உங்க கிட்ட கேட்காம இருக்க மாட்டோம்.. ஓபிஎஸ்ஸுக்கு வந்த ஒளி.. எடப்பாடி வழக்கில் கோர்ட்டில் செம ட்விஸ்ட்
டெல்லி: அதிமுகவில் சட்ட விதிகளை திருத்தியதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கில் இன்று ஓ பன்னீர்செல்வம் முக்கியமான வாதங்களை வைத்தார்.
இந்த வழக்கில் இன்று நடத்தப்பட்ட விசாரணையில்.. எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் வைக்கையில் , கர்நாடக தேர்தல் நெருங்குவதால் இதில் தீர்ப்பு வழங்க வேண்டும். அதில் வேட்பு மனுவை முன்மொழிந்து கையெழுத்திட வேண்டியுள்ளது.
அதற்கு பொதுச்செயலாளருக்கு அதிகாரம் இருக்க வேண்டும். அந்த அதிகாரத்தை செயல்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும். ஆனால் இதில் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்காமல் இருப்பதால் எங்களால் பணிகளை செய்ய முடியவில்லை.

ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். அதனால் அவரின் வாதத்தை ஏற்க கூடாது. தேர்தல் ஆணையம் இதில் உடனே முடிவு எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும், என்று வாதம் வைத்தார்.
குறுக்கிட்ட நீதிபதி தேர்தல் ஆணைய வழக்கறிஞர்களை பார்த்து.. தேர்தல் ஆணையம் இதில் எப்போது முடிவு எடுக்க முடியும் என்று கேட்டார்.
உடனே தேர்தல் ஆணைய வழக்கறிஞர்கள்.. ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறோம். இதில் 10 நாட்களில் முடிவு செய்வோம் என்று குறிப்பிட்டார்.
இதை கேட்டதும் குறுக்கிட்ட ஓ பன்னீர்செல்வம் தரப்பு.. நான் அதிமுகவில் இருந்து முறைகேடாக நீக்கப்பட்டு உள்ளேன். சிவில் வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில்
நிலுவையில் உள்ளன.
அதில் இன்னும் முடிவுகள் எடுக்கப்படவில்லை. அதில் முடிவுகள் எடுக்காமல் இதில் உத்தரவு போட கூடாது, என்று கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆறுதல் சொன்ன நீதிபதிகள்.. கவலைப்பட வேண்டாம். இந்த வழக்கில் உங்கள் கருத்தையும் கேட்போம். உங்கள் கருத்தை கேட்காமல் இதில் முடிவு எடுக்க மாட்டோம், என்று குறிப்பிட்டார்.

வழக்கு பின்னணி: அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு எதிரான எடப்பாடி தரப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் செய்த மனு தாக்கல் மீது இன்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், ஜூலை 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
அதிமுக பொதுக்குழு வழக்கில் வென்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அதே நாளில் அதிமுகவின் பொதுச்செயலாளராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளார். அதாவது அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அதிமுக தேர்தல் குழு நிர்வாகிகள் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
ஆனால் அதிமுகவின் பொதுக்குழு முடிவை இன்னும் தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட எந்த முடிவுகளையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை தேர்தல் ஆணையம் இப்போது ஏற்க வேண்டிய அவசியம் இல்லை.

தேர்தல் ஆணையம் அங்கீகரித்தால் மட்டுமே இது செல்லும். தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கலாம். தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது. தேர்தல் ஆணைய முடிவுகள் தன்னிச்சையானது.
இதை எதிர்த்தே எடப்பாடி பழனிசாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அதிமுகவின் பொதுச்செயலாளராக தான் தேர்வு செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ள வேண்டும், பொதுக்குழு முடிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications