"வருத்தப்படுவீங்க.." தேர்தல் பத்திரங்கள் ரத்து.. வந்து விழுந்த கேள்வி.. பிரதமர் சொன்ன பதில் இதுதான்
டெல்லி: தேர்தல் பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு நிச்சயம் ஒரு நாள் அனைவரும் இதற்காக வருத்தப்படுவீர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நமது நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. லோக்சபா தேர்தலுக்கு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளன.

இதற்கிடையே சமீபத்தில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்குப் பேட்டி அளித்த பிரதமர் மோடி, தேர்தல் பத்திரங்கள் குறித்தும் அது ரத்து செய்யப்பட்டது குறித்தும் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
தேர்தல் பத்திரங்கள்: மத்திய பாஜக அரசு கடந்த 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய இந்த தேர்தல் பத்திரங்கள் முறையைக் கடந்த பிப். மாதம் சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது. மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் பொதுவெளியிலும் விடப்பட்டன.
இதற்கிடையே தேர்தல் பத்திரங்கள் ரத்து தொடர்பாகப் பிரதமர் மோடி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் ஏஎன்ஐ நிறுவனத்திற்குப் பேட்டி அளித்த நிலையில், அதில் தேர்தல் பத்திரங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்த முடிவை நாட்டை முழுமையாகக் கறுப்புப் பண முறைக்குத் தள்ளிவிட்டதாகத் தெரிவித்த பிரதமர் மோடி, நேர்மையான சிந்தனை வரும் போது அனைவரும் இதற்காக வருத்தப்படுவார்கள் என்றார்.
பிரதமர் மோடி: தனது அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் திட்டம், கருப்புப் பணத்திற்கு எதிரானது என்றார். மேலும், தேர்தல் பிரச்சாரங்களில் கணக்கில் காட்டப்படாத பணம் அல்லது குற்றச் செயல்கள் மூலம் சம்பாதிக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் ஒரு வழி என்ற அவர், அதேநேரம் இது மட்டுமே முழுமையான நடவடிக்கை என்று கூறவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகப் பல பொய்களைப் பரப்பி வந்ததாகவும் அவர் சாடினார்.
கறுப்புப் பணம்: தொடர்ந்து பேசிய அவர், "நம் நாட்டில் நீண்ட நாட்களாக ஒரு விவாதம் நடந்து வருகிறது.. தேர்தலில் அரசியல் கட்சிகள் பணம் செலவிடுவது தொடர்பானது. எனது கட்சி உட்பட அனைத்து கட்சிகளும் தேர்தல் காலங்களில் செலவு செய்கின்றன. அனைத்து வேட்பாளர்களும் செலவழிக்கிறார்கள். ஆனால், இவை உரிய முறையில் பெறப்பட்ட நிதியாக இருக்க வேண்டும். கறுப்புப் பணமாக இருக்கக்கூடாது என்பதே எனது விருப்பமாகும்.
கறுப்புப் பணம் அரசியலில் வருவதைத் தடுக்க நாங்கள் ஒரு வழியைத் தேடிக்கொண்டிருந்தோம். அப்போது தான் இந்த சின்ன வழியைக் கண்டுபிடித்தோம் ... இது முழுமையானது என்று ஒருபோதும் கூறவில்லை. இங்கே எப்போதும் எந்த அமைப்பும் சரியாக இருந்ததே இல்லை. எல்லா அமைப்புகளிலும் சிறு சிறு குறைகள் இருக்கலாம். அதை நாம் மேம்படுத்தலாம்.
எதிர்க்கட்சிகளுக்குப் போன நிதி: இந்த தேர்தல் பத்திரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகப் பொய்களைப் பரப்பினார்கள். பண மோசடி வழக்குகளில் சிக்கிய உடன் அந்த நிறுவனங்கள் பாஜகவுக்கு நன்கொடை அளித்தாகக் கூறுகிறார்கள். பண மோசடி வழக்குகளை எதிர்கொண்ட 16 நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி உள்ளன. அதில் 63 சதவீத நிதி பாஜகவைத் தவிர மற்ற கட்சிகளுக்குத் தான் போய் இருக்கிறது. எதிர்க்கட்சிகள் நன்கொடை பெற பாஜக வேலை செய்யுமா.. நிலைமை இப்படி இருக்க அவர்கள் எங்களைக் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
ஆனால், இது தான் தேர்தல் பத்திரங்களின் வெற்றிக் கதை.. தேர்தல் பத்திரங்கள் இருந்ததால் மட்டுமே உங்களால் எந்த நிறுவனம், எந்தளவுக்கு நிதியை எந்தக் கட்சிக்குக் கொடுத்தது என்பது தெரிய வருகிறது. நடந்தது நல்லதா கெட்டதா என்பது விவாதப் பொருளாக இருக்கலாம். ஆனால், தேர்தல் நன்கொடை குறித்த தகவல்கள் பொதுமக்களுக்குத் தெரியவே தேர்தல் பத்திரங்கள் தான் காரணமாக இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.
-
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications