"மறப்போம், மன்னிப்போம்.." யூடர்ன் போடும் பைலட்.. உற்று பார்க்கும் கெலாட் ஆதரவாளர்கள்! அடுத்து என்ன
டெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அசோக் கெலாட் தலைமை குறித்து சச்சின் பைலட் கூறிய கருத்துகள் இப்போது முக்கியமானதாக மாறியிருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெறுகிறது. ராஜஸ்தானில் கடந்த 2018 தேர்தலில் வென்று காங்கிரஸ் ஆட்சியை அமைத்த போதிலும், அங்கே முதல்வர் அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.

இந்தாண்டு இறுதியில் ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் நிலையில், இருவரையும் சமாதானப்படுத்தித் தேர்தலை எதிர்கொள்ளும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியுள்ளது.
சச்சின் பைலட்: இது தொடர்பாக சச்சின் பைலட் சமீபத்தில் தான் மல்லிகார்ஜுன் கார்கேவுடன் ஆலோசனை நடத்தினார். அடுத்து சில மாதங்களில் அங்கே சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுடன் இணைந்து பணியாற்றுவதும் கூட்டுத் தலைமையும் தான் சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ள ஒரே வழி என்று சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் தேர்தல் குறித்து நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு சச்சின் பைலட் அளித்த நேர்காணலில், மறைப்போம் மன்னிப்போம் என்று அடுத்த வேலையைப் பார்க்க காங். தலைவர் கார்கே தனக்கு அறிவுறுத்தியதாக அவர் தெரிவித்தார். இது ஒரு உத்தரவைப் போலவே இல்லாமல் ஆலோசனையாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.
அவர் தான் சீனியர்: இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "அசோக் கெலாட் என்னை விட மூத்தவர். அவருக்கு அரசியலில் அனுபவம் அதிகம். அவருக்கு அதிக பொறுப்புகள் உள்ளன. நான் ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, அனைவரையும் அழைத்துச் செல்ல முயன்றேன். இன்று முதல்வராக இருக்கும் கெலாட்டும் அனைவரையும் அரவணைத்துச் செல்லவே விரும்புவதாக நான் நினைக்கிறேன்.
சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அது பெரிய பிரச்சினை இல்லை. இங்கே எந்தவொரு தனி நபரையும் விட கட்சியும் பொதுமக்களும் தான் முக்கியம். எனக்கும் இது புரிகிறது, அவரும் புரிந்துகொள்கிறார்" என்று அவர் தெரிவித்தார்.
மறைப்போம் மன்னிப்போம்: கடந்த காலங்களில் கெலாட், பைலட் என இரு தரப்பிற்கும் இடையே கடும் மோதல் இருந்தது. இருவரும் மாறி மாறி விமர்சித்துக் கொண்டனர். இது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "கார்கே இது குறித்தும் என்னிடம் பேசினார். அது எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. இனி அதைப் பற்றிப் பேச வேண்டாம். எதிர்காலத்தில் நடக்கப்போவதைப் பற்றி பார்க்கலாம் என் கார்கே கூறினார். அதையேதான் நான் உங்களிடம் கூற விரும்புகிறேன்.
மறைப்போம் மன்னிப்போம் என்று இருக்குமாறு கார்கே என்னிடம் தெரிவித்தார். இது அனைவருக்கும் பொருந்தும். இப்போது நாம் அடுத்த சவால்களைச் சந்திக்க வேண்டும். காங்கிரஸ் மிகச் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றே நாட்டு மக்கள் விரும்புகின்றனர். மக்களின் ஆசீர்வாதம் எங்களுக்கு இருக்கிறது. மக்களின் ஆசையை நிறைவேற்ற நாம் ஒற்றுமையாக உழைக்க வேண்டும். எனவே கடந்த காலங்களில் யார் என்ன சொன்னார்கள் என்று பேசுவதில் பயன் இல்லை.
எந்த பயனும் இல்லை: எங்களுக்கு அடுத்த சவால் ராஜஸ்தான் தேர்தலில் வெற்றி பெறுவது தான்.. தனிநபர்களுக்கு இடையே இருக்கும் மோதல் முக்கியமில்லை. அவை கடந்த காலங்களில் நடந்தவை அது குறித்து இனி பேசி ஒரு பயனும் இல்லை" என்று அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் தனது முதல்வர் வேட்பாளரைக் கட்சி ஒருபோதும் அறிவிக்காது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியது குறித்த கேள்விக்குப் பதிலளித்த பைலட், "வேணுகோபால் கூறியதில் தவறு எதுவும் இல்லை. தேர்தல் என்பது தனி நபர்களைப் பொறுத்தது இல்லை. 2018-ல் நான் ராஜஸ்தான் மாநில தலைவராக இருந்தேன். அப்போது நாங்கள் தேர்தலை ஒற்றுமையாகவே எதிர்கொண்டோம். யார் முதல்வர் வேட்பாளர் என எதையும் அறிவிக்கவில்லை.
முதல்வர் யார்: முதல்வர் தேர்வு என்பது தேர்தலுக்கு பிறகே இருக்கும். நாங்கள் எந்தவொரு தனி நபரையும் நம்பி தேர்தலை எதிர்கொள்வது இல்லை. கொள்கை, சித்தாந்தம் அடிப்படையிலேயே தேர்தலை எதிர்கொள்கிறோம். வெற்றியும் தோல்வியும் ஒரு தனிநபருக்கானது அல்ல, அது ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியின் உடையது. எனவே, வேணுகோபால் ஜி சொல்லியதில் தவறு எதுவும் இல்லை. முழுக்க முழுக்க சரி" என்று அவர் தெரிவித்தார்.
இந்தாண்டு இறுதியில் அங்கே தேர்தல் நடைபெறும் நிலையில், காங்கிரஸ் அரசின் திட்டங்களுக்கு ராஜஸ்தான் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு இருப்பதாகவும் இதனால் இந்த முறையும் காங்கிரஸ் கட்சியே ஆட்சியைத் தக்க வைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications