"கொட்டிய மழை.. திடீரென காதை பிளந்த அந்த சத்தம்.." டெல்லி ஏர்போர்ட் விபத்து! அதிகாலை என்ன நடந்தது!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் டெல்லி ஏர்போர்ட்டில் இன்று காலை திடீரென விபத்து ஏற்பட்டது. டெல்லி ஏர்போர்ட் டெர்மினல் ஒன்றில் நடந்த இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதற்கிடையே இன்று அதிகாலை நடந்த இந்த விபத்தில் என்ன நடந்தது என்பது குறித்துக் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.

டெல்லியில் கடந்த சில மாதங்களாகவே அதீத வெயில் வாட்டி வதைத்து வந்தது. பொதுமக்களால் மதிய நேரங்களில் வெளியே கூட செல்ல முடியாத அளவுக்கு வெயில் அதிகமாகவே இருந்தது. இதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

weather rain delhi

ஏர்போர்ட் விபத்து: அதேநேரம் வெயில் அதிகமாக இருந்த போதே இந்தாண்டு பருவமழை காலத்தில் அங்கு மழை அதிகம் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்தனர். அதேபோல நேற்று அங்குக் கனமழை கொட்டியது. இந்த கனமழையால் டெல்லியில் பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு நீர் தேங்கின. அதேபோல டெல்லி ஏர்போர்ட்டிலும் இன்று அதிகாலை விபத்து அரங்கேறியது. இதற்கிடையே இன்று காலை விபத்து எப்படி நடந்தது என்பது குறித்த சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்று காலை 5 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. டெல்லியில் கனமழை கொட்டி வரும் நிலையில், இதனால் இன்று அதிகாலை டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1இன் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்துள்ளது. குறிப்பாகப் பழைய Departure பகுதியின் முகப்பின் ஒரு பகுதி அதிகாலை 5 மணியளவில் இடிந்து விழுந்தது.

பெரும் விபத்து தவிர்ப்பு: இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், சிலருக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யப்பட்டுள்ளதாக டெல்லி விமான நிலைய நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை நேரத்தில் இந்த விபத்து நடந்ததால் அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லை. ஒரு வேலை பகல் நேரத்தில் விபத்து நடந்து இருந்தால் அது மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த விபத்து காரணமாக டெர்மினல் 1 பகுதியில் விமானச் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுவரை 6 விமானங்களின் புறப்பாடு, 12 விமானங்களின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காக மதியம் 2 மணி வரை இந்த டெர்மினல் மூடப்பட்டுள்ளது. அதுவரை இங்குப் புறப்பாடு மற்றும் வருகை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

டெல்லி விபத்து: டெல்லியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் டெல்லி ஏர்போர்ட்டில் இன்று காலை திடீரென விபத்து ஏற்பட்டது. டெல்லி ஏர்போர்ட் டெர்மினல் ஒன்றில் நடந்த இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தார். இதற்கிடையே இன்று அதிகாலை நடந்த இந்த விபத்தில் என்ன நடந்தது என்பது குறித்துக் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சர்வதேச விமானச் சேவை: விபத்து நடந்த டெர்மினல் 1 பகுதியில் உள்நாட்டு விமானங்கள் மட்டுமே இயங்குவதால் சர்வதேச விமானச் சேவை எதுவும் பாதிக்கப்படவில்லை. அதேநேரம் விபத்து காரணமாக இடிபாடுகள் இருப்பதால் அப்பகுதியில் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டுள்ளன.

மேலும், இந்த விபத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. இந்த விபத்தில் மேற்கூரை ஷீட் சரிந்து விழுந்துள்ளன. அது மட்டுமின்றி சப்போர்ட் பீம்களும் சரிந்துள்ளன. இதனால் டெர்மினலின் பிக்-அப் மற்றும் டிராப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+