"பொது சிவில் சட்டம்.." இந்துக்கள் மட்டுமின்றி இஸ்லாமியர்களின் ஆதரவும் இருக்கு.. சிஎஸ்டிஎஸ் சர்வே
டெல்லி: நாட்டில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்ற குரல்கள் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து சிஎஸ்டிஎஸ் சர்வே ஒன்றை வெளியிட்டுள்ளது.
நமது நாட்டில் இப்போது கிரிமினல் குற்றங்களுக்கு நாடு முழுக்க ஒரே சட்டம் தான் இருக்கிறது. அதாவது கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களுக்கு ஒரே தண்டனை தான்.

ஆனால் திருமணம், விவகாரத்து போன்ற சிவில் விவகாரங்களில் ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வொரு சட்டத்தைப் பின்பற்றி வருகிறார்கள். நமது நாட்டில் பல்வேறு மதத்தினரும் இருப்பதால் இந்த முறை.
பொது சிவில் சட்டம்: இருப்பினும், இதை நீக்கிவிட்டு அனைத்து தரப்பினருக்கும் ஒரே பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக பாஜகவினர் ஒரே நாட்டில் எப்படிப் பல சட்டங்கள் இருக்க முடியும் என்றும் நாடு முழுக்க விரைவில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்றனர். பாஜக ஆளும் உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்கனவே பொது சிவில் சட்டம் அமலில் இருக்கிறது. விரைவில் மற்ற மாநிலங்களிலும் கொண்டு வரப்படும் என்று பாஜகவினர் சொல்கிறார்கள்,
இதற்கிடையே சிஎஸ்டிஎஸ் என்ற அமைப்பு பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவான சர்வே ஒன்றை நடத்தியுள்ளது. நாடு முழுக்க நடத்தப்பட்ட இந்த சர்வேயில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது. அதில் குறிப்பாகக் காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கம் குறித்தும் பொது சிவில் சட்டம் குறித்தும் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கிறது.
காஷ்மீர் விவகாரம்: அந்த சர்வேயில் காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. சட்டப்பிரிவு 370ஐ நீக்குவது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு சுமார் 34% பேர் இது ஒரு நல்ல நடவடிக்கை எனத் தெரிவித்துள்ளனர். அதேபோல 16% இது நல்ல நடவடிக்கை என்றாலும் அதை முறையாகச் செய்து இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
அதாவது காஷ்மீர் சட்டசபையில் இது குறித்து மசோதாவை நிறைவேற்றி, அந்த மக்களின் ஒப்புதல் பெற்று இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டும் என்பது இவர்கள் கருத்து. மேலும் சுமார் 8% பேர் இது மோசமான நடவடிக்கை என்று கூறிய நிலையில், 22% பேர் கருத்து கூற விரும்பவில்லை என்று 20% இது குறித்து தங்களுக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளனர்.
பொது சிவில் சட்டம்: பொது சிவில் சட்டம் குறித்தும் இதில் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. அதில் சுமார் 29% பேர் இந்த பொது சிவில் சட்டம் பெண்களுக்கு அதிக அதிகாரத்தைக் கொடுக்கும் என்று தெரிவித்துள்ளனர். அதேநேரம் 19% பேர் இது மத நம்பிக்கை மற்றும் சடங்குகளில் தலையிடும் என்று என்று தெரிவித்துள்ளனர். சுமார் 52% பேர் கருத்து கூறவில்லை அல்லது இது குறித்துத் தெரியாது என்று சொல்லி இருக்கிறார்கள்.
மத ரீதியாக: மத ரீதியாக இதில் மிகப் பெரிய வேறுபாடு தெரிகிறது. இந்தச் சட்டம் பெண்களுக்கு நல்லது எனச் சொன்னவர்களில் இந்துக்கள்தான் (31%) அதிகபட்சம். கிறிஸ்துவர்களில் 25% பேர் இது பெண்களுக்கு அதிக உரிமை தரும் எனக் கூறியுள்ள நிலையில், இஸ்லாமியர்களில் 17% பேர் மட்டுமே மகளிருக்கு அதிக உரிமை தரும் எனக் கூறியுள்ளனர்.
அதேநேரம் சுமார் 3இல் ஒரு இஸ்லாமியர் இது தங்கள் மதச் சடங்குகளில் தலையிடும் எனக் கூறியுள்ளனர். இந்துக்கள் மற்றும் கிறிஸ்துவர்களில் சுமார் 18% பேர் இது சடங்குகளில் தலையிடுவதாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications