Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேச துரோக சட்டம் ரத்து.. அதை விட பயங்கரமாக வரும் ‘பாரதிய நியாய சன்ஹிதா’.. என்ன வித்தியாசம்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தேசத்துரோக சட்டம் பிரிவு 124 ரத்து செய்யப்பட்டு அதற்குப் பதிலாக புதிய குற்றவியல் தண்டனை சட்டம் பிரிவு 150-ஐ சேர்க்கும் மசோதா இன்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. தேசத்துரோகச் சட்டம் நீக்கப்பட்டதா அல்லது புதிய வடிவத்தில் வலுப்படுத்தப்படுகிறதா? புதிய மசோதா என்ன சொல்கிறது? பார்க்கலாம்.

தேசத் துரோகத்துக்கான தண்டனையை மூன்றாண்டு சிறைத் தண்டனையில் இருந்து ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையாக உயர்த்த சட்ட ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. இது இன்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

What is Bharatiya Nyaya Sanhita Bill 2023 which replaces sedition law

நாட்டில் உள்ள குற்றவியல் சட்டங்களில் மறுசீரமைப்பைக் கொண்டு வரும் வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "19 ஆம் நூற்றாண்டின் சட்டங்களுக்கு" பதிலாக மூன்று புதிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். தேசத்துரோகச் சட்டம், காலனிய ஆதிக்கத்தின் நினைவாக இன்னும் இந்தியாவில் இருந்து கொண்டிருக்கிறது. அதை நீக்கும் வகையில் புதிய சட்டங்கள் கொண்டு வரப்படுவதாக தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சக்‌ஷயா ஆகிய பெயர்களில் ஆன சட்டங்களை கொண்டு வருவது தொடர்பான மசோதாவை மக்களவையில் இன்று அறிமுகப்படுத்தினார்.

மசோதாக்களை மக்களவையில் தாக்கல் செய்து பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 1860 முதல் 2023 வரை நாட்டின் குற்றவியல் நீதி அமைப்பு ஆங்கிலேயர்கள் இயற்றிய சட்டங்களின்படி செயல்பட்டது. ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்ட 3 சட்டங்களின் பெயர்களை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. 3 மசோதாக்களும் நாடாளுமன்ற குழுக்களின் பரிசீலனைக்கு அனுப்பப்படும். அந்த மூன்று சட்டங்களும் மாற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தால், நாட்டின் குற்றவியல் நீதி அமைப்பில் பெரிய மாற்றம் வரும் எனத் தெரிவித்தார்.

புதிய குற்றவியல் தண்டனை சட்டத்தின்படி, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது 90%க்கு மேல் அதிகரிக்க வேண்டும் என்ற இலக்கை நாங்கள் நிர்ணயித்துள்ளோம். அதனால் தான், 7 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ள, அனைத்து வழக்குகளிலும் தடயவியல் குழு குற்றம் நடந்த இடத்திற்குச் செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா மூலம், தேசத்துரோக சட்டத்தை ரத்து செய்கிறோம் என்றும் தெரிவித்தார்.

புதிதாக முன்மொழியப்பட்ட பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் என்ன?

பாரதிய நியாய சன்ஹிதா மசோதா, 2023 இன் பிரிவு 150, தேசத்துரோகக் குற்றத்தைக் குறிக்கிறது. இருப்பினும், அது தேசத்துரோகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. ஆனால் "இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும்" என்று விவரிக்கிறது.

இந்த சட்டத்தின்படி "எவர், வேண்டுமென்றே அல்லது தெரிந்தே, வார்த்தைகளால், பேசப்பட்ட அல்லது எழுதப்பட்ட, அல்லது அறிகுறிகளால், அல்லது காட்சிகள் மூலம், மின்னணு தகவல் தொடர்பு மூலம் அல்லது வேறுவிதமாக, தூண்டுதல், பிரிவினை அல்லது ஆயுதக் கிளர்ச்சி அல்லது நாசகார நடவடிக்கைகள், அல்லது பிரிவினைவாத நடவடிக்கைகளின் உணர்வுகளை ஊக்குவித்தல் அல்லது இந்தியாவின் இறையாண்மை அல்லது ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்துவது குற்றம் ஆகும். அத்தகைய செயலில் ஈடுபட்டாலோ அல்லது செய்தாலோ ஆயுள் தண்டனை அல்லது ஏழு ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படும்.

22வது சட்ட ஆணையம் ஜூன் மாதம் பரிந்துரைத்ததை விட இது விரிவானது. நடைமுறைப் பாதுகாப்புகளைச் சேர்ப்பதன் மூலமும் சிறைத் தண்டனையை அதிகரிப்பதன் மூலமும் இந்த விதியை வலுப்படுத்த வேண்டும். "வன்முறையைத் தூண்டும் அல்லது பொதுக் குழப்பத்தை ஏற்படுத்தும் போக்குடன்" என்ற வார்த்தைகளைச் சேர்க்க சட்ட ஆணையம் பரிந்துரைத்திருந்தது.

வன்முறையைத் தூண்டும் போக்கை, "உண்மையான வன்முறை அல்லது வன்முறைக்கு உடனடி அச்சுறுத்தல் இருப்பதைக் காட்டிலும் வன்முறையைத் தூண்டுவதற்கு அல்லது பொதுக் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான விருப்பம்" என்றும் அறிக்கை வரையறுத்துள்ளது.

தேசத் துரோகத்துக்கான தண்டனையை மூன்றாண்டு சிறைத் தண்டனையில் இருந்து ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையாக உயர்த்த ஆணையம் பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது இன்று மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய தேசத்துரோக சட்டம் என்ன?

IPC இன் பிரிவு 124Aன்படி, வார்த்தைகளால், பேசப்பட்ட அல்லது எழுதப்பட்ட, அல்லது அறிகுறிகளால், அல்லது புலப்படும் பிரதிநிதித்துவம் அல்லது வேறுவிதமாக, வெறுப்பு அல்லது அவமதிப்பைக் கொண்டுவருவது அல்லது முயற்சிப்பது, அல்லது அரசாங்கத்தின் மீது அதிருப்தியை தூண்டுவது அல்லது தூண்ட முயற்சிப்பது சட்டத்தால் நிறுவப்பட்ட, ஆயுள் தண்டனையுடன் தண்டிக்கப்படும். அதனுடன் அபராதம் சேர்க்கப்படலாம், அல்லது மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டனை, அபராதத்துடன் சேர்க்கப்படலாம்.

இந்தப் பிரிவின் விளக்கத்தில், "அதிருப்தி" என்ற வெளிப்பாடு விசுவாசமின்மை மற்றும் அனைத்து பகை உணர்வுகளையும் உள்ளடக்கியது.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளாததை வெளிப்படுத்தும் கருத்துக்கள், சட்டப்பூர்வ வழிகளில் வெறுப்பு, அவமதிப்பு அல்லது அதிருப்தியைத் தூண்டுதல், இந்தப் பிரிவின் கீழ் குற்றமாக கருதக்கூடாது.

அதேபோல, வெறுப்பு, அவமதிப்பு அல்லது அதிருப்தி ஆகியவற்றை உற்சாகப்படுத்தாமல் அல்லது தூண்டுவதற்கு முயற்சி செய்யாமல், அரசாங்கத்தின் நிர்வாக அல்லது பிற நடவடிக்கைகளின் மறுப்பை வெளிப்படுத்தும் கருத்துக்கள், இந்த பிரிவின் கீழ் குற்றமாகாது.

தேசத்துரோக சட்டப் பிரிவு 124A-வில் உள்ள அம்சங்களோடு, பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 150ல் "பிரிவினை", "ஆயுதக் கிளர்ச்சி", "நாசகார நடவடிக்கைகள்" மற்றும் "பிரிவினைவாத நடவடிக்கைகள்" பற்றிய குறிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+