"கிராமமே பறக்குது.." மெகா பிளான் போடும் இண்டிகோ.. வாயை பிளக்கும் உலக நாடுகள்.. டாடாவுக்கும் சவால்?
டெல்லி: இண்டிகோ நிறுவனம் துருக்கியில் இருந்து இந்தியாவுக்கு மிகப் பெரிய விமானத்தை இயக்குகிறது. குட்டி கிராமத்திற்கு இணையான இந்த விமானம் குறித்த தகவல்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இந்தியா வானில் ராஜாவாக இருப்பது என்னவோ இண்டிகோ நிறுவனம் தான்.. இந்திய விமான துறையில் 50% மேல் தன்வசம் கொண்டு இருக்கிறது. இந்த இண்டிகோ நிறுவனம்.

இத்தனை காலம் இவர்களுக்குப் போட்டி இல்லாமல் இருந்த நிலையில், இப்போது தான் டாடாவின் ஏர் இந்தியா இவர்களுக்குப் போட்டியாக மெல்ல உருவெடுத்து வருகிறது. இதை சமாளிக்கச் சமீபத்தில் தான் அவர்கள் 500 புது விமானங்களுக்கு மெகா ஆர்டர் கொடுத்திருந்தனர்.
500+ சீட்டர்: இப்போது இவர்கள் வெளிநாடுகளிலும் தங்கள் மார்கெட் ஷேரை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அதன்படி இவர்கள் துருக்கிய ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் சில மாதங்களுக்கு முன்பு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டனர். அதன்படி துருக்கி ஏர்லைன்ஸ் வாங்கிய மெகா போயிங் 777 விமானத்தை இண்டிகோ இயக்க உள்ளது. இண்டிகோ நிறுவனத்திடம் 300+ விமானங்கள் இருந்தாலும் அவை அனைத்தும் ஏர்பஸ் விமானம் தான். இண்டிகோ இயக்கும் முதல் போயிங் விமானம் இதுவாகும்.
துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் இருந்து மும்பை மற்றும் டெல்லிக்கு இண்டிகோ இந்த விமானங்களை இயக்குகிறது.. இந்த விமானத்தில் மொத்தம் 531 சீட்கள் இருக்கிறது. உலகிலேயே வேறு எந்த விமானத்திலும் இந்தளவுக்கு இருக்கைகள் இல்லை. இதில் 524 சீட்கள் விமானங்கள் வழக்கமாக இருக்கும் எக்கானமி சீட்கள் ஆகும். அதேநேரம் 7 சீட்கள் பிஸ்னஸ் சீட்கள் ஆகும். கோட் ஷேரிங் ஒப்பந்தம் காரணமாக எக்கானமி சீட்கள் இண்டிகோ தளத்திலும் பிஸ்னஸ் சீட்கள் துருக்கி ஏர்லைன் தளத்திலும் புக் செய்ய முடியும்.
இண்டிகோ: மேலும், விமானத்தில் இருக்கும் குழுவினரும் இரண்டு நிறுவனத்திலும் இருந்து இருக்கிறார்கள். உலகின் மிகப் பெரிய விமானத்தில் கூட இந்தளவுக்கு சீட்கள் இல்லை. ஏனென்றால் அதில் பிஸ்னஸ் மற்றும் முதல் வகுப்பு சீட்கள் இருக்கும். ஆனால், இண்டிகோ நிறுவனம் இந்தியர்களைக் குறி வைத்து இதை இயக்குவதால் இப்படி அதிகளவில் எக்கானமி சீட்களை கொண்டு வடிவமைத்துள்ளனர்.
இண்டிகோ நிறுவனம் இந்த விமானத்தை நேரடியாக வாங்கவோ அல்லது லீசுக்கு எடுக்கவோ இல்லை. இது புதிய விமானமும் இல்லை. சொல்லப்போனால் இது 15 ஆண்டுகள் பழமையான விமானம்.. இது முதலில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஏர் அஸ்ட்ரால் என்ற நிறுவனம் மூலம் இயக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு சில கைகள் மாறிய ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் வந்தது. அவர்கள் தான் இதை முற்றிலும் எக்கானமி சீட்களாக மாற்றினர்.

இண்டிகோ வசம் வந்தது எப்படி: சில காலம் இந்த விமானம் அந்த ரஷ்ய நிறுவனம் வசம் தான் இருந்தது. அதன் பிறகு உக்ரைன் போர் உள்ளிட்ட காரணங்களால் ரஷ்யா மீது உலக நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்த நிலையில், வேறு வழியின்றி அந்த நிறுவனம் இந்த விமானத்தைத் திரும்பி அளித்தது. அதைத்தான் இப்போது துருக்கி ஏர்லைன்ஸ் வாங்கி, இண்டிகோ நிறுவனத்துடன் கை கோர்த்து இயக்குகிறது.
இப்போது இண்டிகோ வசம் இருக்கும் விமானங்களால் நீண்ட தூரம் இயக்க முடியாது. அண்டை நாடுகளுக்கு மட்டுமே இயக்க முடிகிறது. இந்தியாவில் இருந்து நேரடியாக லண்டனுக்கு விமானத்தை இயக்க வேண்டும் என்பதே அவர்கள் திட்டம். இதற்கு அவர்களுக்கு வலிமையான விமானங்கள் இப்போது தேவைப்படுகிறது. அதை மனதில் வைத்தே சோதனை முயற்சியாக இந்த 541 சீட்டர் விமானத்தை இயக்குகிறார்கள்.












Click it and Unblock the Notifications