்க்கிறது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இந்திய நாட்டு மக்களின் உணர்வைப் புரிந்து கொண்டு செயல்படாதது மிகவும் துரதிர்ஷ்டவசமானது" என்று அவர் தெரிவித்து உள்ளார்.

விமர்சனம்
முன்னதாக இது குறித்து கருத்து கூறியிருந்த காங்கிரஸின் தமிழக எம்பி திருநாவுக்கரசு, "6 பேரின் விடுதலையால் எல்லோரும் மகிழ்ச்சியடைவார்கள் என்று சொல்ல முடியாது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பைச் சரியான முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது"என்று கூறி இருந்தார். இப்போது காங்கிரஸின் ஜெய்ராம் ராமேஷும் கிட்டதட்ட அதே கருத்தைக் கூறியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவருக்கும் முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், 2000ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தியின் மனைவியும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி தலையிட்ட பின்னர் நளினிக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. கடந்த 2008இல் ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்தி வேலூர் சிறையில் இருந்த நளினியை நேரில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

தீர்ப்பு
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மற்றவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையும் கடந்த 2014இல் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. சுமார் 30 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் இவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனத் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இப்போது இந்தத் தீர்ப்பு வந்துள்ளது.
-
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்தா? சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை.. விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications