காஷ்மீரில் தொடர் பதற்றம் நீடிப்பது ஏன்.. அப்படி என்னதான் இருக்கிறது சட்டவிதிகள் 370, 35 ஏ-வில்?
Recommended Video
டெல்லி: ஜம்மு- காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்படும் என்றும் சட்டவிதி எண் 35ஏ திரும்ப பெறப்படும் என்றும் வதந்தி பரவி வருவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
காஷ்மீர் தொடர் பதற்றத்தால் அங்கு ராணுவமும் விமான படையும் குவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முன்னாள் முதல்வர்களான ஒமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி ஆகியோர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்டவிதி எண் 370 என்றால் என்ன என்பது குறித்து பார்ப்போம்.

சம்மதம்
இந்த 370-ஆவது சட்டப் பிரிவானது 1949-ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்டது. ராணுவம், வெளியுறவுத் துறை, தகவல் தொடர்பு துறை ஆகியவற்றை தவிர பிற துறைகள் தொடர்பாக நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்கள் இம்மாநிலத்தின் சம்மதம் இல்லாமல் இயற்றினால் அது பொருந்தாது.
21-ஆவது பகுதி
இந்திய மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டால் அது ஜம்மு- காஷ்மீருக்கு பொருந்தாது என்ற சட்டப்பிரிவு 238, 1956-ஆம் ஆண்டு முதல் நீக்கப்பட்டது. 370 சட்டப்பிரிவு பகுதி 21-ஆவது பகுதியில் வருகிறது.
எல்லையை குறைப்பது
சட்டவிதி எண் 370-இன் படி மாநிலத்தின் எல்லையை கூட்டவோ குறைக்கவோ நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பிற மாநிலத்தவர்கள் அசையாச் சொத்துகளை வாங்க முடியாது. ஆனாவ் இவர்கள் பிற மாநிலங்களில் வாங்கிக் கொள்ளலாம்.

ஒப்புதல்
இந்த சட்டத்தில் ஜம்மு- காஷ்மீர் சட்டசபை நினைத்தால் இந்த 370 சட்டப்பிரிவில் மாற்றம் கொண்டு வரவோ, அதை நீக்கவோ இல்லாவிட்டால் அப்படியே வைத்துக் கொள்ளவோ முடியும். இந்த சட்டவிதியை அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அறிவுறுத்தலின்படி, அப்போதைய ஜனாதிபதி உத்தரவு மூலம் முழுவதுமாக ரத்து செய்ய முடியும். ஆனால் அதை ஜம்மு- காஷ்மீர் சட்டசபையின் ஒப்புதலின் பேரில் மட்டுமே முடியும்.

35ஏ எதை சொல்கிறது?
சட்டப்பிரிவு 35 ஏ என்றால் என்ன. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் வாழ்பவர்களின் நிரந்தர குடியிருப்பாளர்கள் யார் என்பதை வரையறுக்கவும் நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு அரசுத் துறைகளில் வேலை வாய்ப்பு, அரசு உதவித் தொகை வழங்குதல் மற்றும் அசையாச் சொத்துகள் வாங்குவது மற்றும் விற்பது போன்ற இனங்களில் தீர்மானம் செய்ய இந்த பிரிவின் அடிப்படையில் உரிமை உள்ளது.

பெண்ணுக்கு சொத்தில் உரிமை இல்லை
கடந்த 1954-ஆம் ஆண்டு மே 14-ஆம் தேதி ஜனாதிபதியின் உத்தரவுபடி 35 ஏ என்ற சட்டப்பிரிவு, 370 சட்டப்பிரிவில் இணைக்கப்பட்டது. இந்த சட்டத்தின்படி இந்த மாநிலத்தைச் சாராதவர்களுக்கு இங்குள்ள நிறுவனங்களில் வேலை மறுக்கப்படுகிறது. அதுபோல் காஷ்மீர் மாநில பெண் வேறு மாநில நபரை திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டால் அந்த பெண்ணுக்கு சொத்தில் உரிமை இல்லை.

பதற்றம்
அதாவது ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை கொடுப்பது சட்டவிதி எண் 370 ஆகும். அதே சமயம் காஷ்மீரின் நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு சிறப்பு உரிமைகளை கொடுப்பது 35 ஏ பிரிவு ஆகும். இதனால்தான் இந்த இரு விதிகளையும் நீக்குவது காஷ்மீரில் பெரும் பதற்றத்தை கொடுக்கும்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications