Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok sabha: மோடி இருக்கையை சுத்துப்போட்ட பெண் எம்பிக்கள்! பின்வாங்கும்படி ஜோதிமணியிடம் கும்பிட்ட பாஜக தலைகள் - வீடியோ

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத்தில், ஜனாதிபதி திரெளபதி முர்மு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது கடந்த 4ம் தேதி பிரதமர் மோடி பேச இருந்தார். மோடி வருவதற்கு முன்பு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உள்பட பெண் எம்பிக்கள் மோடியின் இருக்கையை சுத்துப்போட்டனர். இதனால் பிரதமர் மோடி சபைக்கு வராமல் அவரது உரை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தான் அந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28 ம் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் தொடங்கியது. அதன்பிறகு கடந்த 1ம் தேதி நாடாளுமன்ற லோக்சபாவில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

what-happened-in-parliament-lok-sabha-on-january-4-woman-mps-surrounded-pm-modi-seat-video-release

அதன்பிறகு ஜனாதிபதி திரெளபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் கீழ் எம்பிக்கள் உரையாற்றினர். கடந்த 4ம் தேதி பிரதமர் மோடி லோக்சபாவில் பதிலுரை வழங்க இருந்தார்.

4ம் தேதி என்ன நடந்தது?

அதன்படி கடந்த 4ம் தேதி மாலை 5 மணிக்கு நாடாளுமன்ற லோக்சபாவில் பிரதமர் மோடி உரையாற்றுவதாக அறிவிக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி லோக்சபாவிற்கு வருகை தர இருந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அமெரிக்கா - இந்தியா வர்த்தகத்தில் மோடி சரணடைந்துவிட்டார் என்று கூறி கோஷமிட்டனர். அதோடு சீனா எல்லை விவகாரம் பற்றி எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேச அனுமதி மறுத்தததை கண்டித்து கோஷமிட்டனர்.

பெண் எம்பிக்கள் முற்றுகை

அதோடு பிரதமர் மோடியின் இருக்கையை காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உள்பட பல பெண் எம்பிக்கள் முற்றுகையிட்டனர். கடும் கூச்சல் குழப்பத்தால் நாடாளுமன்ற லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.

பிரதமர் மோடி பதிலுரை வழங்கவில்லை. அவர் உரையாற்ற சபைக்கு வரவில்லை. இதற்கிடையே தான் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் பிரதமர் மோடியை தாக்கும் திட்டத்தை கையில் வைத்திருந்தனர். இதனால் தான் பிரதமர் மோடி உரையாற்றவில்லை என்று பாஜகவினர் கூறினர்.

மோடியை தாக்க முயற்சி?

இந்த அமளி நடந்தபோது பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் லோக்சபாவில் இல்லை . இதுபற்றி சபையில் இருந்த பாஜக எம்பி மனோஜ் திவாரி கூறியதாவது:

‛‛சபை ஒத்திவைக்கப்பட்ட பின்னரும் கூட காங்கிரஸ் உள்பட பிற எதிர்க்கட்சி பெண் எம்பிக்கள் ஆளும்கட்சி எம்பிக்களின் இருக்கைகளை நோக்கி வந்தனர். பிரதமர் மோடியின் இருக்கையை முற்றுகையிட்டனர். தங்கள் இருக்கைகளுக்குத் திரும்புமாறு மூத்த அமைச்சர்கள் கூறினர்.

ஆனால் அவர்கள் அதனை புறக்கணித்தனர். நிலைமை கட்டுப்பாட்டை இழந்து சென்றதால் பிரதமர் மோடியால் லோக்சபாவுக்குள் நுழைய முடியவில்லை. எதிர்க்கட்சி பெண் எம்பிக்களின் ஆக்ரோஷமான உடல்மொழி பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியது. பிரதமர் மோடியை தாக்கும் எண்ணம் கூட இருந்திருக்கலாம்'' என்றார்.

வீடியோ வெளியீடு

இதற்கிடையே தான் தற்போது நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கடந்த 4ம் தேதி லோக்சபாவில் என்ன நடந்தது? என்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியாவில் கரூர் எம்பி ஜோதிமணி உள்பட பிற பெண் எம்பிக்கள் சபையின் மையப்பகுதிக்கு செல்கின்றனர். அதன்பிறகு மோடியின் இருக்கை அருகே சென்று பேனரை காட்டுகின்றனர்.

கையெடுத்து கும்பிட்டு...

இந்த வேளையில் மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், கிரண் ரிஜுஜு, பிரகலாத் ஜோஷி, அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் அவர்களை திரும்ப செல்லும்படி கூறுகின்றனர். ஆனால் அவர்கள் திரும்ப செல்லவில்லை.

இதையடுத்து பாஜக தலைவர்கள் கையெடுத்து கும்பிட்டு அவர்களை அங்கிருந்து செல்லும்படி சொல்கின்றனர். ஆனால் அவர்கள் யாரும் கேட்காத நிலையில் மத்திய அமைச்சர்கள், பாஜக எம்பிக்கள் சபையில் இருந்து வெளியேறி செல்கின்றனர்.

காங்கிரஸ் மீது விமர்சனம்

இந்த பதிவில் கிரண் ரிஜுஜு, ‛‛காங்கிரஸ் தங்களது எம்பிக்களின் இழிவான நடத்தையை நினைத்து பெருமை கொள்கிறது. உண்மையில் நாங்கள் பாஜக எம்பிக்களை தடுத்து நிறுத்தாவிட்டால் அது மோசமான சம்பவத்துக்கு வழிவகுத்து இருக்கும். நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும், புனிதத்தையும் பாதுகாப்பதில் நாங்கள் அதிக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறோம்'' என்று கூறியுள்ளார்.

மேலும் பிரதமர் மோடியின் இருக்கையை முற்றுகையிட்ட பெண் எம்பிக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக எம்பிக்கள் சார்பில் சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் இன்று பாஜக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+