விமானம் புறப்படும் போது.. செல்போனை ஏரோபிளேன் மோடில் போடவில்லை என்றால் என்ன நடக்கும்? இவ்வளவு இருக்கா
டெல்லி: பொதுவாக விமானம் புறப்படும் போது உள்ளே இருக்கும் அனைத்து பயணிகளையும் செல்போனை ஏரோபிளேன் மோடில் போடச் சொல்வார்கள். எதற்காக இப்படி ஏரோபிளேன் மோடில் போட சொல்கிறார்கள். ஒருவேளை யாராவது ஏரோபிளேன் மோடில் போடவில்லை என்றால் என்ன நடக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நமது நாட்டில் விமான பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விமான டிக்கெட் ரேட் குறைவது, பல நகரங்களுக்கு விமானச் சேவை விரிவடைவது உள்ளிட்ட காரணங்களே இதற்குக் காரணமாகும்.

விமானம்:
விமானத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய பொதுவாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதில் முக்கியமானது விமானங்களை ஏரோபிளேன் மோடில் போடுவது. பொதுவாக விமானம் புறப்படும் போதும், தரையிறங்கும் போதும் ஏரோபிளேன் மோடில் போடச் சொல்வார்கள். நாமும் அதுபோல செய்துவிடும். ஆனால், எதற்காக இப்படி ஏரோபிளேன் மோடில் போட சொல்கிறார்கள்.. அப்படி ஏரோபிளேன் மோடில் போடவில்லை என்றால் என்ன நடக்கும்! எனப் பல சந்தேகங்கள் இருக்கும். அதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
நீங்கள் விமானம் டேக் ஆஃப் ஆகும் போது உங்கள் மொபைலை ஏரோபிளேன் மோடில் போடவில்லை என்றால் அது எலெக்ட்ரோமேக்னெட்டிக் சிக்னல்களை வெளியிடும். இது விமானத்தின் தகவல் தொடர்பு மற்றும் நேவிகேஷன் சிஸ்டத்தை பாதிக்கலாம்.. இதன் காரணமாகவே விமானம் டேக் ஆஃப் ஆகும் போது தவறாமல் மொபைலை ஏரோபிளேன் மோடில் போட சொல்கிறார்கள்.
என்ன நடக்கும்:
அதேநேரம் தற்போது வரும் நவீன விமானங்கள் இத்தகைய அபாயங்களில் சிக்காமல் இருக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் செல்போன் யூஸ் செய்தால் பெரிய பிரச்சினை இருக்காது. அதேநேரம் பயணிகள் அனைவரும் செல்போனை யூஸ் செய்யும் போது அது மின்காந்த குறுக்கீட்டை உருவாக்கலாம். இதன் காரணமாகவே செல்போனை ஏரேபிளேன் மோடில் போட சொல்வதாக ஏவியேஷன் டிரெய்னிங் வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இது விமான தரப்பில் இருக்கும் பிரச்சினை.. அதேபோல பயணிகளுக்கும் கூட இதனால் சிக்கல் வரலாம். அதாவது விமானத்தில் நீங்கள் இருக்கும் போது சிக்னல் சரிவரக் கிடைக்காது. எனவே, உங்கள் செல்போன் எந்த டவரில் சிக்னல் கிடைக்கிறது என்பதைத் தேடிக் கொண்டே இருக்கும். இதுபோல அருகே இருக்கும் அனைத்து டவர்களின் சிக்னல்களையும் மாறி மாறி உங்கள் செல்போன் எடுக்க முயலும் போது அது செல்போன் பேட்டரியை காலி செய்துவிடும்.
எளிய விளக்கம்:
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒருவரது செல்போனில் இருந்து வரும் சிக்னல்களால் ஏற்படும் பாதிப்பு ரொம்பவே குறைவு. அதேநேரம் விமானத்தில் இருக்கும் பலர் ஒரே நேரத்தில் செல்போன் யூஸ் செய்ய தொடங்கும் போது அது விமானத்தின் தகவல் தொடர்புக்குச் சிக்கலை உருவாக்கலாம்.
இது தொடர்பாக வல்லுநர்கள் கூறுகையில், "உங்கள் ஃபோனை ஏரோபிளேன் மோடில் வைப்பது என்பது என்பது எளிமையான அதேநேரம் அதிகம் பலன் தரும் வழியாகும். இது விமானத்தில் உள்ள அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.. குறிப்பாகத் தரையிறங்கும் மற்றும் புறப்படும் போது இது மிகவும் முக்கியமானது.. விமானத்தின் ரேடியோ அல்டிமீட்டர் 4 ஜிகா ஹெர்ட்ஸ் வரம்பில் இயங்குகிறது. இது செல்போன்கள் வெளியிடும் 5 ஜி சிக்னல்களை ஒத்து இருப்பதே பிரச்சினை" என்கிறார்கள்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications