குஜராத் என்ன பிச்சைக்கார மாநிலமா? பிரதமர் மோடி போட்ட பழைய ட்வீட்.. தோண்டி எடுத்து விளாசிய காங்கிரஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நிதி பகிர்வு விவகாரத்தில் மத்திய அரசு மீது மாநில முதல்வர் குற்றம் சாட்டி வரும் நிலையில், பிரதமர் மோடி, தான் குஜராத் முதல்வராக இருந்த சமயத்தில் அப்போதைய மத்திய அரசை விமர்சித்து வெளியிட்ட ட்விட் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இந்த ட்வீட்டை வைத்து பிரதமர் மோடியை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

லோக்சபாவில் மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தென்னிந்திய மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதாக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்தி பேசும் வட மாநிலங்களுக்கு நிதி பகிர்வு அளித்துவிட்டு, தென் மாநிலங்களை ஓரவஞ்சனையுடன் நடத்துவதாக விமர்சனங்கள் எழுந்தன.

 What PM Modi Say to Cm Modi, Congress Slams Centre

காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டப்படுவது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், எந்த ஒரு நிதி குழுவும் தாங்களாகவே மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட வேண்டிய நிதி ஒதுக்கீடு குறித்து முடிவு செய்வது கிடையாது.

மோடியின் பழைய ட்வீட்: நிதி குழுவினர் அனைத்து மாநிலங்களுக்கும் நேரில் செல்கின்றனர். அந்த ஆய்வுகளின் அடிப்படையில் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுதான் இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. நிதி குழு என்ன பரிந்துரை வழங்குகிறதோ அதைத்தான் நானும் அறிவிக்கிறேன். செயல்படுத்துகிறேன். அனைத்து நிதி அமைச்சர்களும் இதையே பின்பற்றுகின்றனர். நிதி ஒதுக்கீட்டில் எங்களுக்கு வேண்டிய மாநிலம் , பிடிக்காத மாநிலம் என்ற பாகுபடு எதுவும் இல்லை" என்றார்.

தலைநகர் டெல்லியில் கேரளா சார்பில் நாளை போராட்டம் நடைபெற உள்ளது. நிதி பகிர்வு விவகாரத்தில் மத்திய அரசு மீது மாநில முதல்வர் குற்றம் சாட்டி வரும் நிலையில், பிரதமர் மோடி, தான் குஜராத் முதல்வராக இருந்த சமயத்தில் அப்போதைய மத்திய அரசை விமர்சித்து வெளியிட்ட ட்விட் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. பிரதமர் மோடி, கடந்த 2012 அம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்த சமயத்தில் கூறியதை இங்கே பார்ப்போம்.

குஜராத் என்ன பிச்சைக்கார மாநிலமா? : குஜராத் மக்கள் 60 ஆயிரம் கோடியை அளிக்கிறார்கள். ஆனால், திரும்ப எவ்வளவு வருகிறது? பிறகு நாங்கள் கொடுக்கிறோம் என்று சொல்கிறீர்கள். குஜராத் என்ன பிச்சைக்கார மாநிலமா? நாங்கள் பிச்சைக்காரர்களா?.. டெல்லி கருணையில் தான் நாங்கள் வாழ வேண்டுமா? பிரதமரின் மொழி அவர் வகிக்கும் தகுதிக்கு பொருத்தமாக இல்லை" என்று கூறியுள்ளார். பிரதமர் மோடியின் இந்த பழைய பதிவை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கேசி வேணுகோபால் பிரதமர் மோடியை சாடியிருக்கிறார்.

பிரதமர் என்ன சொல்ல போகிறார்?: கேசி வேணுகோபால் கூறுகையில், "நாம் ஒரு கூட்டாட்சி தேசம். மாநிலங்களின் ஒன்றியம். கூட்டாட்சி சுயாட்சியின் முக்கியமான தூண் என்பது மாநிலங்களின் நிதி உரிமைகளே ஆகும். மாநிலங்கள் யூனியனுக்கு பங்களிக்கின்றன. அப்போதுதான் நாம் ஒருங்கிணைந்து வளர முடியும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் சமமான உரிமை அளிக்கும் பொறுப்பு ஒன்றியத்திற்கும் உள்ளது. மாநிலங்களுக்கான நிதி பகிர்வு விஷயத்தில், முதல்வர் மோடியின் கருத்துக்கள் பற்றி பிரதமர் மோடி என்ன சொல்ல போகிறார்? என்று பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+