"களங்கப்படுத்த முயற்சி!" நேதாஜிக்கு நேர் எதிரே இருப்பது பாஜக & ஆர்எஸ்எஸ் தான்.. நேதாஜி மகள் பரபர
டெல்லி: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளை கொண்டாட பல்வேறு அமைப்புகளும் தயாராகி வரும் சூழலில், ஜெர்மனியில் வசிக்கும் அவரது மகள் அனிதா போஸ்-பாஃப் நேதாஜியின் கொள்கைகள் குறித்தும் பாஜக- ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் குறித்தும் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
நமது நாடு சுதந்திரம் அடையப் பலரும் பல விதமாகப் போராடினார்கள். ஒரு பக்கம் அகிம்சை முறையில் போராட்டம் நடந்தது என்றால்.. மற்றொரு பக்கம் ஆயுதம் ஏந்தி போராட்டங்களும் நடந்தன. இவை இரண்டும் சேர்த்துத் தான் நாட்டிற்கு விடுதலையைப் பெற்றுத் தந்தது.
பிரிட்டிஷ் படைகளை ஆயுதமேந்தி துணிச்சலாக எதிர்த்தவர்களில் முக்கியமானவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். பிரிட்டிஷ் படைகளை எதிர்த்துப் போரிட இவர் மிகப் பெரிய ராணுவத்தையே திரட்டிக் கொண்டு வந்தார்.

நேதாஜி பிறந்த நாள்
கடந்த சில ஆண்டுகளாகவே பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸை முன்னிறுத்திப் பேசி வருகின்றனர். இதனிடையே நேதாஜியின் பிறந்தநாளை வரும் ஜனவரி 23ஆம் தேதி கொல்கத்தாவில் பிரம்மாண்டமான முறையில் கொண்டாட ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ளது. இதனிடையே தனது தந்தையின் புகழைச் சிலர் சுரண்டுவதாக அவரது மகள் அனிதா போஸ்-பாஃப் பரபர கருத்துகளை தெரிவித்துள்ளார். மதச்சார்பின்மை, அனைவரையும் உள்ளடக்குவது உள்ளிட்ட விஷங்களில் ஆர்எஸ்எஸ்ஸின் சித்தாந்தமும், தனது தந்தையின் கருத்துகளும் நேர் எதிராக உள்ளதாகவும் அவை ஒத்துப்போகவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக
மேலும், சித்தாந்தத்தைப் பொறுத்த வரையில், நாட்டில் உள்ள வேறு எந்தக் கட்சியையும் விட நேதாஜியுடன் காங்கிரஸ் கட்சிக்கே அதிக ஒற்றுமைகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நேதாஜி அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும் என்பதையே சொல்லி வந்தார். ஆனால், பாஜகவும் சரி.. ஆர்எஸ்எஸ் அமைப்பும் சரி இதைச் செய்வதில்லை.. பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு இடையே ஒற்றுமை தேவை என்பதையே அவர் வலியுறுத்தினார். ஆனால், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக இதைத் துளியும் பின்பற்றுவதில்லை.

நேதாஜி ஒரு இடதுசாரி
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால்.. அவர்கள் எல்லாம் வலதுசாரிகள், ஆனால் நேதாஜி ஒரு இடதுசாரி.. ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை வைத்துப் பார்க்கும் போது.. அதுவும் நேதாஜியின் சித்தாந்தமும் நேர் எதிர் துருவங்களில் உள்ளன என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். இரண்டும் ஒருபோதும் ஒத்துப்போவதில்லை. நேதாஜியின் கொள்கைகளையும் யோசனைகளையும் ஆர்எஸ்எஸ் ஏற்றுக்கொள்ள விரும்புவதாக உணர்ந்தால் அது நல்லது தான். நேதாஜியின் பிறந்த நாளை கொண்டாடு விரும்பும் அமைப்புகள் அவரது கொள்கைகளைக் கொஞ்சமாவது பின்பற்ற வேண்டும்.

புகழை கெடுக்க முயற்சி
அவரது புகழைக் கெடுக்கும் வகையிலேயே சிலர் செயல்பட்டு வருகிறார்கள்.. நேதாஜி தான் வாழும் காலத்திலேயே ஆர்எஸ்எஸ் அமைப்பை விமர்சித்து இருக்கலாம். நேதாஜியின் கருத்து என்னவென்று எனக்குத் தெரியும்.. மதச்சார்பின்மை உள்ளிட்ட சித்தாந்தங்களில் ஆர்எஸ்எஸ் மற்றும் நேதாஜியின் கொள்கைகள் ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போவதில்லை.. அதேநேரம் நேதாஜியைக் கௌரவிக்க பாஜக எடுத்து வரும் முயற்சிகளைப் பாராட்டும் வகையிலேயே உள்ளது

காங்கிரஸ்
இதில் இரண்டு அம்சங்கள் உள்ளன. சுதந்திரத்திற்குப் பிறகு, நேதாஜி குறித்து காங்கிரஸ் பெரியளவில் பேசவில்லை.. சட்ட மறுப்பு உள்ளிட்ட அகிம்சை வழி போராட்டங்கள் மட்டுமே நாட்டின் சுதந்திரத்திற்கு வழிவகுத்தது என்றே அவர்கள் தொடர்ந்து சொல்லி வந்தார்கள். ஆனால் நேதாஜி குறித்த கோப்புகள் வெளியுலகிற்குத் தெரியப்படுத்த பின்னரே, இந்தியத் தேசிய ராணுவம் (ஐஎன்ஏ) இதில் மிக முக்கிய பங்காற்றியது என்பது உலகத்திற்குத் தெரிய வந்தது. அடுத்து நேதாஜியை பாஜக கவுரவித்து வருகிறது. ஆனால், அவர்களுக்கு எதிரான கருத்தைக் கொண்டிருப்பதால்.. இப்போது அவர் உயிருடன் இருந்திருந்தால்.. அவரை கவுரவித்து இருப்பார்களா என்பது சந்தேகமே" என்று அவர் தெரிவித்தார்.

ரகசிய கோப்புகள்
கடந்த 2021இல் மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெற்ற நிலையில், அதற்கு முன்பு வந்த நேதாஜியின் 125வது பிறந்தநாளை பாஜக மற்றும் அங்கு ஆளும் கட்சியாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் என இரு கட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு கொண்டாடின. முன்னதாக 2015ஆம் ஆண்டில், திரிணாமுல் தலைமையிலான மேற்கு வங்க அரசு தன்னிடம் இருந்த நேதாஜி குறித்த 64 கோப்புகளை வெளியிட்டது. அதேபோல அடுத்தாண்டே மத்திய அரசும் நேதாஜி பற்றிய 100 கோப்புகளை வெளியிட்டது. இதில் நேதாஜி குறித்துப் பல முக்கிய தகவல்கள் இடம் பெற்றிருந்தன.

நேதாஜி
சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும், நேதாஜியின் மறைவில் என்ன நடந்தது என்பது மர்மமாகவே உள்ளது. இந்த மர்மத்தை அவிழ்க்க மூன்று விசாரணைக் கமிஷன்களை மத்திய அரசு அமைத்தது. அவற்றில் காங்கிரஸால் அமைக்கப்பட்ட ஷா நவாஸ் கமிஷன், மற்றும் கோஸ்லா கமிஷன் ஆகியவை நேதாஜி ஆகஸ்ட் 18, 1945இல் தைவானில் இருந்து கிளம்பிய போது விமான விபத்தில் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். அதேநேரம் மூன்றாவது பாஜக அமைத்த முகர்ஜி கமிஷன் அவர் அப்படி உயிரிழக்கவில்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு











Click it and Unblock the Notifications