வீல் சேரில் வந்த பெண்ணை.. வாசலிலேயே தடுத்து நிறுத்திய ஹோட்டல்.. என்ன நடந்தது..?
வீல் சேர் பெண்ணை ஓட்டல் ஒன்று உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது
டெல்லி: வீல் சேரில் வந்த பெண்ணை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தியதாக ரெஸ்ட்டாரண்ட் ஒன்றின் மீது புகார் எழுந்துள்ளது.
டெல்லியில் கடந்த செப்டம்பர் மாதம் ஒரு ரெஸ்ட்டாரெண்ட்டில் பரபரப்பு சம்பவம் நடந்தது.. அந்த ஹோட்டலுக்கு பெண் ஒருவர் புடவை அணிந்து சென்றுள்ளார்..
ஆனால், அந்தப் பெண்ணை ஹோட்டல் ஊழியர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை.. தன்னை உள்ளே அனுமதிக்க மறுப்பது ஏன்? என அந்த பெண் கேட்க, புடவை அணிந்தவர்களுக்கு அனுமதி கிடையாது என ஓட்டல் சார்பில் சொன்னார்களாம்..

சேலை அணிந்து வந்த பெண்
அதாவது அதாவது மார்டன் டிரஸ் அணிந்து வருபவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளதாக தெரிகிறது.. இதனால், ஆத்திரமும் அதிர்ச்சியும் அடைந்த அந்த பெண், அந்த ஹோட்டல் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.. அந்த ஊழியர்களிடம் அவர் வாக்குவாதம் செய்யும் காட்சிகளையும் அவரே வீடியோவாக பதிவு செய்து சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டிருந்தார்.

ஹேஷ்டேக்
இதையடுத்து அந்த ரெஸ்டாரண்ட்டுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.. புடவை கட்டி சென்ற பெண்ணுக்கு ஆதராவாக saree என்ற ஹேஷ்டேக்கையே நெட்டிசன்கள் டிரெண்ட் செய்தனர். ஆனால், இந்த சம்பவத்துக்கு ஹோட்டல் நிர்வாகம் மறுப்பு தெரிவித்திருந்தது.. இதற்கு பிறகு, அடுத்த சில தினங்களிலேயே, பொது சுகாதார இன்ஸ்பெக்டர், சுகாதார வர்த்தக உரிமம் இல்லாமலும், சுகாதாரமற்ற நிலையிலும் ரெஸ்டாரண்ட் இயங்கி வந்ததை கண்டு, அதை மூடுவதற்கு நோட்டீஸ் அனுப்பினார்.. அதன்பேரில் அந்த ரெஸ்ட்டாரண்ட் மூடப்பட்டுவிட்டது வேறு கதை.

ரெஸ்டாரெண்ட்
ஆனால், இதே போன்ற சம்பவம் மீண்டும் ஒரு ஹோட்டலில், இதே டெல்லியில் நடந்துள்ளது.. டெல்லி அருகே குருகிராமில் 'ராஸ்டா' எனப்படும் பப் ஒன்று இயங்கி வருகிறது.. இது அந்த பகுதியில் ரொம்ப ஃபேமஸ் ஆனது.. இந்த பப்பிலேயே ரெஸ்ட்டாரண்டும் சேர்ந்துள்ளது.. இந்த ரெஸ்ட்டாரெண்டுக்கு சிரிஸ்டி பாண்டே என்ற மாற்று திறனாளி பெண், சாப்பிடுவதற்காக தன்னுடைய நண்பர் மற்றும் குடும்பத்தினருடன் சென்றுள்ளார்..

அனுமதி மறுப்பு
மாற்று திறனாளி பெண் வீல் சேரில் சென்றிருக்கிறார்.. ஆனால், வாசலில் நின்றிருந்த அந்த ரெஸ்ட்டாரெண்ட் ஊழியர்கள் சிரிஸ்டியையும், அவரது குடும்பத்தாரையும் ஹோட்டலின் உள்ளே விட மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.. பலமுறை கேட்டுக் கொண்டும், சாப்பிடுவதற்கு உள்ளே செல்ல அனுமதி தரவில்லையாம்.. இது வாக்குவாதமாக வெடித்துள்ளது.. இந்த விவரத்தை சிரிஸ்டி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விரிவாக பதிவிட்டுள்ளார்.

என்ன நடந்தது
அதில், 'நாங்கள் ராஸ்டா ரெஸ்டாரெண்ட்டுக்கு நேற்று சாப்பிட போனோம்.. ஆனால் எங்களை உள்ளே விட மறுத்துவிட்டனர்.. உடனே அந்த மானேஜர் அங்கே வந்தார்.. அவர் சொன்ன வார்த்தை அப்படியே எங்களை அதிர செய்துவிட்டது.. வீல்சேரை உள்ளே விட முடியாது, மற்றவர்களுக்கு எல்லாம் சாப்பிடுவதற்கு தொந்தரவாக இருக்கும்" என்று பதிவிட்டிருந்தார். இந்த ட்விட்டர் பதிவானது, சோஷியல் மீடியாவில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. இணையவாசிகள் அந்த ரெஸ்ட்டாரண்ட்டுக்கு கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்தனர்..

அறிக்கை
ஆனால், அந்த ரெஸ்ட்டாரண்ட் நடந்த சம்பவத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.. இது தொடர்பாக ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அதில், 'வீல்சேரில் வந்த பெண்ணுக்கு அனுமதி தந்தோம்.. ஆனால், அதற்கு பிறகு அவர் மேடையில் ஏறி டான்ஸ ஆட விரும்பினார்... ஆனால் அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது... அவர் அங்கு சென்றால் அவருக்கு விபத்து ஏற்படும் என்பதாலேயே அனுமதி தர மறுத்தோம்" என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications