இரவோடு இரவாக.. கட்டிட சுவர்கள் முழுக்க பிராமணர்களுக்கு எதிரான வாசகங்கள்! ஜேஎன்யுவில் திடீர் பரபரப்பு
டெல்லி: ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் திடீரென சுவர்களில் எழுதப்பட்டுள்ள வாசகங்களால் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தலைநகர் டெல்லியில் ஜேஎன்யு எனப்படும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் தங்கிப் படித்து வருகின்றனர்.
இருப்பினும், அங்கு சில சர்ச்சை சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருவதும் உண்டு. அப்படியொரு சம்பவம் தான் இப்போது ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் நடந்துள்ளது.

ஜேஎன்யு பல்கலைக்கழகம்
இந்தச் சம்பவத்திற்கு அங்குள்ள ஏபிவிபி உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அதாவது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பல கட்டிடங்களில் பிராமண சமூகத்தினருக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளன. அதில் பிராமணர்களுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன.

பிராமண எதிர்ப்பு வாசங்கள்
ஸ்கூல் ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ்- II கட்டிடத்தின் சுவர்கள் பிராமண மற்றும் பனியா சமூகங்களுக்கு எதிரான வாசங்கள் எழுதப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளன. "பிராமணர்களே வளாகத்தை விட்டு வெளியேறுங்கள்", "ரத்தம் சித்த வேண்டியிருக்கும்", "பிராமணர்களே இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்..", "பிராமினர்கள்- பனியாக்களே, நாங்கள் உங்களுக்காக வருகிறோம்! பழிவாங்குவோம்" போன்ற வாசகங்கள் அந்த சுவர்களில் எழுதப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.

கண்டனம்
இந்தச் சம்பவம் குறித்த செய்திகள் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இது தொடர்பாக ஜேஎன்யு பல்கலைக்கழகம் விளக்கமளித்துள்ளது. ஜேஎன்யு அனைவருக்கும் சொந்தமானது என்பதால் இதுபோன்ற சம்பவங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் இந்தச் சம்பவத்தைத் துணைவேந்தர் சாந்திஸ்ரீ டி பண்டித் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ள ஜேஎன்யு நிர்வாகம், இது தொடர்பா விரிவான அறிக்கை சமர்ப்பிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஜேஎன்யு அனைவரையும் உள்ளடக்கியது என்றும் வளாகத்தில் எந்த விதமான வன்முறைக்கும் இடமில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஏபிவிபி குற்றச்சாட்டு
பல்கலைக்கழகத்தில் படிக்கும் இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்களே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என்று ஆர்எஸ்எஸின் மாணவ அமைப்பான ஏபிவிபி குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக ஏபிவிபி ஜேஎன்யு தலைவர் ரோஹித் குமார் கூறுகையில், "கம்யூனிஸ்ட்கள் எங்கள் கல்வி நிறுவனங்களை நாசப்படுத்துவதை ஏபிவிபி கண்டிக்கிறது. ஜேஎன்யுவின் ஸ்கூல் ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ்- II கட்டிடத்தில் உள்ள சுவர்களில் கம்யூனிஸ்ட்டுகள் தான் இப்படி எழுதியுள்ளனர்.

இடதுசாரிகள்
அவர்களைக் கண்டிக்கும் பேராசிரியர்களின் அறைகளையும் அவர்கள் சிதைத்துள்ளனர்.. கல்வி நிறுவனங்களை ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.. சமூகத்திலும் மாணவர் மத்தியிலும் விஷயத்தைப் பரப்ப நாம் கல்வி நிறுவனங்களைப் பயன்படுத்தக் கூடாது" என்று அவர் தெரிவித்தார். அதேநேரம் இது தொடர்பாக இடதுசாரி அமைப்புகள் எந்தவொரு பதிலையும் கூறவில்லை.

ஆசிரியர் அமைப்புகள்
இந்த செயலை ஜேஎன்யு ஆசிரியர் ஃபார்ம் கண்டித்துள்ள நிலையில், இதற்கு இடதுசாரி அமைப்பு தான் காரணம் என அவர்களும் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் தங்கள் ட்விட்டரில், "இடதுசாரி கேங் ஒவ்வொரு எதிர்ப்புக் குரலையும் மிரட்டுகிறது. இதற்குப் பதிலாக அவர்கள் பரஸ்பர மரியாதை, நாகரீகம் மற்றும் அனைவருக்கும் சமமான மதிப்பை அளிக்கும் மாணவ பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறோம். இது மிகவும் வருந்தத்தக்க நாசகார செயல்!" என்று அவர்கள் தங்கள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications