மக்களின் அடிப்படை தேவையை கூட நிறைவேற்றாததே.. மோடி அரசின் 7 ஆண்டு சாதனை.. போட்டு விளாசிய சிவசேனா!
டெல்லி: இந்த எழு வருடங்களில் மக்களுக்கு என்ன செய்தது? என்பதை பாஜக சிந்தித்து பார்க்க வேண்டும் என்று சிவசேனா கூறியுள்ளது.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை பிடித்து ஏழு வருடங்களை நிறைவு செய்துள்ளது.
இந்த ஏழு வருடங்களில் மோடி அரசு மக்களுக்கு நலம் பயக்கும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளதாக கூறி நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.

பாஜக என்ன செய்தது?
ஆனால் இந்த ஏழு வருடங்களில் மக்கள் மிகுந்த வேதனையையைத்தான் மக்கள் சந்தித்துள்ளனர். மக்களுக்கு பாஜக அரசு ஏதும் செய்யவில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வசைபாடி வருகின்றன. இந்த நிலையில் பாஜகவின் முன்னாள் நண்பனும், இந்நாள் எதிரியுமான சிவசேனா, இந்த எழு வருடங்களில் மக்களுக்கு என்ன செய்தது? என்பதை பாஜக சிந்தித்து பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளது.

எதுவும் செய்யவில்லை
இது தொடர்பாக எம்.பி,யும், சிவசேனாவின் மூத்த தலைவருமான சஞ்சய் ரவுத் கூறியதாவது:- கடந்த ஏழு ஆண்டுகளில் மோடி அரசாங்கத்தால் எதுவும் செய்யப்படவில்லை. ஆனால் இன்னும் பாஜகவிடம் இருந்து எங்களுக்கு எதிர்பார்ப்பு உள்ளது. மக்கள் இந்த அரசை தேர்ந்தெடுத்துள்ளனர். பாஜக அரசுக்கு பெரும்பான்மை இருப்பதால் பணிகளை செய்யும் என்று நம்ப முடியாது என நாங்கள் கூறவில்லை

வேலையிழப்புகள் அதிகரிப்பு
முதலில் மோடி அரசின் ஐந்தாண்டு ஆட்சி இருந்தது. பின்னர் மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இந்த இரண்டு ஆண்டுகளும் கொரோனா வந்து மக்களை பாழ்படுத்தி விட்டது. பாஜக அரசு நாட்டுக்கு நிறைய செய்ய வேண்டும் கொரோனா தொற்றினால் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து விட்டது. வேலை இழப்புகள் அதிகரித்து விட்டன. மக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதில் கூட சிரமப்படுகின்றனர்.

மோடி அரசு ஆராயணும்
மக்களுக்கு வேலைவாய்ப்பு, உணவு தேவையை பூர்த்தி செய்வது போன்ற மிக எளிய கோரிக்கைகள் உள்ளன. சாமானி மக்கள் பணக்காரர் ஆக விரும்பவில்லை. அடிப்படை தேவையை நிறைவேற்றி கொடுத்தாலே மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.. இந்த ஏழு ஆண்டுகளில் மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதை மோடி அரசு இப்போது ஆராய வேண்டும் என்று சஞ்சய் ரவுத் கூறினார்.

பாஜக பதிலடி
சஞ்சய் ரவுத்தின் குற்றச்சாட்டுகளுக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. இது குறித்து பாஜக மூத்த தலைவர் ராம் கதம் கூறுகையில், ' இப்போது என்ன நடக்கிறது என்பது மக்களுக்கு புரியவில்லை என்று சிவசேனா உணர்கிறதா? மறைந்த பாலாசாகேப் தாக்கரேவின் சித்தாந்தத்துடன் கூட உறுதியாக நிற்க முடியாத கட்சி, தொடர்ந்து கொள்கைகளை மாற்றி வரும் ஒரு கட்சி பாஜகவுக்கு அறிவுரை கூற தேவையில்லை' என்று கூறினார்.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications