4 தங்க மோதிரம்.. கையில் 35,250 பணம் - 13% உயர்ந்த மோடி சொத்து மதிப்பு! மொத்தம் எவ்வளவு தெரியுமா?
டெல்லி: இன்று 72வது பிறந்தநாளை கொண்டாடி வரும் பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று தெரியுமா? இந்த செய்தியை கடைசி வரை படிங்க.
குஜராத் மாநிலத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து அம்மாநிலத்தின் முதலமைச்சராக உயர்ந்த பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 2 முறை மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று 8 ஆண்டுகளாக இந்திய பிரதமர் இருக்கையில் அமர்ந்திருக்கிறார்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக கருதப்படும் இந்தியாவுக்கு பிரதமரானதன் மூலமாக உலகின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலமான உலக தலைவர்கள் வரிசையில் முன்னிலை வகித்து வருகிறார் நரேந்திர மோடி.

சொத்து மதிப்பு
இன்று தன்னுடைய 72 வது பிறந்தநாளை கொண்டாடி வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய தலைவர்கள் மட்டுமின்றி உலக நாடுகளின் தலைவர்களும் ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். அவருடைய சொத்து மதிப்பு என்னவாக இருக்கும் என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும்.

13% உயர்வு
இந்திய பிரதமர் அலுவலகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ள தகவலின்படி, கடந்த 2021 - 2022 நிதியாண்டில் பிரதமர் நரேந்திர மோடியின் அசையும் சொத்துக்களின் மதிப்பு 13 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. அவரிடம் ரூ.35,250 பணம் கையிருப்பில் உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ரூ.2.23 கோடி
அதாவது கடந்த நிதியாண்டில் ரூ.1.97 கோடியாக இருந்த பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு 2021 - 2022 நிதியாண்டில் ரூ.2.23 கோடியாக உயர்ந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் முதலீடுகளின் காரணமாகவே அவரது சொத்து மதிப்பு இந்த அளவுக்கு உயர்ந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2022 மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி மோடிக்கு எந்த அசையா சொத்தும் இல்லை.

குஜராத் நிலம்
கடந்த 2002 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது தலைநகர் காந்திநகரில் ரூ.2.3 லட்சம் மதிப்பில் 3 பேருடன் சேர்ந்து ஒரு நிலத்தை வாங்கினார். தற்போது அவரிடம் அந்த நிலம் இல்லை. தற்போதைய சந்தை மதிப்பின்படி அந்த நிலம் ரூ.1.1 கோடி இருக்கும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.

வைப்புத் தொகை
பிரதமர் நரேந்திர மோடி தேசிய சேமிப்புச் சான்றிதழ் (என்.எஸ்.சி), நிலையான வைப்புத் தொகை, ஆயுள் காப்பீட்டை வைத்து இருக்கிறார். காந்திநகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் பிரதமர் மோடியின் நிலையான வைப்புத் தொகை ரூ.2.1 கோடி உள்ளது. என்.எஸ்.சி. மதிப்பு ரூ.9 லட்சம், ஆயுள் காப்பீட்டு தொகை ரூ.18.93 லட்சமாக உள்ளது.

4 தங்க மோதிரம்
அசையும் சொத்துக்களை பொறுத்தவரை தலா 45 கிராம் எடை கொண்ட 4 தங்க மோதிரங்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் உள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.14.83 லட்சம் முதல் ரூ.17.30 வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. அதன்படி அவரது நிகர மதிப்புத் தொகை ரூ.3.07 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications