"மக்களையே சந்திக்காத ஒருவர்.." திடீரென ஆவேசமான அமைச்சர் பிடிஆர்! உச்சமடையும் ஆளுநருடனான மோதல்
டெல்லி: தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான மோதல் உச்சமடைந்து வரும் நிலையில், இது தொடர்பாக அமைச்சர் பிடிஆர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. தமிழக அரசின் தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவதாக திமுகவினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும், ஆளுநர் அரசியல் பேசுவதாகவும் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் விமர்சித்து உள்ளனர். இதனால் ஆளுநரை மாற்ற வேண்டும் என்றும் திமுகவினர் குடியரசுத் தலைவரிடமும் மனு அளித்துள்ளனர்.

அதிகரிக்கும் மோதல்
இரு தரப்பிற்கும் இடையேயான மோதல் தொடர்ந்து உச்சமடைந்து வரும் நிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் பிடிஆர் பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார். பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் மாநில அரசுகளுக்குத் தடைகளை ஏற்படுத்துவதாகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர் இப்படி நடந்து கொள்வதில் நியாயம் இல்லை என்றும் விமர்சித்தார்.

அமைச்சர் பிடிஆர்
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "மத்திய அரசின் ஆலோசனைப்படி நியமிக்கப்பட்ட ஒருவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்றம் நிறைவேற்றும் தீர்மானங்கள் குறித்த தனிப்பட்ட கருத்துக்களைக் கொண்டிருக்க இடமில்லை. நமது நாட்டை அல்லது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் இப்படி எந்தவொரு விஷயத்தை உருவாக்கவில்லை. ஆளுநர் பணி என்பது உயர்ந்த கண்ணியம் கொண்டதாக இருக்க வேண்டும்

பொருத்தமற்றது
மேலும் ஆளுநர் பதவியில் உள்ளவர்கள் அரசியல் சாசனத்திற்கு அப்பாற்பட்ட கருத்துகளையும் சமூகம் எப்படி இருக்க வேண்டும் உள்ளிட்ட தங்களின் சொந்தக் கருத்துகளையும் முன்வைப்பது மிகவும் பொருத்தமற்றது. இதெல்லாம் தெரு முனைகளில் அரசியல் செய்பவர்களின் பேச்சுகள். நாட்டின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட மிகப்பெரிய மாநிலத்தின் ஆளுநராக இருக்கும் ஒருவர் செய்யும் செயல் இது இல்லை. ஆளுநர் பதவிக்கு இது முற்றிலும் பொருத்தமற்றது" என்றார்.

மோதல்கள்
அமைச்சர் பிடிஆரின் இந்த பேச்சு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சமீபத்தில் தான் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளுநரைத் திரும்பப் பெறக் குடியரசுத் தலைவரிடம் மனு அளித்திருந்தது. கேரளாவில் மாநில அரசின் பல்கலைக்கழகங்களில் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை நீக்கச் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல தெலங்கானா அரசால் தனது ஃபோன் ஒட்டுக்கேட்பாவதாகச் சந்தேகம் உள்ளதாக அம்மாநில ஆளுநர் தமிழிசை தெரிவித்து இருந்தார்.

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள்
அமைச்சர் பிடிஆர் மேலும் கூறுகையில், "இவை அனைத்தும் பாஜகவின் ஆட்சி இல்லாத மாநிலங்கள் என்பதையும், இந்த மாநிலங்களில் பாஜகவுக்கு மக்கள் செல்வாக்கு பெரியளவில் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசால் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துகிறார். இதுவே முக்கிய பிரச்சினையாக உள்ளது. சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர் தலையீடும் தடைகளும் அதிகமாக உள்ளது" என்றார்.

மக்களைச் சந்திக்காத ஒருவர்
தென்மாநிலங்களில் ஆளுநருக்கும் மாநில அரசுகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வரும் நிலையில், அமைச்சர் பிடிஆர் ஆளுநர்கள் பாஜக அல்லாத மாநில அரசுகளின் செயல்பாடுகளில் தலையிடுவதாகக் கூறியுள்ளார். மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசின் கோப்புகளுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் காலம் தாழ்த்துவதாகவும் விமர்சித்துள்ளார்.
-
Rs 8000 Gift Voucher: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000 கூப்பன் எங்கே கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்து பறிமுதல் ரத்து.. அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி! -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
அதிமுக கோட்டையில் ஓட்டை போடும் திமுக.. கொங்கு மண்டலத்தில் மாறும் களம்! Poll Tracker கருத்துக்கணிப்பு -
டிபெண்டர் கார் ரூ.1 கோடி, இன்னோவா கார் ரூ.23 லட்சம்.. உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு? -
வில்லிவாக்கம் தொகுதி திமுக பொறுப்பாளர்கள் கூட்டத்தில், மனைவியுடன் பங்கேற்ற ஸ்டாலின் மருமகன் சபரீசன் -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி!












Click it and Unblock the Notifications