அதென்ன சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்! யாரையெல்லாம் தண்டிக்கலாம்! இந்தியாவே உறுப்பினர் இல்லை தெரியுமா

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உக்ரைன் போர் விவகாரத்தில் முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: புதினுக்கு எதிராக ஐசிசி எனப்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மிக முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ள இந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்றால் என்ன.. அதற்கு இருக்கும் அதிகாரிகள் என்ன, நீதிபதிகள் தேர்வாவது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

உக்ரைன் போர் விவகாரத்தில் குழந்தைகளை நாடு கடத்திய குற்றச்சாட்டில் புதினுக்கு பிடிவாரண்ட பிறப்பித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது உக்ரைன் போர் விவகாரத்தில் சர்வதேச அளவில் முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

போர் தொடங்கியது முதலே உக்ரைனில் போர்க்குற்றங்கள் நடந்துள்ளதாக ஐசிசி கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் ரஷ்ய அதிபர் புதின் மற்றும் அந்நாட்டின் குழந்தைகள் உரிமைகள் ஆணையர் மரியா அலெக்ஸீவ்னா லவோவா ஆகியோருக்கு பிடிவாரண்ட் அளிக்கப்பட்டுள்ளது.

 பிடிவாரண்ட்

பிடிவாரண்ட்

கடந்த ஓராண்டிற்கும் மேலாக உக்ரைன் நாட்டில் ரஷ்யா போர் செய்து வருகிறது. தனது நாட்டின் இறையாண்மையைக் காக்கவே இந்த சிறப்பு ராணுவ நடவடிக்கையை எடுத்துள்ளதாக ரஷ்யா தொடர்ந்து கூறி வருகிறது. இந்தச் சூழலில் தான் புதினுக்கு எதிராக இப்போது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஐசிசி எனப்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ரஷ்யா உறுப்பு நாடு இல்லை. ஐசிசி அதிகார வரம்பை ரஷ்யா அங்கீகரிக்கவில்லை என்பதால் இந்த பிடிவாரண்ட் எல்லாம் செல்லாது என்று ரஷ்யா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும், உக்ரைன் போரில் ரஷ்யா எந்தவொரு போர்க் குற்றத்திலும் ஈடுபடவில்லை என்றும் கூறியுள்ளது.

 எப்போது நிறுவப்பட்டது

எப்போது நிறுவப்பட்டது

இருப்பினும், உலகின் முக்கிய நாடுகளில் ஒன்றான ரஷ்ய அதிபருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. எனவே, இந்த முக்கிய உத்தரவைப் பிறப்பித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்றால் என்ன.. அது எங்கே இருக்கிறது உள்ளிட்ட கேள்விகள் பலருக்கும் எழும் அது குறித்துப் பார்க்கலாம். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நெதர்லாந்தில் ஹேக் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த நீதிமன்றம் 2002ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

 விசாரணை

விசாரணை

போர்க்குற்றங்கள், மனிதக் குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலைகள் மற்றும் ஆக்கிரமிப்பு விவகாரம் உள்ளிட்டவற்றை ஐசிசி விசாரிக்கும். உறுப்பு நாடுகள் விசாரிக்க முடியாது அல்லது விரும்பாத விவகாரங்களை ஐசிசி விசாரிக்கும். உறுப்பு நாடுகளில் வசிக்கும் மக்கள் அல்லது உறுப்பு நாடுகளின் பகுதிகளில் நடக்கும் குற்றங்களை ஐசிசியால் விசாரிக்க முடியும். அப்படித்தான் ரஷ்யா இதில் உறுப்பினராக இல்லை என்ற போதிலும், உறுப்பு நாடான உக்ரைனில் நடந்த பிரச்சினை என்ற அடிப்படையில் இதில் ஐசிசி தலையிட்டுள்ளது.

 உறுப்பு நாடுகள்

உறுப்பு நாடுகள்

123 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐசிசிக்கு 2023ஆம் ஆண்டு பட்ஜெட்டாக சுமார் 170 மில்லியன் யூரோக்கள் (ரூ. 1500 கோடி) ஒதுக்கப்பட்டது. இப்போது சர்வதேச நீதிமன்றம் 17 விவகாரங்களில் விசாரித்து வருகிறது. உக்ரைன், உகாண்டா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, கென்யா, வெனிசுலா, மியான்மார், பிலிப்பைன்ஸ் உட்பட 17 விவகாரங்களை இப்போது ஐசிசி விசாரித்து வருகிறது. இதுவரை சர்வதேச நீதிமன்றம் 31 வழக்குகளை விசாரித்துள்ள நிலையில், 30+ பிடிவாரண்ட்களை ஐசிசி நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர். அதில் 21 பேர் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

 தண்டனை

தண்டனை

இருப்பினும், 14 பேர் இன்னும் விசாரணைக்குக் கூட ஆஜராகவில்லை.. குற்றஞ்சாட்டப்பட்டோரில் 5 பேர் மரணமடைந்ததால், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டுள்ளன. மேலும், இதுவரை சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள் 10 பேருக்குத் தண்டனையும், 4 பேர் விடுதலையும் செய்துள்ளனர். காங்கோ, மாலி மற்றும் உகாண்டா நாடுகளைச் சேர்ந்த 5 பேரைப் போர்க் குற்றங்கள் மற்றும் மனிதக் குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக ஐசிசி குற்றவாளிகளாக அறிவித்துள்ளது. அவர்களுக்கு 9 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐசிசியால் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை விதிக்க முடியும்.

 உக்ரைன் விவகாரம்

உக்ரைன் விவகாரம்

முன்னாள் ஐவோரிய கோஸ்ட் அதிபர் லாரன்ட் கபாக்போ தான் ஐசிசி முன் ஆஜரான முதல் முன்னாள் டாப் தலைவர் ஆவார். அவர் மீது மூன்று ஆண்டு விசாரணை நடந்த நிலையில், 2019இல் அவர் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார். உக்ரைன் மீதான விசாரணை 2022, மார்ச் 2ஆம் தேதி தொடங்கப்பட்டது. 2013ஆம் ஆண்டு முதல் உக்ரைனில் நடந்த போர்க் குற்றங்களைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்கிறது.

 யார் உறுப்பினர்கள் இல்லை

யார் உறுப்பினர்கள் இல்லை

ஐநா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான நாடுகள் இந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஆதரிக்கிறது. இருப்பினும், அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் இதில் உறுப்பினர்களாக இல்லை. அரசியல் ரீதியாக வழக்கு தொடரப்படலாம் என்பதே இதை அவர்கள் புறக்கணிக்கச் சொன்ன காரணமாக இருக்கிறது. அதேபோல இந்தியாவும் கூட இதில் உறுப்பு நாடாக இல்லை. இந்த நீதிமன்றத்தில் மொத்தம் 15 நீதிபதிகள் உள்ளனர். இந்த நீதிபதிகள் ஐநா பொதுச் சபை மற்றும் பாதுகாப்புச் சபையால் ஒன்பது வருடப் பதவிக் காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

 நீதிபதி நியமனம்

நீதிபதி நியமனம்

முழு பெரும்பான்மையைப் பெறுபவர்கள் மட்டுமே நீதிபதியாக நியமிக்கப்படுவார்கள். இதனால் சில நேரங்களில் பல சுற்றுகளில் வாக்குப்பதிவு நடத்த வேண்டிய சூழல் ஏற்படும். மேலும், நீதிமன்றம் தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்யும் வகையில், நீதிமன்றத்தின் மூன்றில் ஒரு பங்கு நீதிபதிகள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு செய்யப்படுவார்கள். ஒரு நீதிபதி தனது பதவிக் காலத்தில் இறந்தாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ, காலியிடத்தை நிரப்ப உடனடியாக சிறப்புத் தேர்தல் நடத்தப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+