பண்டோரா ஆவணங்கள் என்றால் என்ன? பிரபலங்கள் முகத்திரையை கிழித்தது எப்படி?
டெல்லி: உலகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பண்டோரா ஆவணங்கள். பண்டோரா ஆவணங்கள் என்றால் என்ன? ஏன் இந்த விவரங்கள் உலகின் பல முக்கிய பிரமுகர்கள் முகத்திரையை கிழித்துள்ளன.

இதோ அதுகுறித்த தகவல்கள்:
14 உலகளாவிய கார்ப்பரேட் சேவை நிறுவனங்களிலிருந்து கசிந்த 11.9 மில்லியன் கோப்புகள்தான், பண்டோரா ஆவணங்கள் ஆகும். அவை சுமார் 29,000 ஆஃப்-தி-ஷெல்ஃப் நிறுவனங்கள் மற்றும் தனியார் அறக்கட்டளைகள் தொடர்பானவை.
அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தொழிலதிபர்கள் எனப் பல தரப்பட்ட பிரபலங்களும் வரியிலிருந்து தப்ப வெளிநாடுகளில் முறைகேடாக கோடிகளில் முதலீடு செய்து, சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளனர். இந்த பட்டியலை சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு (ICIJ) வெளியிட்டிருக்கிறது. பண்டோரா ஆவணங்கள் என்று இதற்கு பெயர்.

சச்சின் பெயர்
117 நாடுகளிலிருந்து, 150க்கும் மேற்பட்ட செய்தி நிறுவனங்களின் பத்திரிகையாளர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
பண்டோரா ஆவணங்களில் குறைந்தது 380 இந்தியர்கள் உள்ளனர். சச்சின் டெண்டுல்கர் பெயரும் இதில் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது

பண்டோரா ஆவணங்கள் என்ன வெளிப்படுத்துகின்றன?
பண்டோரா பேப்பர்கள் பணக்காரர்கள், புகழ்பெற்றவர்கள் மற்றும் கிரிமினல்கள் உள்ளிட்டோர் குவித்த சொத்துக்களை அம்பலப்படுத்தியுள்ளது. ஏற்கனவே இவர்கள் புலனாய்வு நிறுவனங்களின் ரேடாரில் இருந்தனர். இவர்கள் தங்கள் சொத்துக்களை பாதுகாக்க பல அடுக்கு நம்பிக்கை கட்டமைப்புகளை அமைத்தனர்.

பனாமா பேப்பர்கள் மற்றும் பாரடைஸ் பேப்பர்களில் இருந்து பண்டோரா எதில் வேறுபடுகிறது?
ஏற்கனவே இதுபோல சில பிரபலங்கள் குறித்து பனாமா மற்றும் பாரடைஸ் பேப்பர்கள் வெளியாகி உலகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. அந்த விசாரணையில், போலி நிறுவனங்களில் தனி நபர்கள் மற்றும் கார்பொரேட்கள் எப்படி முதலீடு செய்தனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பண்டோரா பேப்பர்ஸ் விசாரணையில், போலி நிறுவனங்களுக்கு எதிராக நாடுகள் நடவடிக்கையை தீவிரப்படுத்த தொடங்கிய பிறகும், எப்படி, அந்த நிறுவனங்கள் செயல்படுகின்றன என்ற விளக்கத்தை அளித்துள்ளது. பணமோசடி, பயங்கரவாத நிதி மற்றும் வரி ஏய்ப்பு போன்றவற்றை தடுக்க இதுபோன்ற போலி நிறுவனங்களை கொண்ட நாடுகள் தங்கள் நாட்டின் சட்ட திட்டங்களை தீவிரப்படுத்தியிருந்தன. ஆனால் அதன்பிறகும், இதுபோன்ற செயல்பாடுகள் நடந்துள்ளது எப்படி என்பதை பண்டோரா ஆவணங்கள் தெளிவுபடுத்துகின்றன.

அறக்கட்டளைகள்
பண்டோரா பேப்பர்ஸ் பெருநிறுவனங்களின் முகத் திரையை கிழித்து உள்ளே சென்று அவற்றை அம்பலப்படுத்துகிறது. வணிகக் குடும்பங்கள் மற்றும் அதி பணக்கார தனிநபர்கள் தங்கள் முதலீடுகள் மற்றும் பிற சொத்துக்களின் வருவாயை வரி ஏய்ப்பு செய்ய அறக்கட்டளைகளை ஒரு சாதனமாக பயன்படுத்துகிறார்கள். சமோவா, பெலிஸ், பனாமா, மற்றும் பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், சிங்கப்பூர் அல்லது நியூசிலாந்து போன்ற வரிச் சலுகைகளின் சொர்க பூமியை இதற்காக அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

அறக்கட்டளை என்றால் என்ன?
தனியார் அல்லது பெரு நிறுவனங்களுக்காக செயல்படும் ஒரு மூன்றாவது நபர் அறங்காவலராக இருக்கும் அமைப்பை அறக்கட்டளை என்று பண்டோரா ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. பெரு நிறுவனங்கள் தங்கள் சொத்துக்களை, ஒருங்கிணைக்க அறக்கட்டளைகள் பயன்படுகின்றன.

முன்பு வெளியான ஆவணங்கள்
2016ம் ஆண்டு பனாமா நாட்டைச் சேர்ந்த மொசாக் ஃபென்செக்கா என்ற சட்ட நிறுவனத்தின் ரகசிய ஆவணங்கள் ஜெர்மனியைச் சேர்ந்த ஓர் ஊடகத்தில் வெளியானது. சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு புலனாய்வு செய்து இந்த பட்டியலை வெளியிட்டன. இதில், திரை நட்சத்திரங்கள் ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், டிஎல்ஃப் நிறுவனத்தின் தலைவர் கேபி சிங் மற்றும் அவருடைய 9 குடும்ப உறுப்பினர்கள், கவுதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications