டெல்லி அனுமன் ஜெயந்தி கலவரம்.. பலர் படுகாயம்.. வாகனங்கள் சேதம்.. நடந்தது என்ன? - முழு பின்னணி
டெல்லி: டெல்லியில் அனுமன் ஜெயந்தியின் போது இரண்டு பிரிவினர் இடையே மோசமான கலவரம் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கலவரம் தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் தற்போது மத ரீதியான, ஜாதி ரீதியான மோதல்கள் அதிகரித்துள்ளன. வெறுப்பு பிரச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மத்தி ய பிரதேசம், உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இது போன்ற மோதல்கள் அதிகம் நடந்து வருகின்றன. தற்போது டெல்லியிலும் இரண்டு பிரிவினர் இடையிலான மோதல்கள் தீவிரம் அடைந்துள்ளது.

டெல்லி
இந்த நிலையில்தான் நேற்று அனுமன் ஜெயந்தி விழாவின் போது டெல்லியில் ஜஹாங்கீர் பூரி பகுதியில் கடுமையான மோதல் ஏற்பட்டது. அங்கே சிலை வைப்பதில் இரண்டு பிரிவினருக்கு இடையில் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு கலவரத்தில் முடிய, இரண்டு தரப்பினரும் மாறி மாறி கற்களால் தாக்கிக்கொண்டனர். ஆனால் உண்மையில் இந்த மோதலுக்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. மோதலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தனர்.

அனுமன் ஜெயந்தி
ஆனால் அங்கு வந்த போலீசார் மீதும் இரண்டு தரப்பினரும் சரமாரியாக கற்களை வீசி தாக்கி உள்ளனர். பல போலீசார் இந்த தாக்குதலில் காயம் அடைந்தனர். அங்கு இருந்த கடைகள் பல இந்த தாக்குதலில் அடித்து உடைக்கப்பட்டன. அதேபோல் பல்வேறு வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு, தீ வைக்கப்பட்டன. இந்த தாக்குதலில் காயம் அடைந்த நபர்கள் பாபு ஜாக்விஜிவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கலவரம்
இந்த தாக்குதல் தொடர்பான வீடியோக்களும் வெளியாகி உள்ளது. டெல்லி போலீசின் அவசர பாதுகாப்பு படை பிரிவு இங்கே கலவரத்தை அடக்க குவிக்கப்பட்டுள்ளது. டெல்லி போலீசை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இது பற்றி விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளார். கண்டிப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அமைதி
அமைதியை நிலைநாட்ட வேண்டும். கலவரத்தில் ஈடுபடும் நபர்களை ஒடுக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார். அங்கு மொத்தம் 200 அவசர பாதுகாப்பு படையினர் தரிப்பது குவிக்கப்பட்டுள்ளனர். பாஜக எம்எல்ஏ கபில் மிஸ்ரா இந்த சம்பவம் சாதாரண நிகழ்வு கிடையாது. இது ஒரு தீவிரவாத தாக்குதல் என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications