Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பதறிய மத்திய அமைச்சர்.. டெல்லி நிலநடுக்கத்தில் உயிர் காக்க மான்சுக் மாண்டவியா செய்தது என்ன? போட்டோ

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நேபாளத்தில் இன்று மதியம் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் டெல்லியிலும் பூமி குலுங்கியது. இந்த நிலநடுக்கத்தின்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா உயிர் காக்க செய்தது குறித்து தகவலும், அதுதொடர்பான போட்டோவும் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று தொடர்ந்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று மதியம் 2.21 மணிக்கு நேபாளத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 என்ற அளவில் பதிவானது.

 What did Union Minister Mansukh Mandaviya when earthquake jolts in Delhi NCR?

அடுத்ததாக6.2 என்ற அளவிலும், 3வதாக 3.8 ரிக்டர் அளவிலும், 4வதாக 3.1 என்ற அளவிலும் ஏற்பட்டது. நேபாளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் என்பது இந்தியாவின் பல்வேறு இடங்களில் உணரப்பட்டது.

அருணாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லியில் என்சிஆர் பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. டெல்லியில் உள்ள கட்டடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் வீடு, அலுவலகங்களில் இருந்து அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். டெல்லியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. டெல்லி என்சிஆர் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது சீலிங் பேன்கள், கடிகாரங்கள், அலங்கார விளக்குகள் உள்ளிட்டவை அசைந்தன. மேலும் அலமாரிகள் அசைந்ததோடு, அதில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தன.

இந்த வீடியோக்களை பலரும் இணையதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தான் டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது அங்கு தான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா இருந்தார். டெல்லியில் உள்ள நிர்மான் பவன் அலுவலகத்தில் அவர் வழக்கம்போல் பணி செய்து கொண்டிருந்தார். இந்த வேளையில் தான் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து மான்சுக் மாண்டவியா மற்றும் அலுவலக அதிகாரிகள் என அனைவரும் அலுவலகத்தை விட்டு உடனடியாக வெளியேறி வெளியே வந்தனர். அலுவலகத்தின் அருகே உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் இடத்தில் அவர்கள் பாதுகாப்பாக நின்றனர். இதுதொடர்பான போட்டோ தற்போது இணையதளங்களில் வெளியாக பரவி வருகிறது.

மேலும் இந்த நிலநடுக்கத்துக்கு பிறகு டெல்லி போலீஸ் சார்பில் எக்ஸ் (முன்பு ட்விட்டர்)பக்கத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில், ‛‛அனைவரும் பத்திரமாக இருப்பதாக நம்புகிறோம். நிலநடுக்கத்தின்போது அனைவரும் கட்டங்களில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வர வேண்டும். மேலும் நாம் பயப்பட வேண்டாம். அதேபோல் லிப்ட் உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டாம். ஏதாவது அவசர உதவி தேவைப்பட்டால் 112 என்ற எண்ணை அழைக்கவும்'' என கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+