கதிர் ஆனந்த்திடம் கைப்பற்றப்பட்ட பல கோடி ரூபாய் பணம்! வந்து விழுந்த கேள்வி- தேர்தல் ஆணையர் பதில்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த லோக்சபா தேர்தலில் கதிர் ஆனந்த்திடம் பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு தொடர்பான கேள்விக்குத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.

நமது நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் தொடர்பான அறிவிப்பைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் வெளியிட்டார். மொத்தம் 7 கட்டங்களாக இன்று தேர்தல் நடைபெறுகிறது.

What is Election commissioner Rajiv Kumar says about DMK Kathir Anand

தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு முதற்கட்டமாக ஏப்ரல் 19இல் லோக்சபா தேர்தல் நடக்கிறது. கடைசிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி நடக்கும் நிலையில், ஜூன் 4இல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

கதிர் ஆனந்த்: இதற்கிடையே அதைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் லோக்சபா தேர்தல் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது தேர்தல் குறித்து ஆணையர் ராஜீவ்குமார் பதிலளித்தார். குறிப்பாகத் தமிழ்நாட்டில் பண விநியோகம் உள்ளிட்ட சம்பவங்கள் தேர்தல் சமயத்தில் அதிகரிக்கும் நிலையில், இது குறித்த கேள்விக்கும் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் பதிலளித்தார்.

செய்தியாளர் ஒருவர் "ஒவ்வொரு தேர்தலிலும் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறது. கடந்த 2019 லோக்சபா தேர்தல் சமயத்தில் வேலூர் தேர்தலில் போட்டியிட்ட கதிர் ஆனந்த்திற்குச் சொந்தமான இடத்தில் இருந்து பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன.. வரும் தேர்தலிலும் கூட அவரே மீண்டும் வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்பு இருக்கிறதே" என்று கேட்டார்.

ராஜீவ் குமார் பதில்: இதற்குப் பதிலளித்த ராஜீவ் குமார், "தமிழகத்தைச் சேர்ந்த நண்பர் ஒரு கேள்வியைக் கேட்டுள்ளார். அங்கே இருக்கும் பண பலம் குறித்து அவர் கேட்கிறார். அவர் கேட்டுள்ள கேள்வி குறித்து நாங்கள் மிகக் கவனமாக இருக்கிறோம். மற்றொரு தென்மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பண வினியோகத்தை பெரும்பாலும் கட்டுப்படுத்தி விட்டோம். எனவே, இது குறித்துக் கவலைப்பட வேண்டாம்" என்றார்.

மேலும், இந்த முறையும் ஒரு வேட்பாளர் தேர்தல் செலவுக்கு அதிகபட்சம் எத்தனை ரூபாய் செலவு செய்ய முடியும் என்பதைத் தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி லோக்சபா தேர்தலில் ஒரு வேட்பாளர் 90 லட்ச ரூபாயும் சட்டசபை தொகுதிகளுக்கு 38 லட்ச ரூபாயும் செலவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையர் பதிலளித்தார். இருப்பினும் கதிர் ஆனந்த் மீது நடவடிக்கை இல்லை என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவே இல்லை.

லோக்சபா தேர்தல்: இந்த முறை நாட்டில் உள்ள 22 மாநிலங்களில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, சிக்கிம், பஞ்சாப், தெலுங்கானா, டெல்லி, கோவா, குஜராத், ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, கேரளா, லட்சத்தீவு, லடாக், மிசோரம், மேகாலயா, நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம், அந்தமான் நிகோபார் தீவு, ஆந்திரா, சண்டிகர், உத்தரகண்ட். தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ ஆகிய 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது.

அதேநேரம் நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் ஆகிய 3 மாநிலங்களிலும் அனைத்து 7 கட்டங்களிலும் தேர்தல் நடக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+