ஓபிஎஸ், இபிஎஸ் என்ன அர்த்தம்? உச்சநீதிமன்ற நீதிபதிகள் எழுப்பிய கேள்வி.. வாதத்தில் முந்துவது யார்?
டெல்லி: அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதில் வழக்கறிஞர்கள் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் என்று குறிப்பிட்ட நிலையில், இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் பெயர்களுக்கு என்ன அர்த்தம் என்று கேள்வி எழுப்பினர். இதற்கு, இரு வழக்கறிஞர்கள், தங்களது ஊர் பெயரை பெயருக்கு முன் வைத்துள்ளதாக விளக்கமளித்தனர்.
சென்னை வானகரத்தில் ஜூலை 11ல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது.
இந்த வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் ஆகஸ்ட் 17ம் தேதி அளித்த தீர்ப்பில், ஜூலை 11 அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது. அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கலான மேல்முறையீடு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீா்ப்பில், தனிநீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்ததுடன், ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்தனர்.

அதிமுக பொதுக்குழு வழக்கு
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம், பி.வைரமுத்து தரப்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எடப்பாடி பழனிசாமி, அதிமுக தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் சாய் அமர்வு முன் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஓபிஎஸ், இபிஎஸ் என்ன அர்த்தம்?
இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில், நீதிமன்ற விசாரணை காரணமாக அதிமுக கட்சிப் பணிகள் தேக்கமடைந்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் வாதிட்டது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்குகள் அனைத்தும் ஒரே கோரிக்கையை வலியுறுத்துபவையா?, வழக்கு தொடர்ந்தவர்கள் யார்? யார்?, என்னென்ன பொறுப்பு வகிக்கிறார்கள்?, இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் என்றால் என்ன அர்த்தம் என்று நீதிபதிகள் கேட்டனர்.

எடப்பாடி வாதம்
இதற்கு, இரு தரப்பு வழக்கறிஞர்களும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியவற்றுக்கு விளக்கம் கொடுத்தனர். பின்னர் எடப்பாடி பழனிசாமி தரப்பில், பொதுக்குழுவுக்கு எதிராக மனுத்தாக்கல் எனில், அதன் தீர்மானங்களும் வழக்கின் கீழ் வரும். விதிகளின்படி, ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள் கோரிக்கையின் அடிப்படையில் தான் பொதுக்குழு கூட்ட முடியும். அதன்படி, ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்களின் கோரிக்கை அடிப்படையில் தான் பொதுக்குழு நடத்தப்பட்டது என்று வாதிடப்பட்டது.

இபிஎஸ் தரப்பு பதில்
இதன்பின்னர் இடைக்கால பொதுச்செயலாளர் என்பவர் தேர்தல் நடத்தி தேர்ந்தெடிக்கப்பட்டாரா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு, பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களால் இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டார் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தேர்தல் வைத்து தேர்ந்தெடுக்கப்பட்டதா? என்று நீதிபதி எழுப்பிய கேள்விக்கு, இரு பதவிகளுக்கும் வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பதால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக ஓபிஎஸ் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

என் அனுமதியில்லை
தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பில், பொதுக்குழுவில் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டும் புதிய அவைத் தலைவரை அறிவித்தார்கள். அதுமட்டுமல்லாமல் எனது அனுமதியின்றி கடைசியாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்டினார்கள், உண்மையில் அடிப்படை உறுப்பினர்கள் தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும். தேர்தல் தொடர்பான ஆவணங்களில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஆவணம் சமர்ப்பித்தோம் என்று வாதிடப்பட்டது.
-
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
Sonia Gandhi: சோனியா காந்தி மருத்துவமனையில் திடீர் அனுமதி.. ஹாஸ்பிடலுக்கு விரைந்த ராகுல், பிரியங்கா! -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்!











Click it and Unblock the Notifications