Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போலி செய்திகளை சமாளிக்க மத்திய அரசின் பேக்ட் செக் திட்டம்.. திரளாக கிளம்பும் எதிர்ப்பு! சர்ச்சை என்ன

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசு இணையத்தில் பரவும் போலி செய்திகளைச் சரிபார்க்கப் புதிதாக ஒரு பேக் செக் குழுவை அமைப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு பலருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏன் என்று விரிவாகப் பார்க்கலாம்.

சமூக வலைத்தளங்களில் பரவும் போலி தகவல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஏனென்றால் இதுபோல பரவும் போலி செய்திகள் இணையத்தைத் தாண்டி நிகழ் உலகத்திலும் கூட மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்து இருக்கவே செய்கிறது.

அதேநேரம் மத்திய அரசு இதில் அதிகம் தலையிட்டால் இணையத்தில் சுதந்திரம் பாதிக்கப்படும் என்ற விமர்சனமும் மறுபுறம் இருக்கவே செய்கிறது. கடந்தாண்டு தான் மத்திய அரசு புதிய ஐடி கொள்கைகளைக் கொண்டு வந்தது.

 What is Govt-appointed fact-check body What it will do, concerns around it

டெக் நிறுவனங்கள்: இந்தியாவில் அனைத்து டெக் நிறுவனங்களும் இதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை மத்திய அரசு வலியுறுத்தியது. இதற்குச் சரமாரியான விமர்சனங்கள் இருந்தபோதிலும், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற ஆன்லைன் தளங்களில் அரசு தொடர்புடைய போலி மற்றும் தவறான தகவல்களுக்குப் போலி என்று லெபிள் அளிக்கும் ஒரு உண்மைச் சரிபார்ப்பு அமைப்பை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பொதுவாக சமூக வலைத்தளங்களில் போடப்பட்டும் கருத்துகள் யாரோ ஒருவர் பதிவிட்டதாகவே இருக்கும். மூன்றாம் தரப்பினரின் கண்டெண்ட்கள் என்பதால் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. இந்த சட்ட பாதுகாப்பு நிறுவனங்களுக்குத் தொடர வேண்டும் என்றால் போலியான தகவல்களை உடனடியாக அவர்கள் நீக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய தொழில்நுட்ப விதிகள்: நேற்று வியாழக்கிழமை மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021இல் திருத்தங்களை அறிவித்தது. அதன்படி ஆன்லைனில் பரவும் தகவல்கள் உண்மையா இல்லையா என்பதைக் கண்டறிய ஒரு உண்மைச் சரிபார்ப்பு அமைப்பை நியமிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு அளிக்கப்படுகிறது. மத்திய அரசு கடந்த ஜன. மாதம் புது முன்மொழிவு ஒன்றைக் கொடுத்தது. பிரஸ் இன்பர்மேஷன் பீரோவின் (பிஐபி) பேக் செக் செய்யப்பட்டு போலி என்று அடையாளம் காணப்படும் செய்திகளை ஆன்லைனில் அனுமதிக்கக் கூடாது என்று என்று கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், பிஐபி இந்த பாயிண்ட் இறுதி அறிவிப்பில் நீக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த முன்மொழிவு ஏற்கனவே பல விமர்சனங்களுக்கு உள்ளானது. ஏனென்றால் ஒரு செய்தியைப் போலி செய்தி என்று ஒரு அமைப்பு மட்டுமே அறிவிக்க வேண்டும் என எப்படிச் சொல்ல முடியும் என்பதே அவர்கள் எதிர்ப்பிற்குக் காரணமாக இருக்கிறது.

இறுதி விதிகள் என்ன: இறுதி விதிகள் கூறுவது என்னவென்றால், மத்திய அரசின் பேக்ட் செக் பிரிவால் அறிவிக்கப்படும் கண்டெண்ட்களை கட்டுப்படுத்த பேஸ்புக், யூடியூப் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களும் சரி, ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா போன்ற இணையச் சேவை நிறுவனங்களும் சரி நியாயமான முயற்சியை எடுக்க வேண்டும்.

இதற்காகத் தான் உண்மை சரிபார்ப்பு குழுவை மத்திய அரசு அமைக்க உள்ளது. இந்த அமைப்பு போலியானது என்று குறிப்பிடும் செய்திகளை அவர்கள் அகற்ற வேண்டும்.. இதைச் செய்யத் தவறினால் மூன்றாம் தரப்பினரின் கண்டெண்ட்களுக்கு நடவடிக்கை எடுக்க முடியாது என்ற சட்ட பாதுகாப்பை இழக்க நேரிடும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. சமூக ஊடக தளங்கள் அத்தகைய லிங்க்குகளை அகற்ற வேண்டும், மேலும் இணையச் சேவை நிறுவனங்கள் அந்த URLகளை பிளாக் செய்ய வேண்டும்.

சர்ச்சை என்ன: இந்த புதிய விதிகள் ஆன்லைனில் இருக்கும் சுதந்திரத்தைத் தடுக்கும் என்று சிவில் அமைப்புகள் தெரிவித்துள்ளன. டெல்லியைத் தளமாகக் கொண்ட இன்டர்நெட் ஃப்ரீடம் ஃபவுண்டேஷன் இது குறித்துக் கூறுகையில், "இவை பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்களின் அடிப்படை உரிமையான பேச்சு மற்றும் கருத்துரிமை தடுப்பதாக இருக்கிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய அறிவிப்பில் பிஐபி இந்த சரிபார்ப்பைச் செய்யும் என்று கூறப்பட்டிருந்தது. இப்போது அதுபோன்ற அறிவிப்பு இல்லை என்றாலும் வேறு ஒரு அமைப்பு அதையே தான் செய்கிறது என்பதால் இதை அனுமதிக்க முடியாது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இருப்பினும், இது குறித்து அச்சப்படத் தேவையில்லை என்று தெரிவித்துள்ள ஐடி துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், அரசு ஆதரவுடன் செயல்படும் உண்மைச் சரிபார்ப்பு அமைப்பு, நம்பகமான முறையில் செயல்படும் என்று உறுதியளித்தார். இந்த அமைப்பு செயல்படும் விதம் குறித்து விரிவான விதிகளை அறிவிப்போம். என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது என்பதை அதில் தெளிவாக விளக்குவோம்.

இது வழக்கமான அமைப்பாக இருக்காது என்பதை உறுதியளிக்கிறேன்.. இந்த அமைப்பு என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது என்பது குறித்து விரிவான அறிவிப்பை வெளியிடுவோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+