எதிர்க்கட்சி தலைவராகும் ராகுல் காந்தி? வந்து விழுந்த கேள்வி.. சோனியா காந்தி தந்த பதில்! ஆஹா ட்விஸ்ட்
டெல்லி: எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகும் நிலையில், இது தொடர்பாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்கிறது. மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்க உள்ளார்.

அதேநேரம் இந்தியா கூட்டணி 232 சீட்களில் வென்றது. குறிப்பாகக் காங்கிரஸ் கட்சி மட்டும் 99 இடங்களில் வென்றுள்ளது. கடந்த 2009க்கு பிறகு காங்கிரஸ் இத்தனை இடங்களில் வெல்வது இதுவே முதல்முறையாகும்.
எதிர்க்கட்சி தலைவர்: இதற்கிடையே எதிர்க்கட்சி தலைவராக யார் என்பதில் சஸ்பென்ஸ் நிலவி வருகிறது. ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராகத் தலைவராகத் தேர்வு செய்யப்படலாம் என தகவல் வெளியான நிலையில், அவர் தயக்கம் தெரிவிப்பதாகக் கூறப்பட்டது. இதையடுத்து கார்கே எதிர்க்கட்சி தலைவராகத் தேர்வு செய்யப்படலாம் எனக் கூறப்பட்டது. இருப்பினும், இதில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.. அதேநேரம் எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட வேண்டும் என்று காங்கிரஸ் காரிய கமிட்டியில் ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எந்தக் கட்சிக்கு 10% இடங்களில் வெல்கிறதோ.. அதாவது 54 எம்பி இடங்களில் வெல்கிறதோ அந்தக் கட்சிக்கே அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும். கடந்த 2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் எந்தக் கட்சிக்கும் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்காத நிலையில், இந்த முறை 99 இடங்களில் வென்று காங்கிரஸ் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.
ராகுல் காந்தி: காங்கிரஸ் காரியக் கமிட்டியில் ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக இருக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இது குறித்து விரைவில் முடிவெடுப்பதாக ராகுல் காந்தி கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.
இன்று மாலை இன்று நடந்த காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற தலைவராகச் சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார். உடல்நிலை காரணமாக இந்த முறை சோனியா காந்தி லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை.. அவர் ராஜ்யசபாவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சோனியா காந்தி: இதற்கிடையே இன்று டெல்லியில் பேசிய சோனியா காந்தி, "இந்தத் தேர்தலில் மோடி தன்னுடைய பெயரை மட்டுமே முன்வைத்து மக்களிடம் வாக்கு கேட்டார். அரசியல் ரீதியாகவும் சரி, தார்மீக ரீதியாகவும் சரி மோடி இந்தத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளார். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் ஆட்சி அமைப்பதற்கான உரிமையை மோடி இழந்துவிட்டார். ஆனால், தோல்விக்கான பொறுப்பைத் துளியும் ஏற்காமல் மோடி நாளை பிரதமராகப் பதவியேற்கிறார்" என்றார்.
சூசகம்: ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராகப் பதவியேற்பாரா என்ற கேள்விக்குச் சோனியா காந்தி நேரடியாகப் பதிலளிக்கவில்லை. இது குறித்து ராகுல் காந்தியிடம் தான் கேட்க வேண்டும் என மட்டும் கூறினார்.
அதேநேரம் ராகுலைப் பாராட்டிய சோனியா காந்தி, "தனிப்பட்ட முறையில் அரசியல் தாக்குதல்களை எதிர்கொண்டு போராடுவதற்கான உறுதியைப் பெற்ற ராகுல் காந்திக்கு எனது சிறப்பு நன்றிகள்.. கட்சியின் வாக்குறுதிகள் அவர் மிகச் சிறப்பாக வடிவமைத்து அதை மக்களிடம் எடுத்துச் செல்வதிலும் அவர் வெற்றி பெற்று இருக்கிறார்" என்று அவர் தெரிவித்தார்.
-
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
Congress: விடாப்பிடியாக வாங்கிய காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் போட்டியிடும் 28 தொகுதிகள் எவை? லிஸ்ட் வெளியானது -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
காங்கிரஸ் கை வசம் வந்த ஈரோடு கிழக்கு! ஈவிகேஎஸ் இளங்கோவன் பேத்தி சமன்னா போட்டியா? -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள்












Click it and Unblock the Notifications